Published:Updated:

``சூழல் வரும்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜக-வுடன் இணைவார்!" - சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

நிதிஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர்

``ராஜ்ய சபா துணைத் தலைவரான ஹரிவன்ஷ் ஜி மூலம் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார். அதற்கான சூழல் வரும்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜக-வுடன் இணைவார்.” - பிரசாந்த் கிஷோர்

``சூழல் வரும்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜக-வுடன் இணைவார்!" - சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

``ராஜ்ய சபா துணைத் தலைவரான ஹரிவன்ஷ் ஜி மூலம் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார். அதற்கான சூழல் வரும்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜக-வுடன் இணைவார்.” - பிரசாந்த் கிஷோர்

Published:Updated:
நிதிஷ் குமாருடன் பிரசாந்த் கிஷோர்

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வுடனான உறவைத் துண்டித்துக்கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து புதிய அரசு அமைத்தார். நிதிஷ் குமார், பா.ஜ.க-வுடன் கூட்டணி சேருவதற்கு முன்பு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருந்தார். அந்தக் கூட்டணிக்கு முடிவு கட்டிவிட்டுத்தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தார். ஆனால், தற்போது மீண்டும் பா.ஜ.க-வைக் கைகழுவிவிட்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, `பதவிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நிதிஷ் குமார் கூட்டணி மாறுவார்' என்று அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியிருந்தார்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

அதற்கு பதிலளிக்கும்விதமாக நிதிஷ் குமார்,``தற்போதைய பா.ஜ.க தலைமை ஆணவத்துடன் இருக்கிறது. தற்போது இருக்கும் தலைவர்கள் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. யாருக்கும் மரியாதையும் கொடுப்பதில்லை. அதனால் நான் உயிரோடு இருக்கும் வரை மீண்டும் அவர்களிடம் செல்ல மாட்டேன்” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், `நிதிஷ் குமார் பா.ஜ.க-வுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறார்’ என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்
உயிரோடு இருக்கும்

இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர், ``நிதிஷ் குமார், பா.ஜ.க-வுக்கு எதிராக தேசியக் கூட்டணியை தீவிரமாக உருவாக்கிவருகிறார் என மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் பா.ஜ.க-வுடன் தொடர்புகொள்ள ஒரு வழியைத் திறந்துவைத்திருப்பதை மக்கள் அறிந்தால் ஆச்சர்யப்படுவார்கள். அவர், தனது கட்சி எம்.பி மற்றும் ராஜ்ய சபா துணைத் தலைவரான ஹரிவன்ஷ் ஜி மூலம் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார். அதற்கான சூழல் வரும்போது நிதிஷ் குமார் மீண்டும் பா.ஜ.க-வுடன் இணைவார்” என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.