Election bannerElection banner
Published:Updated:

மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் ஓடிடி தளங்கள், டிஜிட்டல் மீடியாக்கள்..!

 ஓடிடி
ஓடிடி

ஓடிடி தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்த ஓடிடி., இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது.

இணையத்தில் வரும் செய்தித்தளங்கள், அமேஸான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ், ஹாட்ஸ்டார், போன்ற ஓடிடி( OTT) தளங்களும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செல்கின்றன.

இதற்கான ஒப்புதலில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டிருக்கிறார். இதுவரை இணையத்தில் வரும் செய்திகளைக் கட்டுப்படுத்த, சட்டம் இல்லாமலிருந்தது. அச்சு ஊடகங்களை கண்காணிக்க பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, தொலைக்காட்சியில் வரும் செய்திகளுக்கு என்.பி.ஏ., சினிமாவுக்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் குழு என்று இவை அனைத்தும் கண்காணிப்பில் இருக்கின்றன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

சென்ற மாதம் உச்ச நீதிமன்றம் ஓடிடி தளங்களைக் கண்காணிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசிடமும், தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை, இந்திய இணைய மற்றும் செல்லிடப்பேசி கூட்டமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

தற்போது இணையச் செய்தித் தளங்கள், ஓடிடி தளங்கள், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. இதனால் இந்தத் தளங்கள் தாங்கள் ஒளிபரப்ப விரும்புவதை ஒப்புதல் பெற்ற பின்பே ஒளிபரப்ப வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஓடிடி தளத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருந்த ஓடிடி, இப்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இதனால் இனி இணையத் தொடர்கள் சென்சார் செய்யப்படவோ, அதில் சொல்லப்படும் தகவல்கள் தவறாக இருக்கும்பட்சத்தில் நீக்கப்படவோ அரசு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. எந்த மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது விரைவில் தெரியவரும்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

சென்ற ஆண்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், `ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. அச்சு மற்றும் மின்னணு ஊடகம் சினிமா ஆகியவை கண்காணிக்கப்படுவதுபோல ஓடிடி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் ஏற்படும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு