Published:Updated:

'துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்' - இந்தப் பதத்தை அமித் ஷா நீக்கியதன் பின்னால்..?

இது அப்பட்டமாக நமது அரசியல் சட்ட அடிப்படையை மீறுகிறது. மத அடிப்படையில் இவ்வாறு தரம் பிரித்துச் சலுகைகள் அளிப்பதை, நமது அரசியல் சட்டப் பிரிவுகள் ஏற்பதில்லை

இங்கு குடியுரிமை
இங்கு குடியுரிமை

மோடி - அமித் ஷா தலைமையிலான பா.ஜ.க அரசு, அதன் 'பிரியமான' திட்டங்களில் ஒன்றான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது எனில், தோற்றுப்போனது எது?

வேறு எதுவுமல்ல, நமது அரசியல் சட்டம்தான். ரத்தம் ஒழுக ஒழுக அடித்து வீழ்த்தப்படும் நிலையை எட்டியிருக்கிறது அரசியல் சட்டம். விரிவாக படிக்க க்ளிக் செய்க.... http://bit.ly/2PnFGK5

2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறாவிடாலும், அதிக தொகுதிகளில் வென்றது. அப்போதைய தேர்தல் அறிக்கையில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களுக்கு இங்கு குடியுரிமை வழங்குவது பற்றி கூறப்பட்டது. இந்தியா, பல மதத்தினரும் வசிக்கும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவது சாத்தியமல்ல. எனினும், இப்படி ஒரு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை அளிப்பது என்னும் கருத்தை யூத இனவாத அரசான இஸ்ரேலில் இருந்து பா.ஜ.க எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் எந்த நாட்டிலிருந்தும் வரும் யூதர்களுக்கு இஸ்ரேலில் குடியுரிமை அளிக்க வழிவகை செய்வதுதான் 'அலியாஹ்' எனும் சட்டம். அதேபோன்று உலகின் எந்த நாட்டிலிருந்து வரும் இந்துக்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் பா.ஜ.க தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதைத்தான் இப்போது தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தமாகச் செய்திருக்கிறது. ஆனால், இந்திய அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை.

அத்துடன், பிரபலமான கேசவானந்த பாரதி வழக்கில் அரசியல் சட்ட அடிப்படைகளை பெரும்பான்மையின் அடிப்படையில் மாற்றிவிட இயலாது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. அதனால், இன்று கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் பா.ஜ.க அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தபோதும், பெரும்பான்மை மத அடிப்படையில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க முடியவில்லை. அதனால், அவர்கள் இப்படி தம் அரசியல் கொள்கைகளை நசுக்கி நசுக்கி கொஞ்சம் கொஞ்சமாகச் செயல்படுத்திவருகின்றனர்.

'துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்' - இந்தப் பதத்தை அமித் ஷா நீக்கியதன் பின்னால்..?

2014-ம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சி அமைக்கப்பட்டபோது அஸ்ஸாம் மாநிலத்தில் 'குடியுரிமைப் பதிவேடு' தயாரிக்கும் திட்டத்தை அவர்கள் தொடங்கினர். இன்று அஸ்ஸாமில் குடியுரிமை அற்றவர்களாக 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதிலும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்துக்களாக உள்ளது பா.ஜ.க அரசின் நோக்கத்துக்கு இடையூறாக உள்ளது. அஸ்ஸாமில் இப்படி குடியுரிமை அற்றவர்களாக ஆக்கப்பட்டவர்களை என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. மிகப்பெரிய தடுப்புக்காவல் முகாம்களை அமைத்து அடைத்துவைக்கப்போகிறார்களா? அப்படியான முகாம்கள் அமைக்கப்படுவதாகவும் செய்திகள் வரத்தான் செய்கின்றன.

இதற்கெல்லாம் பதில் இல்லாமலேயே இப்போது இந்திய அளவில் குடியுரிமைப் பதிவேடு உருவாக்கப்படும் என அறிவித்திருப்ப துடன், முதற்கட்டமாக 'குடியுரிமை திருத்த மசோதா' அறிவிக்கப்பட்டு, மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.முக உள்ளிட்ட பா.ஜ.க ஆதரவுக் கட்சிகளின் துணையுடன் இது நடந்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், தி.மு.க முதலான கட்சிகள் எதிர்த்துள்ளன. இந்தச் சட்டம், குடியுரிமை அற்றவர்கள் விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி 2014, டிசம்பர் 31 என்கிறது. அதற்கு முன்னதாக வந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் இங்கே வாழ்ந்திருக்க வேண்டும் எனும் நிபந்தனை, இதன்மூலம் ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க அரசின் இந்தப் புதிய குடியுரிமைச் சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எனும் மூன்று முஸ்லிம் நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே இந்த உரிமையை அளிக்கிறது. அத்துடன் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நுழைவதற்கான 1920-ம் ஆண்டு 'கடவுச்சீட்டுச் சட்டம்' (Passport Act) மற்றும் 1946-ம் ஆண்டு 'வெளிநாட்டவர் சட்டம்' (Foreigners Act) ஆகியவற்றிலிருந்து இந்த ஆறு மதத்தவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை. வேறு சொற்களில் சொல்வதானால், இந்த நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுகிறது. இது அப்பட்டமாக நமது அரசியல் சட்ட அடிப்படையை மீறுகிறது. மத அடிப்படையில் இவ்வாறு தரம் பிரித்துச் சலுகைகள் அளிப்பதை, நமது அரசியல் சட்டப் பிரிவுகள் ஏற்பதில்லை. நமது அரசியல் சட்ட அடிப்படைக்கு எதிராக இன்றைய இந்தச் சட்டம் அமைகிறது. மதச்சார்பின்மையைப் புறக்கணிக்கிறது.

'துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்' - இந்தப் பதத்தை அமித் ஷா நீக்கியதன் பின்னால்..?

முன்னதாக மோடி அரசு இந்தச் சட்டத்தை வெளியிட்டபோது, அதில் இந்த நாடுகளில் உள்ள இந்த ஆறு மதத்தினர்களில் உள்ள, துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு மட்டுமே இந்தச் சலுகைகள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அமித் ஷா முன்வைத்து நிறைவேற்றியுள்ள வடிவில் 'துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்' எனும் பதம் நீக்கப்பட்டுள்ளது. காரணங்கள் காட்டப்படவில்லை. இவ்வாறு துன்புறுத்தல் இல்லாதபோதும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை அளிக்கப்படும் என்பதுதான் அமித் ஷா சொல்லும் சேதி. இஸ்ரேலின் அலியாஹ் சட்ட வடிவம் இங்கே அப்படியே ஏற்கப்பட்டுள்ளது. ஆக, மத அடிப்படையில் இன்று 15 கோடிக்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம்கள் மட்டும் இன்று இந்திய மக்களிடையே தனியே பிரித்து நிறுத்தப்படுகின்றனர்.

இன்றைய அரசமைப்பில் `குடியுரிமை' என்பது உயிரினும் மேலானது... அது இன்று ஆபத்துக்குள்ளாகியுள்ளது. ஏனெனில்... - எழுத்தாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ் எழுதிய சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > குடியுரிமைத் திருத்தம்... ஜனநாயகத்தின் மாபெரும் களங்கம்! https://www.vikatan.com/government-and-politics/policies/human-rights-activist-a-marx-talks-about-citizenship-amendment-bill

"அமித் ஷா சொல்வது பொய்!"

உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் கொண்டுவந்தபோது ''காங்கிரஸ் கட்சி நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால், இந்தச் சட்டத்தை தற்போது கொண்டுவர வேண்டிய அவசியமே இருந்திருக்காது'' என்று பேசினார். இது, பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது. அமித் ஷா சொன்னதில் உண்மை இருக்கிறதா?

'துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்' - இந்தப் பதத்தை அமித் ஷா நீக்கியதன் பின்னால்..?

பா.ஜ.க மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் வலதுகரமாகச் செயல்பட்டவர் சுதீந்திர குல்கர்னி. அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் தனது ட்விட்டரில், 'இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஒன்றுபட்ட இந்தியாவைப் பிரித்தது, முஸ்லிம் லீக் கட்சிதான். இந்தியாவை, அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற நாடாக உருவாக்கவே காங்கிரஸ் முயற்சி எடுத்தது. இது வரலாறு. இது தெரியாமல் நாடாளுமன்ற வரலாற்றில் மூத்த அமைச்சர் ஒருவர் கறுப்புச் சட்டத்தைக் கொண்டுவர பச்சைப்பொய்யைக் கூறியுள்ளார்" என்று பாய்ந்துள்ளார்.

வரலாற்று எழுத்தாளரான இர்பான் ஹபீப், 'வரலாற்று உண்மைகளைப் படிக்காமலும், நடந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளாமலும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பொய்யைப் பதிவு செய்துள்ளார்' என, ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார். - விரிவான செய்திக் கட்டுரைக்கு > "அமித் ஷா சொல்வது பொய்!" - வரலாறு சொல்லும் உண்மை என்ன? https://www.vikatan.com/government-and-politics/policies/amit-shah-statement-is-wrong-about-citizenship-amendment-bill

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |