Published:Updated:

``பெட்ரோல், டீசல் விலை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவுதான்!"- மத்திய அமைச்சர்

பெட்ரோலியத்துறை ஹர்தீப் சிங் பூரி

பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ``மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 5% மட்டுமே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இந்தியாவில் கடந்த 16 நாள்களில் 14-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டேயிருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.95-க்கு இன்று விற்கப்படுகிறது. இது நேற்றைய தினத்தைவிடவும் 84 காசுகள் அதிகம். இதனால் பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மேலும், இது விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட பெட்ரோலிய ஒப்பந்தம்தான் இத்தகைய விலையேற்றத்துக்குக் காரணம் என்று மத்திய அரசு காரணம் கூறிவருகிறது.

16 நாள்களில் 14-வது முறையாக பெட்ரோல் உயர்வு
16 நாள்களில் 14-வது முறையாக பெட்ரோல் உயர்வு
ட்விட்டர்

இருப்பினும், ஐந்து மாநிலத் தேர்தலின்போது உயர்த்தப்படாத பெட்ரோல் விலை, இப்போது மட்டும் எப்படி உயர்த்தப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்த கேள்விகளுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் நேற்று பதிலளித்தார்.

அப்போது பேசிய ஹர்தீப் சிங் பூரி, ``ரஷ்யா - உக்ரைன் இடையே நிகழும் போரினால் பாதிக்கப்பட்டது இந்தியா மட்டுமல்ல. இந்தப் போரானது முழு உலகத்தையும் பாதித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாடாளுமன்றத்தில்  பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

இந்தப் போரின் விளைவால் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெட்ரோல் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் 50% மேல் பெட்ரோல் விலை உயர்ந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் வெறும் 5% மட்டுமே பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 10-ல் 1 பங்குதான் எங்களின் விலையேற்றம் உள்ளது" எனக் கூறினார்.