Published:Updated:

“மோடியின் முயற்சியால்தான் தேர்தல் விரைவாக அறிவிக்கப்பட்டுள்ளது!”

ஏ.சி.சண்முகம்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.சி.சண்முகம்

சொல்கிறார் ஏ.சி.சண்முகம்

“மோடியின் முயற்சியால்தான் தேர்தல் விரைவாக அறிவிக்கப்பட்டுள்ளது!”

சொல்கிறார் ஏ.சி.சண்முகம்

Published:Updated:
ஏ.சி.சண்முகம்
பிரீமியம் ஸ்டோரி
ஏ.சி.சண்முகம்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். பரபரக்கும் தேர்தல் களத்துக்கு நடுவில் ஏ.சி.சண்முகத்தைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘வேலூர் தேர்தல் விரைவாக நடத்தப்படுவதற்கான காரணம் என்ன?’’

‘‘பொதுத்தேர்தலின்போதே இந்தத் தொகுதிக்கும் தேர்தல் நடத்தியிருந்தால், நான் நிச்சயமாக வெற்றி பெற்றிருப் பேன். தேர்தல் ரத்துக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினேன். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கைக் கொண்டு சென்றேன். நாள் முழுவதும் விவாதித்தோம். தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாதென்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. அடுத்ததாகத் தேர்தல் ஆணையத்திடம் சென்றேன். மூவர் குழு என்னிடம், ‘தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்திடம் பல கோடி ரூபாய் பிடிபட்டிருக் கிறது. தேர்தல் ரத்துக்கு தி.மு.க-தான் காரணம்’ என்றார்கள். பிரதமரிடம் முறையிட்டேன். மோடியின் முயற்சியால்தான் தேர்தல் விரைவாக அறிவிக்கப் பட்டுள்ளது. தேர்தலை நடத்த தி.மு.க தரப்பில் எதையுமே செய்யவில்லை.’’

“மோடியின் முயற்சியால்தான்
தேர்தல் விரைவாக அறிவிக்கப்பட்டுள்ளது!”

‘‘உங்களுக்குப் போட்டியாக மீண்டும் கதிர் ஆனந்தையே தி.மு.க நிறுத்தியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘ஆச்சர்யமாக இருக்கிறது. இந்தக் கேள்வியை ஏராள மானோர் கேட்டுவிட்டனர். குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த வேட்பாளர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ‘கதிர் ஆனந்தை மீண்டும் ஏன் நிறுத்துகிறார்கள்’ என்று தி.மு.க-வினரே கேள்வி எழுப்புகிறார்கள். வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வேலூரைச் சேர்ந்தவர்கள் கடந்த முறை ஓட்டுப்போடுவதற்காகச் சொந்த ஊர் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதற்குக் காரணமான கதிர் ஆனந்த் மீது மக்கள் கோபமாக இருக்கிறார்கள்.’’

‘‘தமிழகம் முழுக்க இரட்டை இலை சின்னத்தில் ஒரு தொகுதி மட்டும்தான் வெற்றிபெற முடிந்தது. இதனால் நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதைப் பி.ஜே.பி-யினர் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறதே?’’

‘‘இத்தனை நாள்கள் அல்லும் பகலுமாக இரட்டை இலை சின்னத்தில் பிரசாரம் செய்திருக்கிறேன். இனி திடீரென தாமரைச் சின்னத்துக்கு மாறினால் சரியாக இருக்காது. மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுவிடும். எனவே, இந்தக் கேள்விக்கே நான் இடமளிக்க மாட்டேன்.’’

‘‘பி.ஜே.பி, அ.தி.மு.க கூட்டணியில் தேர்தலைச் சந்திக்கிறீர்கள். உங்கள் பார்வையில் தமிழகம் பெரியார் மண்ணா... ஆன்மிக பூமியா...?’’

‘‘இரண்டும் கலந்த பூமி தமிழகம். தி.மு.க குடும்பத்தில் இருக்கிற பெண்கள், சகோதரிகள் அனைவரும் கோயிலுக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கிறார்கள். அதே நேரத்தில், மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து விலகுவதில் பெரியார் கொள்கையை உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஆன்மிகத்திலும் நாட்டமாக இருக்கிறார்கள்.’’

‘‘அ.ம.மு.க சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வில்லை. உங்கள் வெற்றிக்கு இருந்த தடை விலகிவிட்டதாக நினைக்கிறீர்களா?’’

‘‘டி.டி.வி.தினகரன் வேட்பாளரை அறிவிக் காதது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியாக இருக் கிறது. அ.ம.மு.க தொண்டர்கள், நிர்வாகிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நீங்கள் வளர்த்த அண்ணா தி.மு.க, இந்தத் தேர்தலில் சோதனையைச் சந்தித்திருக்கிறது. தாய்க் கழகத்துக்குப் பணியாற்றத் திரும்பி வாருங்கள். சிந்தாமல் சிதறாமல் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.’’

‘‘ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி கொடுக்கிறீர்கள். வேலை வாய்ப்பு, மருத்துவ முகாம் நடத்துகிறீர்கள். இதெல்லாம் வாக்கு அரசியலுக் காகவா?’’

‘‘சென்னையில் மூன்று அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறேன். என்னுடைய வேலூர் தொகுதிக்கு அப்பாற்பட்டு இலவச திருமண மண்டபம், மாணவர் விடுதி, முதியோர் இல்லம் எனப் பல சேவைகளைச் செய்து வருகிறேன். ‘தர்மம் தலை காக்கும்’ என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அவரின் வழியில் புண்ணிய காரியங்களைச் செய்கிறேன். இதெல்லாம் வாக்குகளுக்காக இல்லை. நான் வெற்றிபெற்றால் பல திட்டங் களைக் கொண்டுவருவதுடன் லட்சக் கணக்கான மரக்கன்றுகளை நட்டு வெயில் நகரமான வேலூரைக் குளிர்ந்த நகரமாக மாற்றுவேன். நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பி-க்களுக்கும் முன்மாதிரியாகச் செயல்படுவேன்.’’

‘‘தொகுதிக்குள் மீண்டும் பணப்புழக்கம் இருக்குமா?’’

‘‘அப்படியிருந்தால் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அவர்களே இறுதி எஜமானர்கள். குறை கூறுவதற்கென்றே ஓர் இயக்கம் இருக்கிறது என்றால், அது தி.மு.க மட்டும்தான். தி.மு.க வேட்பாளரின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். எனக்காகப் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய வருகிறார். வளமான இந்தியாவை உருவாக்கும் பலமான பிரதமர் எனக்காக வாக்கு சேகரித்தால், என்னுடைய வெற்றி உறுதியாகிவிடும். வேலூர் வெற்றி மூலம் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். இங்கு பி.ஜே.பி கால் பதிக்கும்.’’

‘‘ ‘கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில், நான் வெற்றிபெற்றால் மத்திய மந்திரி பதவி கிடைக் கும்’ என்று நீங்களே கடந்த முறை கூறியிருந்தீர்கள். அந்தக் கருத்தில் மாற்றம் இருக்கிறதா?’’

‘‘இந்தக் கேள்வியே வேண்டாம். நான் பதிலளிக்க விரும்பவில்லை. வெற்றிக்குப் பிறகு அதைப்பற்றி விவாதிக்கலாம்.’’