Published:Updated:

RTI அம்பலம்: கமிஷனுக்காக நகராத மருத்துவ மேம்பாட்டுப் பணிகள்!

RTI அம்பலம்
பிரீமியம் ஸ்டோரி
RTI அம்பலம்

கிடப்பில் ரூ.1,634 கோடி மதிப்பிலான திட்டங்கள்

RTI அம்பலம்: கமிஷனுக்காக நகராத மருத்துவ மேம்பாட்டுப் பணிகள்!

கிடப்பில் ரூ.1,634 கோடி மதிப்பிலான திட்டங்கள்

Published:Updated:
RTI அம்பலம்
பிரீமியம் ஸ்டோரி
RTI அம்பலம்
லட்சங்களில் கோரப்படும் டெண்டர் பணிகளை கைப்பற்றுவதற்கே இங்கு போட்டா போட்டி நடக்கிறது. இப்படியான சூழலில், ரூ.1,634 கோடி மதிப்பிலான நகர்ப்புற மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்காகப் போடப்பட்ட திட்டங்கள் கண்டுகொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டிருக் கின்றன. விகடன் ஆர்.டி.ஐ குழு இந்த `பகீர்’ தகவலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

“சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை இராசாசி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட நகர்ப்புற மருத்துவமனைகளில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்’’ என்று கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அதன் அடிப்படையில் 2016-2017-ம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையில், ‘தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார நலத்திட்டம் 1,633.69 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக ஜப்பான் நாட்டின் ‘ஜைக்கா’ (Japanese International Co-operation Agency) நிறுவனத்திடம் ரூ.1,633.69 கோடி கடனுதவி பெறுவதற்கான முயற்சிகள் மத்திய பொருளாதார விவகாரங்கள் துறையின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில், அந்த நிறுவனம் ரூ.1,387.87 கோடி நிதிப் பங்களிப்பு செய்ய ஒப்புக்கொண்டது. மீதமுள்ள 245.82 கோடி ரூபாயை மாநில அரசின் நிதிப் பங்களிப்புடன் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது என்று ஒப்பந்தம் போடப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜப்பான் நிறுவனத்திடமிருந்து பெறும் ரூ.1,387.87 கோடி கடன் தொகைக்கு ஆண்டுக்கு 0.30 சதவிகிதம் வட்டியுடன் 40 வருடங்கள் தவணைத் தொகை செலுத்த வேண்டும். அதாவது ஆண்டுக்கு நான்கு கோடியே 16 லட்சம் ரூபாய் வீதம், 40 வருடங்களுக்கு 166 கோடியே 40 லட்சம் ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு பத்து வருடங்கள் தளர்வு காலம் உண்டு. அதேசமயம், ‘2022-ம் ஆண்டுக்குள் அனைத்துத் திட்டங்களும் முடிக்கப்பட வேண்டும்’ எனவும் அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது.

RTI அம்பலம்
RTI அம்பலம்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், கடலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 10 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஏழு அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், நான்கு தாலுகா மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன. கடந்த 2017-ம் ஆண்டு, ஜூலை 28-ம் தேதி, தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்தார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், “வெறும் 448 கோடி ரூபாய் பணிகளுக்கான திட்டங்கள் மட்டுமே வகுக்கப்பட்டிருக் கின்றன. ஏழு கட்டடங்கள் கட்டுவதற்கும், 14 மருத்துவ மனைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது” என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விகடன் ஆர்.டி.ஐ குழு பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல... அதற்கான பணிகளும்கூட இன்னும் தொடங்கப்படவில்லை என்பது நாம் மேற்கொண்ட கள ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக துறைசார்ந்த சிலரிடம் பேசினோம். “மாநில அரசின் நேரடி ஒப்பந்தப் பணிகளை எடுக்கக் கடும் போட்டி நிலவும். ஆனால், இதுபோன்ற திட்டப் பணிகளில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், இந்த திட்டப் பணிகளை கவனிக்க ஜப்பான் நிறுவனத்தின் சார்பில் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். கட்டுமானப் பணிகள் தொடங்கி மருத்துவ உபகர ணங்கள் வாங்குவதுவரை அவர்களின் கண்டிப்பான மேற்பார்வையில்தான் நடக்கும். மாநில அரசின் இதர ஒப்பந்தங்களைப்போல கமிஷன் அடித்து, கல்லாகட்ட முடியாது. இதனால், அதிகாரிகளுக்கும் கமிஷன் கிடைக்காது. எனவே, மேற்கண்ட திட்டப் பணிகளைக் குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகளும் ஆர்வம் காட்டுவதில்லை; பணிகளைச் செய்ய ஒப்பந்ததாரர்களும் அவ்வளவு சீக்கிரம் முன்வருவதில்லை. அதனாலேயே மிக முக்கியமான இந்தத் திட்டம் முடங்கிக்கிடக்கிறது” என்றார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார நலத்திட்டத்தின்கீழ் மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் 350 கோடி ரூபாய் செலவில் 16 ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு எம்.ஆர்.ஐ கருவி, ஒரு சி.டி ஸ்கேன் கருவி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இந்த மருத்துவமனை சர்வதேசத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படவுள்ளது’’ என்று மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லியிருந்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அதற்கான முதல் அடியைக்கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை. அங்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு 121 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பழைய கட்டடத்தை இடிப்பதற்கு 23 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள தாகவும் ஆர்.டி.ஐ தகவலில் கூறப்பட்டுள்ளது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

ஆனால், கட்டடம் இடிக்கும் பணியே இன்னும் முடிக்கப்பட வில்லை. சென்னை கீழ்ப்பாக்கம், கோவை உள்ளிட்ட பிற அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலைதான். இடம் வாங்குவதில் இழுபறி, கட்டடம் கட்டுவதில் கருத்து வேறுபாடு என வேலைகள் ஸ்தம்பித்து நிற்கின்றன.

இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சாந்தியிடம் பேசினோம். “இந்த திட்டப் பணிகளை வேகமாகச் செயல்படுத்தாமல் இருப்பதில் கண்டிப்பாக ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும். கமிஷன் கிடைக்காததால்தான் பணிகள் நடக்கவில்லை என்று தகவல்கள் வருகின்றன. எனவே, இது குறித்து அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும். இந்தப் பணிகளை முறையாகச் செய்து முடித்திருந்தால், இந்த கொரோனா பேரிடரை எதிர்கொள்ளப் பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கும். அதைச் செய்யாமல் காலம் தாழ்த்தியது மக்களுக்குச் செய்த துரோகம்’’ என்றார்.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். “சுகாதாரத்துறைச் செயலாளராக நான் பதவியேற்று சில நாள்கள்தான் ஆகின்றன. அதற்குள் இது குறித்து பதில் சொல்ல முடியாது’’ என்றவரிடம், “ஆனால், திட்டம் தொடங்கப்பட்டபோது நீங்கள்தானே சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்தீர்கள்?” என்று கேட்டோம். “ஆமாம், திட்டம் தொடங்கப்பட்ட குறுகியகாலத்தில் நான் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டேன். இருப்பினும் பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்கிறேன்” என்றார்.

தமிழக சுகாதாரத்துறையின் திட்ட இயக்குநர் அஜய் யாதவைத் தொடர்புகொண்டோம். அவரும், “நான் பதவியேற்று இரண்டு வாரங்கள்தான் ஆகின்றன. என்னவென்று பார்த்து பணிகளைத் துரிதப்படுத்துகிறேன்” என்றார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பலமுறை அழைத்தும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. தொடர்ந்து இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவரது அதிகாரபூர்வமான மின்னஞ்சல் முகவரியான mlaviralimalai@tn.gov.in-க்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறோம். விளக்கம் அளிக்கும்பட்சத்தில் பிரசுரிக்கிறோம்.

இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்
இன்ஃபோகிராபிக்ஸ்

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “ஆரம்பத்தில், ஒரு வருட காலம் வேலைகள் தாமதமாக நடந்தது உண்மைதான். வரும் டிசம்பரிலிருந்து வேலைகள் விரைவாகத் தொடங்கப்பட்டு, மார்ச் 2023-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டுவிடும்’’ என்றார்.

கடன் வாங்கவே தேவையில்லை!

கடந்த 2009 முதல் 2019 வரையிலான பத்து ஆண்டுகளில் மருத்துவக் காப்பீடு பிரீமியத்துக்காக இதுவரை தமிழக அரசு செலவிட்ட மொத்த நிதி ரூ.6,500 கோடிகளுக்கு மேல். இதில் ரூ.4,200 கோடிகளுக்கு மேல் தனியார் மருத்துவமனைகள் மூலமாகச் செலவிடப்பட்டுள்ளது. நேரடியாக அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதில் இந்தத் தொகையைச் செலவிட்டிருந்தால், இன்று ஜப்பான் நிறுவனம் உட்பட யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism