Published:Updated:

`தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு!' - மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின் கடிதம்

``தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்த, தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும்.’’ - ஸ்டாலின்.

`தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு!' - மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

``தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டங்கள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் விரைவுபடுத்த, தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை வழங்கும்.’’ - ஸ்டாலின்.

Published:Updated:
மு.க.ஸ்டாலின் கடிதம்

``தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களைச் செயல்படுத்துவதில் பிரச்னைகளைச் சந்திக்கிறோம். அதனால் பல பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் இந்தத் திட்டங்களை ஆய்வு செய்து, ஒத்துழைக்க வேண்டும்" என்று அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். தமிழக அரசின்மீது மத்திய நெடுஞ்சாலைத்துறை இத்தகைய குற்றச்சாட்டை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாகக் கூறியிருக்கிறது. எனவே, இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் கருத்துகளுக்குப் பின்னர் முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``2022-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கான 'பிசினஸ் லைன் கவுன்ட்டௌன்' நிகழ்ச்சியில் தாங்கள் சிறப்புரை ஆற்றியபோது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, நீங்கள் தெரிவித்த கருத்துகளை ஊடகங்களின் வாயிலாக நான் அறிந்தேன்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

பல்வேறு பிரச்னைகளை நீங்கள் எதிர் எடுத்துரைத்து, அவற்றைச் சமாளிப்பதில் மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை எனக் கூறியிருந்தீர்கள். முந்தைய ஒரு சந்தர்ப்பத்திலும் இது போன்ற பிரச்னைகளைவ் சுட்டிக்காட்டி நீங்கள் எனக்குக் கடிதம் எழுதினீர்கள். அப்போது நாங்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நான் விரிவாக பதில் அளித்திருந்தேன்.

எங்களைப் போன்ற தொழில்மயமான மாநிலத்துக்குச் சாலை இணைப்பின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கிறோம். திட்டங்களைச் செயல்படுத்துவதில் தற்போதுள்ள பிரச்னைகள் பல ஆண்டுகளாக இருந்துவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய நெடுஞ்சாலைப் பணி
தேசிய நெடுஞ்சாலைப் பணி
சித்தரிப்புப் படம்

பிரச்னைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றைத் தீர்க்க தலைமைச் செயலாளரின் கீழ் உள்ள அதிகாரிகள் குழு உரிய முயற்சிகளை எடுத்துவருகிறது" என முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism