Published:Updated:

ரயில்வே தனியார்மயம்: வருகின்றன `ஸ்டெர்லைட்’, `ஜி.எம்.ஆர்' உட்பட 151 எக்ஸ்பிரஸ் ரயில்கள்!

ரயில்
News
ரயில்

ரயில்வே தனியார்மய நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஸ்டெர்லைட், ஜி.எம்.ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கு முன்வந்துள்ளன.

இந்தியாவில் மிக முக்கியமான பொதுப் போக்குவரத்தாக விளங்கிவரும் ரயில்வே மிகப்பெரிய பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தில் மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றிவருகிறது. இந்தியாவில் தினந்தோறும் சுமார் 2.5 கோடிப் பேர் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். உலகில் 4-வது மிகப்பெரிய அரசுத்துறையாக விளங்கிவரும் இந்திய ரயில்வேயில், சுமார் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றிவருகிறார்கள். இந்த நிலையில், ரயில்வே துறையைத் தனியாரிடம் கொடுத்துவிட வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் விருப்பமாக இருக்கிறது. இதற்கு, ரயில்வே ஊழியர்களும் இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

ரயில்
ரயில்

மேலும், ரயில்வேயில் முதலீடு செய்வதற்குத் தனியார் நிறுவனங்களும் ஆர்வம் காட்டாமல் இருந்தன. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, ரயில்வேயைத் தனியாருக்கு கொடுப்பதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. மோடி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ரயில்வேயைத் தனியார்மயம் ஆக்குவதற்காக,100 நாள் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தனியார்மய நடவடிக்கையை எளிதாக மேற்கொள்வதற்கு வசதியாக, `மையமான வேலைகள்’ (Core Activities), `மையமற்ற வேலைகள்’ (Non Core Activities) என ரயில்வே பணிகளை இரண்டாகப் பிரித்து, மையமற்ற வேலைகள் எதையும் ரயில்வே வைத்துக்கொள்ளக்கூடாது என்று பிபேப் தேப்ராய் கமிட்டி பரிந்துரை அளித்தது. மேலும், மையமற்ற வேலைகளை மூடிவிட வேண்டும் அல்லது அவற்றைத் தனியாரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று அந்த கமிட்டி யோசனை தெரிவித்தது. ரயில்வே பாதுகாப்புக்காகச் செயல்பட்டுவரும் `ரயில்வே பாதுகாப்புப் படை’ (ஆர்.பி.எஃப்) என்பதுகூட மையமற்ற வேலை என வகைப்படுத்தப்பட்டது. எனவே, ஆர்.பி.எஃப் கூட தனியாருக்குப் போய்விடும். பயணிகள் ரயில்களைத் தனியாரிடம் கொடுப்பது என்பது 100 நாள் செயல்திட்டத்தில் உள்ளது. முதற்கட்டமாக, சோதனை அடிப்படையில் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு இரண்டு ரயில்கள் கொடுக்கப்பட்டன.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

தற்போது 2023-ம் ஆண்டு முதல் தனியார் ரயில்கள் இயங்கத் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் தனியார் ரயில் ஓடும் என்று சொல்லப்படுகிறது. இந்தநிலையில், தனியார்மய நடவடிக்கை குறித்து கடந்த ஜூலை 21-ம் தேதி ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 16 நிறுவனங்கள் பங்கேற்றன. அப்போது, 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் ஓடும் அளவுக்கு தண்டவாளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் இந்திய ரயில்வேயில் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 160 கி.மீ வேகத்தில் ரயில்கள் ஓட வேண்டும் என்றால், தண்டவாளங்களின் இருபுறமும் பாதுகாப்புச் சுவர் எழுப்பப்பட வேண்டும். அப்போதுதான், கால்நடைகள் தண்டவாளங்களின் குறுக்கே வருவதையும், அதனால் ஏற்படக்கூடிய விபத்துகளையும் தவிர்க்க முடியும். இதுபோன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கான நிதி எதுவும் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரயில்வேயைத் தனியார்மயம் ஆக்குவதற்கு ரயில்வே தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. சென்னையில் உள்ள ஐ.சி.எஃப்-பில் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனாலும், தனியார்மய நடவடிக்கையில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. 2021-ம் ஆண்டு டெண்டர் உள்ளிட்ட நடைமுறைகள் இறுதிசெய்யப்படும் என்று, 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் தனியார் ரயில்கள் ஓட ஆரம்பிக்கும் என்றும் ரயில் அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்
ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம்

மொத்தம் 109 வழித்தடங்களில் 151 தனியார் ரயில்கள் ஒடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 13 வழித்தடங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தாம்பரத்திலிருந்து ஆறு தனியார் ரயில்கள் இயக்கப்படும். தாம்பரம் - கன்னியாகுமாரி, தாம்பரம் - மதுரை, தாம்பரம் - திருநெல்வேலி, தாம்பரம் - திருச்சி, தாம்பரம் – கோயம்புத்தூர் ஆகிய வழித்தடங்களிலும், கன்னியாகுமரி – எர்ணாகுளம், புதுச்சேரி – செகந்திராபாத், சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை சென்ட்ரல் – ஜோத்பூர் ஆகிய வழித்தடங்களிலும், சென்னை சென்ட்ரலிலிருந்து டெல்லி, மும்பை, ஹவுரா ஆகிய இடங்களுக்கும் தனியார் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

தனியார் ரயில்களில் நவீன ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என்றும், அவற்றை தனியாரே வாங்கிக்கொள்வார்கள் என்றும் செய்திகள் வந்துள்ளன. டிரைவர்கள் மற்றும் கார்டுகள் மட்டுமே ரயில்வே ஊழியர்களாக இருப்பார்கள். மற்ற அனைவரும் தனியார் நிறுவனத்தால் நியமிக்கப்படுவார்கள். தனியார் நிறுவனங்களுக்கு 35 ஆண்டுகளுக்கு ரயில்களை இயக்குவதற்கு உரிமம் வழங்கப்படும்.

தேஜஸ் எக்ஸ்பிரஸ்
தேஜஸ் எக்ஸ்பிரஸ்

தனியார் ரயிலை இயக்கும் நிறுவனங்கள், ரயில்வே துறைக்கு பயன்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டும். மின்சாரம் பயன்பாட்டுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். அதுபோக, வருமானத்திலிருந்து ஒரு பங்கை ரயில்வே துறைக்குத் தர வேண்டும். வருமானத்தில் அதிக பங்கு தருவதாக யார் ஒப்புக்கொள்கிறார்களோ அவர்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படும் என்று செய்திகள் வந்துள்ளன. ரயில் கட்டணங்களைத் தனியாரே தீர்மானிப்பார்கள். எனவே, தற்போது போல கட்டணம் இருக்காது. பல மடங்கு கட்டணம் உயருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.