Published:Updated:

``உடனடி நீதிக்கு, உச்ச நீதிமன்றத்தின் கட்டமைப்பையே மாற்றவேண்டும்!" -வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்

உச்ச நீதிமன்றம்
News
உச்ச நீதிமன்றம்

``நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த நீதி குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக கொடுக்கப்பட வேண்டும். ஆனால், ஏராளமான வழக்குகள் இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றன´´ - தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால்.

இந்திய அரசியல் சாசனத்தை, 1949-ம் ஆண்டு அரசியல் சட்ட நிர்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் விதமாக, கடந்த 2015-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் நாள் `அரசியல் சாசன தினம்' நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சபா நாயகர்கள், எம்.பி-க்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மோடி, உச்ச நீதிமன்றம்
மோடி, உச்ச நீதிமன்றம்

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ``இந்தியாவில் பல கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. இது நம் ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உட்கட்சி ஜனநாயகத்தையே மதிக்காத இதுபோன்ற கட்சிகள், நாட்டின் ஜனநாயகத்தை மட்டும் எப்படி பாதுகாக்கும்? திறமையின் அடிப்படையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என்றார். மேலும், ``அரசியல் கட்சிகள் அரசியலமைப்பு சட்டங்களை புரிந்து செயல்பட வேண்டும். ஊழல் தண்டனை பெற்றவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது. ஊழல் செய்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதேபோல, டெல்லி விக்யான் பவனில் நடைபெற்ற அரசியல் சாசன நாள் நிகழ்ச்சியில், அனைத்து தலைமை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அப்போது, பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், ``நீதி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த நீதி குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக கொடுக்கப்பட வேண்டும். ஆனால், ஏராளமான வழக்குகள் இன்னும் நிலுவையிலேயே இருக்கின்றன" எனக் குறிப்பிட்டார்.

கே.கே.வேணுகோபால்
கே.கே.வேணுகோபால்

மேலும்,``நீதியை விரைவாக வழங்கும் வகையில் உச்ச நிதிமன்றத்தின் படி நிலைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையும் மாற்றியாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் இடையே மேல் முறையீடு செய்ய நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். நாட்டின் நான்கு பகுதிகளில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கவேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. சிறிய அளவிலான கிரிமினல் வழக்குகள், குடும்ப வழக்குகளை எல்லாம் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும்போக்கு குறைக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நீதிமன்றத்தின் பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.