Published:Updated:

நீட் விலக்கு விவகாரம்: அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்திய தமிழக அனைத்துக் கட்சி குழு!

உள்துறை அமைச்சர் அமித் ஷா

தமிழக அனைத்துக் கட்சி குழு டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை அளித்துள்ளது.

நீட் விலக்கு விவகாரம்: அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்திய தமிழக அனைத்துக் கட்சி குழு!

தமிழக அனைத்துக் கட்சி குழு டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை அளித்துள்ளது.

Published:Updated:
உள்துறை அமைச்சர் அமித் ஷா

3 முறை பேச்சுவார்த்தை நிராகரிப்புக்குப் பின்னர் 4-வது முறையாக, தி.மு.க மக்களைவைத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் வைகோ, அ.தி.மு.க-வின் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு, உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை டெல்லியில் இன்று நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை மனுவை அளித்துள்ளது.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு
கோப்புப் படம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, முன்னதாக 3/3/2007-ல் இது போன்று நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் விலக்கு அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்று கூறியிருப்பதாகவும், அதற்கு இது குறித்து கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தமிழக முதல்வருக்கு முடிவு தெரிவிக்கப்படும் என்று அமித் ஷா கூறியதாகவும் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலின்
ஸ்டாலின்

மேலும், முன்னதாக முதல்வர் ஸ்டாலின் முன்வைத்திருந்த தமிழக வெள்ள நிவாரண நிதி 6,500 கோடி குறித்த கோரிக்கை மனு மீதும் ஜனவரி 31-ம் தேதிக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றும் அமித் ஷா கூறியிருப்பதாக டி.ஆர்.பாலு கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism