Published:Updated:

’என்னை உடலோடு கலந்து பெற்ற அன்னை கடலோடு கலந்தார்கள்!’ - ஆளுநர் தமிழிசை உருக்கம் !

தெலங்கானா ஆளுநர் தமிழிசை
தெலங்கானா ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் தாய் கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் அஸ்தி சென்னை அடையார் கடற்கரையில் கரைக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனின் தாய் கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 18-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். தெலங்கானாவிலிருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ட்விட்டர் பக்கத்தில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பகிர்ந்த புகைப்படம்
ட்விட்டர் பக்கத்தில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பகிர்ந்த புகைப்படம்

தொடர்ந்து கிருஷ்ணகுமாரி அவர்களின் அஸ்தி சென்னை அடையார் கடற்கரையில் கரைக்கப்பட்டது. அஸ்தியைக் கரைத்துவிட்ட பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் தாய் கிருஷ்ணகுமாரியுடனான நினைவுகளை உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் தமிழிசை. அந்தப் பதிவில்...

`என்னை உடலோடு கலந்து பெற்ற அன்னை...

இன்று கடலோடு கலந்தார்கள்...

அஸ்தியைக் கரைத்து

ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டோம்...

அம்மாவிற்குப் பிடிக்காததை நான் செய்தது கிடையாது...

அழுதால் அம்மாவிற்குப் பிடிக்காது...

ஆனாலும் அழுது முடித்துவிட்டோம்...

விழிகளில் கண்ணீர் வேண்டாம்...

புதுச்சேரி: "மருத்துவர்கள் வெள்ளை உடை அணிந்த தேவதைகள்!" -துணைநிலை ஆளுநர் தமிழிசை!

வழிகாட்டுவார்கள் அம்மா...

என்ற நம்பிக்கையுடன்...

வெற்று உணர்வுகள் இருந்தாலும்...

அது அம்மாவிற்குப் பிடிக்காது என்பதால்...

அம்மாவிற்குப் பிடித்த வெற்றி உணர்வோடு

வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கிறோம்...’ என்று பதிவிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு