Published:Updated:

தஞ்சைக் கோயில் குடமுழுக்கு கவுன்ட்டவுன்... ஆன்மிக அரசியலின் பின்னணி என்ன?

தஞ்சைக் கோயில் குடமுழுக்கு
தஞ்சைக் கோயில் குடமுழுக்கு

சம்ஸ்கிருத மொழியில் குடமுழுக்குச் செய்வது பெருவுடையார் கோயில் ஆகமவிதிகளுக்கு முரணானது. இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் எல்லோரும் இணைந்து, தமிழிலேயே குடமுழுக்கை நடத்தச் சொல்லி தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தும் அரசுத் தரப்பில் கண்டுகொள்ளவே இல்லை.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவுக்கான கவுன்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது. விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. இன்னொரு பக்கம் ஆன்மிக அரசியலும் தஞ்சையில் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. என்னதான் நடக்கிறது தஞ்சையில்?

மேலோட்டமாகப் பார்த்தால் இது தேசியவாதிகளுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இடையிலான மோதலாகத் தெரிந்தாலும், பா.ஜ.க-வுக்கு எதிரான அரசியலை ஒருமுகப்படுத்தும் முயற்சியாகவும் சொல்லப்படுகிறது.

சம்ஸ்கிருதத்தில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது பா.ஜ.க தரப்பு வாதமாகவும், தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பது எதிர்த்தரப்பு வாதமாகவும் வைக்கப்படுகிறது. இதில் தமிழில் குடமுழுக்குச் செய்ய வேண்டும் என்பதற்கான ஆதரவு பெருகிவருகிறது. இந்த விவகாரம் தஞ்சையை மட்டுமன்றி தமிழக அரசியலிலும் அனலைக் கிளப்பியிருக்கிறது.

தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, பொருளியல் ஆகியவற்றின் பெருமைமிகு அடையாளமாகப் பார்க்கப்படும் தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா, 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5-ம் தேதியன்று நடைபெறவுள்ளது. அதை எந்த முறையில் நடத்துவது என்பதில்தான் இப்போது சர்ச்சை வெடித்திருக்கிறது.

சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், பாடல்களைச் உச்சரித்து குடமுழுக்கு செய்வதைத் தவிர்த்து, முழுக்க முழுக்க தமிழில் மந்திரங்கள் கூறி, சூலகங்கள் ஓதி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மதுரை வண்டியூர் வீரராகவப் பெருமாள் மந்தையில், பதினெண்சித்தர் பீடாதிபதி அரசயோகிக் கருவூறார் தலைமையில் இயங்கும் நூற்றுக்கணக்கான சித்தர் அடியார்களும் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

தஞ்சைக் கோயில் குடமுழுக்கு கவுன்ட்டவுன்... ஆன்மிக அரசியலின் பின்னணி என்ன?

இதுகுறித்து சித்தர் அடியார்கள் சிலரிடம் பேசினோம். "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றபோது, சம்ஸ்கிருத மொழியில் வேத மந்திரங்கள் ஒலிக்க ராஜராஜசோழனின் குருவான கருவூறார் சித்தர் எதிர்ப்பு தெரிவித்தார். 'தமிழ் மரபுப்படி, தமிழ் மொழியில் மந்திரங்கள் ஓதித்தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும்' என்று அரசன் ராஜராஜசோழனிடம் அவர் வாதிட்டார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/37hGbvn

ஆனால், அப்போது ராஜராஜனுடன் இருந்தவர்கள் அவரைக் குழப்பி, அழுத்தம் கொடுத்து சம்ஸ்கிருத மொழியிலேயே குடமுழுக்கை நடத்த வைத்துவிட்டனர். இதனால் கோபமுற்ற கருவூறார் சித்தர், தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்தப் படாதவரை இந்தக் கோயிலுக்கு எந்த ராஜரீ தியிலான நபர்கள் வந்தாலும் அவர்கள் எண்ணம் ஈடேறாது என்று சபித்ததாக ஐதீகம். அந்தச் சாபம் இன்று வரை தொடர்வதாகவும் நம்பப்படுகிறது. அதனாலேயே இந்தக் கோயிலுக்குள் வந்த இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பின்னாளில் பெரும் சரிவைச் சந்தித்தார்கள்.

புராதன காலத்தில் எழுந்த சர்ச்சை இப்போது மீண்டும் வெடித்திருக்கிறது. சம்ஸ்கிருத மொழியில் குடமுழுக்குச் செய்வது பெருவுடையார் கோயில் ஆகமவிதிகளுக்கு முரணானது. இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் எல்லோரும் இணைந்து, தமிழிலேயே குடமுழுக்கை நடத்தச் சொல்லி தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தும் அரசுத் தரப்பில் கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, சம்ஸ்கிருதத்திலேயே குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்துவருகிறார்கள். தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 22-ம் தேதி தஞ்சையில் வேண்டுகோள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்துவருகிறோம்" என்றார்கள்.

தஞ்சைக் கோயில் குடமுழுக்கு கவுன்ட்டவுன்... ஆன்மிக அரசியலின் பின்னணி என்ன?

தமிழ்மொழி குடமுழுக்கு குறித்த அரசியல் ஒருபுறமிருக்க, இதில் இருக்கும் ஆன்மிக நம்பிக்கையைப் பற்றி, பதினெண்சித்தர் தமிழின குருபீடம் அருள்மிகு அரசயோகிக் கருவூறாரின் ஏற்புச்செல்வர் காசி விசாலாட்சியம்மன் சந்நிதானம் இரா.முத்துராசமூர்த்தியை காரைக்குடியில் சந்தித்துப் பேசினோம். பின்னர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் சித்தர்கள் கோட்டம் ஒருங்கிணைப்பாளர் பாரதி கண்ணனிடமும் பேசினோம்.

- அவர்கள் கூறியவற்றை ஜூனியர் விகடன் சிறப்புச் செய்திக் கட்டுரையில் முழுமையாக வாசிக்க > ஆன்மிக அரசியல்... அணிதிரளும் அமைப்புகள்! - சித்தர் வாக்கு... தமிழ் வழிபாடு... ராஜராஜனுக்கு சாபம்! https://www.vikatan.com/spiritual/news/kumbabhishekam-works-started-in-thajavur-periya-kovil

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு