Published:Updated:

``கேடர் விதிகள் திருத்தம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது!'' - மம்தா பிரதமருக்குக் கடிதம்

மம்தா பானர்ஜி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு மாற்றும் மசோதாவில் திருத்தம் செய்வது மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் செயல் என மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

``கேடர் விதிகள் திருத்தம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது!'' - மம்தா பிரதமருக்குக் கடிதம்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு மாற்றும் மசோதாவில் திருத்தம் செய்வது மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் செயல் என மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
மம்தா பானர்ஜி

கடந்த டிசம்பர் மாதம், மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஐ.ஏ.எஸ் (கேடர்) விதிகள், 1954-ன் திருத்தம் குறித்து கடிதம் எழுதி கருத்து கேட்டிருந்தது. அந்தக் கடிதத்துக்கு கடந்த செவ்வாய்கிழமை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் அவர், ``ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு மாற்றும் மசோதாவில் திருத்தம் செய்வது மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் செயல். ஏனெனில், தற்போது உள்ள விதிகளின்படி மாநிலங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு மாற்ற விரும்பினால் அதற்கு மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகிறது. ஆனால், மத்திய அரசு கொண்டுவரும் இந்தத் திருத்தத்தினால், மாநில அரசின் அனுமதி அல்லது ஒப்புதல் இன்றி மத்திய அரசு பணிக்கு மாநில அரசு அதிகாரிகளை உடனடியாக மாற்றிவிட முடியும்.

மம்தா, மோடி
மம்தா, மோடி

இது மாநிலங்களின் நிர்வாகத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தை மதிப்பிடுவதும், திட்டமிடுவதும் சாத்தியமற்றதாகிவிடும். எனவே, மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் திருத்தம் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யும் நடவடிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் நல்லிணக்கத்தை பாதிக்கும்" என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.

மேற்கு வங்கம் மட்டுமின்றி ஆறு மாநிலங்கள் மத்திய அரசின் இந்த கேடர் விதி திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism