Published:Updated:

இடிக்கப்பட்ட குடிசைகள்... பெங்களூருவில் வீடின்றித் தவிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்!

பெங்களூரு
News
பெங்களூரு

பெங்களூரில் வைரலாகப் பரவிய வீடியோவை அடிப்படையாக வைத்து அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்ட குடிசைகளை சட்டவிரோதமாக இடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலி ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இவ்வாறு எழுதியுள்ளார் "என் தொகுதிக்குட்பட்ட பெலந்தூர் பகுதியில் காரியமானா அக்ரஹாரத்தின் அருகில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட குடியிருப்பில் சிலர் தங்கியுள்ளதாகத் தெரிகிறது. அங்கு சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இது என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருக்கிறேன். இவர்கள் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக இருக்கலாம்" என்று பதிவிட்டிருந்தார்.

பெங்களூரு பெருநகர நிர்வாக ஆணையம்
பெங்களூரு பெருநகர நிர்வாக ஆணையம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைத் தொடர்ந்து பெங்களூரு பெருநகர நிர்வாக ஆணையம் அந்தக் கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 18, 19 ஆகிய தேதிகளில் அங்கிருந்த 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அதிகாரிகளால் இடிக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்தச் சம்பவம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வராத தனியார் நிலத்தில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்தக் குடியிருப்புகளில் வசித்தவர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள். அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் இருந்து வேலைக்கு வந்தவர்கள் என்றும் அவர்களின் ஆவணங்களை அதிகாரிகள் பார்க்க மறுத்துவிட்டனர் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய ஒரு வீடியோவை வைத்து அதிகாரிகள் குடியிருப்பு பகுதியை இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். `தனியார் நிலத்திலிருந்து மக்களை வெளியேற்றவோ அல்லது குடியிருப்புகளை இடிக்கவோ பொறியாளருக்கு அதிகாரம் இல்லை' என்று இப்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மக்கள்
மக்கள்

பெலந்தூரில் மட்டுமல்லாது தேவேராபிசனஹல்லி எனும் பகுதியிலும் 500 குடியிருப்புகளை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர். காவல் துறையின் உதவியோடு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடியிருப்புகளை இடிக்க உத்தரவிட்ட பொறியாளர் நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர், பொதுப் பணித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அருகிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கொடுத்த புகாரின் பேரில் தன்னுடைய அதிகார வரம்புக்கு வராத பகுதியில் பொறியாளர் நாராயண சுவாமி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கர்நாடக உயர்நீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி ஆகியவை செயல்படுத்தப்படும் என பா.ஜ.க தொடர்ந்து கூறி வருகிறது. என்.ஆர்.சி மூலம் சட்டவிரோதமாக, குடியேறிய வங்கதேசவாசிகள் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்பதே நோக்கம்.

பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளர்கள், "வாடகை கொடுத்து தங்க முடியாத காரணங்களால் குடிசை வீடுகளில் தங்கியிருந்தோம். கிடைக்கிற வேலையைச் செய்து எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகிறோம். எங்களை வங்கதேசத்தவர் என்று நினைத்து நாங்கள் வசித்த குடிசைகளை இடித்துள்ளனர். இப்போது, குழந்தைக் குட்டிகளுடன் தெருவில் நிற்கிறோம். ஈவு இரக்கமில்லாமல் எங்களிடத்தில் அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளனர். தங்குவதற்கு வேறு இடமில்லை. எங்களுக்கு அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்கப்படவும் இல்லை. நாங்கள் ஆவணங்களைக் கூட காட்டினோம். அவற்றைக் கூட வாங்கிப் பார்க்க யாரும் தயாராக இல்லை'' என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், குடியிருப்புகளை அப்புறப்படுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. மேலும், குடியிருப்புகள் இடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறை விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளதால், இந்த மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி சட்டங்கள் திட்டவட்டமாக அமல்படுத்தப்படுமென்று சொல்லப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் தைரியத்திலேயே அதிகாரிகள் அராஜகப் போக்குடன் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.