Published:Updated:

``தனியார்மயத்தால் பயனடையப்போவது மக்கள்தான்!" - வானதி சீனிவாசன் `லாஜிக்' பேட்டி

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இலவச மின்சாரம் என்பது மாநில அரசின் உரிமை சார்ந்த விஷயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மின்சாரத்துறையில் ஏற்படும் நஷ்டங்களைச் சரிசெய்ய மாற்று வழி

"20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில், விவசாய மானியம், வழக்கமான ரேஷன் பொருள்கள் வழங்கல் போன்றவற்றையும் சேர்த்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து...?"

" `20 லட்சம் கோடி ரூபாய் என்பது நேரடியான நிதி அல்ல' என்று ஆரம்பத்திலேயே பிரதமர் சொல்லியிருக்கிறார். இது, 20 லட்சம் கோடி ரூபாயை உருவாக்குவதற்கான திட்டம் மட்டுமே. பல்வேறு தொழில்கள், முதலீடுகள் மூலம் இது கொண்டுவரப்படும்."

"தன்னாட்சி அமைப்பான காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசின் நீர்வளத்துறைக்குக் கீழ் கொண்டுவருவது சரியா?"

"நிர்வாக வசதிக்காகத்தான் ஜல்சக்தி துறையின் கீழ் ஆணையங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அதிகமாகப் பலனடையப்போவது தமிழ்நாடுதான்.''

"விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்துசெய்யும் நோக்கில்தான் 'மின்சார சீர்திருத்த வரைவு மசோதா' கொண்டு வரப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?''

''இலவச மின்சாரம் என்பது மாநில அரசின் உரிமை சார்ந்த விஷயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மின்சாரத்துறையில் ஏற்படும் நஷ்டங்களைச் சரிசெய்ய மாற்று வழிமுறைகள் குறித்தும் தமிழக அரசு, மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்."

''உங்களின் இந்த பதில் தமிழக அரசை மிரட்டும் தொனியில் இருக்கிறதே?"

''அப்படி அல்ல. 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும் ஒரு மாநிலத்தின் பிரதிநிதியாகவே நான் இதைச் சொல்கிறேன்."

"கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் வேலையை பா.ஜ.க செய்துவருவதாக விமர்சிக்கப்படுகிறதே?"

''நரசிம்ம ராவ் காலத்திலேயே தனியார்மயத்துக்கான கதவுகள் இந்தியாவில் திறந்துவிடப்பட்டுவிட்டன. அதனால், நாட்டுக்கு நிச்சயமாக நன்மைதான். இன்று அதனுடைய வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றும் முயற்சிதான் இது. இதனால் பயனடையப்போவது நாட்டு மக்கள்தான்."

"பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆன பிறகு, அங்கு இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுமா?"

``தனியார்மயத்தால் பயனடையப்போவது மக்கள்தான்!" - வானதி சீனிவாசன் `லாஜிக்' பேட்டி

''இப்போதைய முதன்மையான நோக்கம் தனியார்மயத்தின் மூலமாக வேலைவாய்ப்பைப் பெருக்குவதுதான். அதன் மூலம் அனைவரும்தான் பயனடைவார்கள். அதன் வளர்ச்சிப்போக்கில் இடஒதுக்கீடு போன்ற விஷயங்களைக் கொண்டு வரலாம். ஆரம்பத்திலேயே இதைப்பற்றிப் பேசி முட்டுக்கட்டை போடுவது சரியாக இருக்காது."

> ''தொலைக்காட்சி விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த கரு.நாகராஜன் பேசியது சரியா... அவர் மீது பா.ஜ.க தலைமை நடவடிக்கை எடுக்காதது ஏன்?"

> "தேசியப் பட்டியலின நல ஆணையத்தில் பதவி கொடுப்பதாகச் சொல்லித்தான் தி.மு.க-வின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமியை பா.ஜ.க-வில் இணைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே..?''

> "'20 லட்சம் கோடி ரூபாய் அல்ல; வெறும் ரூ.1,86,650 கோடிதான். இந்த எண்ணை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்' என்ற ப.சிதம்பரத்தின் ட்வீட் சரிதானா?"

> "புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் மெத்தனமாக இருந்தது ஏன்?"

> "உத்தரப்பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பேருந்துகளை உ.பி அரசு இழுத்தடித்து அனுமதி கொடுத்தது ஏன்?"

> ''வெளிநாட்டில் இருப்பவர்களை இந்தியாவுக்கு அழைத்துவரும் 'வந்தே பாரத்' திட்டத்தில் இனப் பாகுபாடு காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளதே?''

- இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அளித்த விரிவான பதில்களுடன் முழு பேட்டியை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க Click here> "பசியிலோ பட்டினியிலோ யாரும் வாடவில்லை!" - வானதி சீனிவாசன் https://bit.ly/2XJdMLs

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு