Published:Updated:

``சட்டப்பேரவையை முடக்கச் சொன்னதே மம்தா தான்!" - முதல்வர் ஸ்டாலினுக்கு மேற்கு வங்க ஆளுநர் பதில்

ஜகதீப் தன்கர் - ஸ்டாலின்

மேற்கு வங்க ஆளுநர் தான் தன்னிச்சையாக சட்டப்பேரவையை முடக்கவில்லை என்றும், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மட்டுமே முடக்கியதாகவும் ஸ்டாலினின் ட்வீட்டை சுட்டிக்காட்டி விளக்கமளித்திருக்கிறார்.

``சட்டப்பேரவையை முடக்கச் சொன்னதே மம்தா தான்!" - முதல்வர் ஸ்டாலினுக்கு மேற்கு வங்க ஆளுநர் பதில்

மேற்கு வங்க ஆளுநர் தான் தன்னிச்சையாக சட்டப்பேரவையை முடக்கவில்லை என்றும், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மட்டுமே முடக்கியதாகவும் ஸ்டாலினின் ட்வீட்டை சுட்டிக்காட்டி விளக்கமளித்திருக்கிறார்.

Published:Updated:
ஜகதீப் தன்கர் - ஸ்டாலின்

மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து அந்த மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், `அரசமைப்புச் சட்டத்தின் 172-2ஏ பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் மாநில சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறேன். இது பிப்ரவரி 12-ம் தேதி முதல் அமலுக்கு வரும்' என்று குறிப்பட்டிருந்தார்.

மேற்கு வங்க சட்டபேரவை முடக்கம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில் ``மேற்கு வங்க சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கிய செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.

ஆளுநரின் ட்வீட்
ஆளுநரின் ட்வீட்
ட்விட்டர்

அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநர் தான் தன்னிச்சையாக சட்டப்பேரவையை முடக்கவில்லை என்றும், மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மட்டுமே முடக்கியதாகவும் ஸ்டாலினின் ட்வீட்டை சுட்டிக்காட்டி விளக்கமளித்திருக்கிறார்.

இது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் ட்விட்டரில், ``12-ம் தேதி மாலை மேற்கு வங்க சட்டப்பேரவை விவாகரங்கள் அமைச்சரவையில் இருந்து அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடர் மார்ச் 2-ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

எனவே மேற்குவங்க அரசு கேட்டுகொண்டதையடுத்து சட்டப்பேரவை முடக்கம் செய்யப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடுமையான அவதானிப்புகளில் உண்மை இல்லை. அரசின் கோரிக்கையை ஏற்றே சட்டப்பேரவை முடக்கப்பட்டுள்ளது" என்று முதல்வர் ஸ்டாலினின் ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கிறார்.