Election bannerElection banner
Published:Updated:

Election Updates: அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகல்!

பிரேமலதா - விஜயகாந்த்
பிரேமலதா - விஜயகாந்த்

Election Updates: அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகல்!

09 Mar 2021 1 PM

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து தே.மு.தி.க விலகல்!

தே.மு.தி.க அறிக்கை
தே.மு.தி.க அறிக்கை

தொகுதிப் பங்கீடு குறித்து மூன்று கட்டங்களாக அ.தி.மு.க-வுடன் தே.மு.தி.க நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக தே.மு.தி.க அறிவித்திருக்கிறது.

தே.மு.தி.க கேட்ட எண்ணிக்கையும், இடங்களும் கொடுக்கப்படாததால்தான் இந்த முடிவு என அறிக்கையில் தெரிவித்திருக்கிறது தே.மு.தி.க. இன்று மாவட்ட செயலாளர்களுடன் நடந்த அவசர ஆலோசனையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, இந்த முடிவெடுக்கப்பட்டதாக தே.மு.தி.க அறிவிப்பு.

சுதீஷ் பத்திரிகையாளர் சந்திப்பு

Posted by Junior Vikatan on Monday, March 8, 2021

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை பொதுச்செயலாளர் சுதீஷ், `` இந்த நாள் தே.மு.தி.க-வுக்கு தீபாவளி. அ.தி.மு.க அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும். அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, பா.ம.க-வுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்” என்றார்.

தே.மு.தி.க-வின் இந்த முடிவை கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிவருகின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு