Published:Updated:

வர்த்தக யுத்தம்: `சீன உணவு' என்று புறக்கணித்தால் யாருக்கு நஷ்டம்?

சீனாவை வெல்ல...
சீனாவை வெல்ல...

தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டமிடலும் மட்டுமே சீனாவுக்கு நிகராகவோ அதற்கும் மேலாகவோ இந்திய வர்த்தகத்தை நிலைநிறுத்தும்

70 ஆண்டுகளுக்கு முன்பு 'சுதேசி இந்தியா' என்றார்கள். இப்போது 'சுயசார்புள்ள இந்தியா' என்ற முழக்கத்தை மோடி கண்டுபிடித்திருக்கிறார். வார்த்தைகள் மாறினாலும், வழக்கம் மாறவில்லை. ஆம், வெறுமனே முழக்கம் மட்டுமே செய்கிறோம். இன்றைய உலகச் சூழலில் எந்த நாடும் 'தற்சார்பு' என்று தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது.

காசு கொடுத்து வாங்கிய டி.வி-யை ரோட்டில் போட்டு உடைப்பதால் சீனாவுக்கு நஷ்டம் இல்லை. அவர்களுக்கு லாபம்தான். இன்னொரு டி.வி அதிகமாக விற்கும். 'சீன உணவுகளைப் புறக்கணிப்போம்' என்கிறார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே. இந்தியர் நடத்தும் நிறுவனத்தில், இந்திய விவசாய விளைபொருள்களை வாங்கி, இந்திய ஊழியர்கள் சமைத்துத் தருவதை 'சீன உணவு' என்று புறக்கணித்தால் யாருக்கு நஷ்டம்?

உலக அளவில் இதுபோன்ற பொருளாதாரப் புறக்கணிப்புகள் பெரிதாக வெற்றிபெற்றதில்லை. உணர்ச்சிகரமான முழக்கங்கள் நீண்ட காலம் நிலைக்காது. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளும் மனநிலையும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டமிடலும் மட்டுமே சீனாவுக்கு நிகராகவோ அதற்கும் மேலாகவோ இந்திய வர்த்தகத்தை நிலைநிறுத்தும். வெற்று முழக்கங்களுக்கும் சவால்களுக்கும் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ட்வீட்களுக்கு மேல் எந்த மதிப்புமில்லை.

இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதைப் போலவே இந்திய நிறுவனங்களில் சீனா செய்யும் முதலீடும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. குறிப்பாக இணைய வர்த்தகம் செய்யும் ஸ்நாப்டீல், ஓலா, ஸ்விக்கி, பே டிஎம், ஃபிளிப்கார்ட், பிக் பாஸ்கெட், ஸொமாடோ, ஓயோ, பைஜுஸ், டெல்ஹிவரி, ஹைக் போன்ற நிறுவனங்களைச் சொல்லலாம். இந்தியாவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் மதிப்புள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பாதி, சீன முதலீட்டில்தான் இயங்குகின்றன. இப்படி இந்தியாவில் சீன நிறுவனங்களின் முதலீடு சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் செய்யும் முதலீடு லாபமும் தரலாம்; சுத்தமாகக் கரைந்தும் போய்விடலாம். உதாரணமாக, பே டிஎம் இதுவரை 3,690 கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் இயங்குகிறது. ஃபிளிப்கார்ட்டின் நஷ்டம் 3,837 கோடி ரூபாய். எப்போது லாபம் வரும்? யாருக்கும் தெரியாது!

அதனால், இதில் முதலீடு செய்யும் ரிஸ்க்கை இந்திய நிறுவனங்கள் பலவும் எடுப்பதில்லை. சீனா துணிந்து செய்கிறது. இதேபோல இந்தியாவில் கட்டமைப்புப் பணிகளை கான்ட்ராக்ட் எடுத்துச் செய்யவும் சீன நிறுவனங்கள் வந்துவிட்டன.

சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.. > சீனாவை வெல்ல... வியூகம்தான் தேவை; வெற்று முழக்கம் அல்ல! https://bit.ly/2BoKfQ6

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்குகளைச் சீன மக்கள் வங்கி வாங்க முயன்றபோது மத்திய அரசு உஷாரானது. 'இந்தியாவில் சீனாவின் நேரடி முதலீட்டுக்கு அனுமதி பெற வேண்டும்' என விதிமுறை கொண்டுவந்தது. வழக்கம்போல் இதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது.

- டி.வி விவாதங்களிலும் சீனாவைப் புறக்கணித்துத் தற்சார்பு பெறுவது பற்றிப் பேசுகிறோம். இந்தியாவில் தற்போது விற்கப்படும் டி.வி-க்களில் சுமார் 54 சதவிகிதம் சீனத் தயாரிப்புகளே! அதிகம் விற்பனையாகும் 15 பிராண்ட் டி.வி-க்கள், சீனாவிலிருந்து உதிரி பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் உருவாக்கப்படுபவைதான்!

செட் டாப் பாக்ஸ், டிஷ் ஆன்டெனா என நாம் வீட்டில் டி.வி பார்ப்பதை சாத்தியமாக்கும் அத்தனை துணைக் கருவிகளும் சீனத் தயாரிப்புகள்தான். இதுதான் யதார்த்தம். 'சீனப் பொருள்களைப் புறக்கணிப்போம்' என்று ஸ்டிக்கர்களும் பேனர்களும் நமக்கு லட்சக்கணக்கில் தேவைப்பட்டால், அவற்றை மிக மலிவான விலையில் அச்சிட்டுத் தர சீன நிறுவனங்களால் மட்டுமே முடியும்.

இந்தச் சூழலில் சீனப் பொருள்களைப் புறக்கணித்துவிட்டு நாம் வாழ முடியுமா? அந்தப் புறக்கணிப்பு சீனாவைப் பணிய வைக்குமா? யாருக்கு இழப்பு அதிகம்? ''நிச்சயமாக இந்தியாவுக்கே இழப்பு அதிகம்'' என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

சரி...

> சீனத் தயாரிப்புகளின் இறக்குமதி நிலை என்ன? > போட்டியிடும் வாய்ப்பு என்ன ஆகும்? > சீனா 'உலகத்தின் தொழிற்சாலை' ஆனது எப்படி? > சீனா உருவாக்கிய போட்டி மார்க்கெட் எத்தகையது? > இந்தியா என்னதான் செய்ய வேண்டும்? > என்ன செய்யப் போகிறது இந்தியா? > பஜாஜ் சொல்லும் ஐடியா எடுபடுமா? > இருநாடுகளின் வர்த்தகம் யாருக்கு சாதகம்? > சீனா கண்டுபிடித்த பைபாஸ் ரூட் தெரியுமா?

- இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விரிவாகவும் தெளிவாகவும் பதில் சொல்லும் ஆனந்த விகடன் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க.. > சீனாவை வெல்ல... வியூகம்தான் தேவை; வெற்று முழக்கம் அல்ல! https://bit.ly/2BoKfQ6

* Vikatan App-ல் முழு கட்டுரையை வாசிப்போர், கீழேயுள்ள Also Read தலைப்பைக் க்ளிக் செய்து வாசிக்கலாம்.

சீனாவை வெல்ல... வியூகம்தான் தேவை; வெற்று முழக்கம் அல்ல!

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு