Published:Updated:

ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் அ.தி.மு.க-வுக்கு ஏன் சென்றார்கள்?- ஒரே ஒரு காரணம்தான் என்கிறார் தினகரன்

ttv dhinakaran ( ஜெரோம் )

அ.ம.மு.க.விலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் குறித்து டி.டி.வி.தினகரன் விளக்கமளித்துள்ளார்.

ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் அ.தி.மு.க-வுக்கு ஏன் சென்றார்கள்?- ஒரே ஒரு காரணம்தான் என்கிறார் தினகரன்

அ.ம.மு.க.விலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் குறித்து டி.டி.வி.தினகரன் விளக்கமளித்துள்ளார்.

Published:Updated:
ttv dhinakaran ( ஜெரோம் )

சட்டப்பேரவை வளாகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவிதினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு?

ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரைக்கும் வளர்ச்சிப் பணியை நீங்கள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

தினகரன்
தினகரன்
ஜெரோம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தத் தொகுதியை முற்றிலுமாகப் புறக்கணித்து வைத்திருந்தாங்க. ஜெயலலிதா இருந்தபோது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், பாலங்கள் டெண்டர் விடப்பட்ட பின்னரும் இன்னும் கிடப்பில் கிடக்கிறது. குடிதண்ணீர் பிரச்னை மோசமாக இருந்தப்போ லாரிகள் மூலம் குடிநீர் கொடுத்தோம். அதன்பிறகு அரசு குடிநீர் கொடுத்தது. அந்தத் தொகுதி மக்கள் ஆளும்கட்சியைத் தோற்கடித்துவிட்டதனால சுகாதாரம், கழிவு நீர் வசதி, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்கூட சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் போய் மக்களிடம் விசாரித்தாலே தெரியும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் ஆதரவாளர்கள் ரத்தினசபாதி, கலைச்செல்வன் முதல்வரைச் சந்தித்துள்ளனர். என்ன காரணம்?

ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் அ.தி.மு.க-வுக்கு ஏன் சென்றார்கள்?- ஒரே ஒரு காரணம்தான் என்கிறார் தினகரன்

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த அடுத்த நாளே அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை பதிவு செய்வதற்காக கூட்டம் போட்டபோது இரண்டு பேரும் வந்திருந்தாங்க. அவர்களிடம், நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இதில் கையெழுத்துப்போட வேண்டாம் என்று அன்றைக்கே சொன்னேன். இந்தக் கட்சியில் இணைந்தால் உங்கள் பதவி போய்விடும். நீங்கள் தனித்து நின்று செயல்படுங்கள் என்றுதான் சொன்னேன். சகோதரர் ரத்தினசபாதியும் கலைச்செல்வனும் தொலைக்காட்சியில் பேசியதை பார்த்தேன். யார் சொல்லி பேசுகிறார்கள் என்று தொியும். போனவாரம் என்ன பேசினாங்கன்னு உங்களுக்கு தெரியும். மக்கள் சந்திப்புக்கு நான் சென்றபோது விருத்தாசலம் தொகுதியில் கலைச்செல்வன் எப்படி பேசினார்னும் தெரியும். புதுக்கோட்டையில் நான் கலந்துகொண்ட கூட்டத்திலேயே ரத்தினசபாபதி எப்படி பேசியிருக்கிறார் என்பதை என்னைவிட மக்களுக்கு நல்லா தெரியும். எங்க கட்சித் தொண்டர்களுக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள சேர்ந்திருக்காங்க. அதனால தப்பில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெங்களூரு சென்றுவந்தீங்க. அடுத்து என்ன பண்ணலாம் என்று இருக்கிறீர்கள். தொடர்ச்சியாக முக்கிய நிர்வாகிகள் வெளியேறிக்கொண்டிருக்காங்க. அ.ம.மு.க சறுக்கும் நிலையில் இருக்கிறது என்ற தோற்றம் இருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் அ.தி.மு.க-வுக்கு ஏன் சென்றார்கள்?- ஒரே ஒரு காரணம்தான் என்கிறார் தினகரன்

தேர்தல் தோல்விக்கு அப்புறம் சில நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்குச் சென்றிருக்கிறாங்க. போறப்போ அவர்கள் எங்களுக்கு எதிராக எப்படிப் பேசிட்டுப்போறாங்கன்னு உங்களுக்குத் தெரியும். பொதுமக்கள் மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வீழ்ச்சியடைந்துட்டு. அதுல உள்ள நிர்வாகிகள் எல்லாம் போறாங்கன்னு ஒரு பிம்பத்தை உருவாக்கத்தான் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் முயற்சி செய்யுது. போகிற நிர்வாகிகளுடன் யார் போகிறார்கள். நிர்வாகிகளை வைத்துதான் ஒரு கட்சி இருக்கா. தேனி மாவட்டத்திலிருந்து ஒருவர் போனாரு. உடனே அங்கு மாவட்டச் செயலாளர் அறிவித்துவிட்டோம். நிர்வாகி போகிறதினாலேயே ஒரு இயக்கம் வீழ்ச்சியடைந்துவிடும் என்று யாரும் கனவு கண்டாங்கனா அது பொய்யுன்னு எங்கள் தொண்டர்களும் நிர்வாகிகளும் நிரூபிப்பாங்க. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட இயக்கம். வெற்றி தோல்விக்குப் பிறகு சில நிர்வாகிகள் போகிறது அவுங்க சுயகாரணங்களுக்குத்தான். அதைத் தடுக்க முடியாது.

சசிகலாவைச் சென்று பார்த்தீர்கள். இது குறித்து அவர் என்ன நினைக்கிறார்?

sasikala
sasikala

தொலைக்காட்சியில் அனைத்தையும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கிறார். தோல்விக்குப் பிறகு இப்படி போவது சசிகலாவுக்கு தெரிந்த விஷயம்தான். 30 ஆண்டுகளாக ஜெயலலிதாகூட இருந்தப்போ கிடைத்த அனுபவங்களெல்லாம் இருக்கு. தோல்வி வந்து ஒரு இயக்கத்தைச் சரித்துவிடும் என்று யாராவது நினைச்சாங்கன்னா இது உண்மை இல்லை என்பதை காலம் நிரூபிக்கும்.

பிரபு உங்ககூட இருப்பாரா, தொடர்ந்து உங்ககூட பயணிப்பாரா?

பிரபு
பிரபு

அவரைக் கேளுங்க. என்னைக் கேட்கிறீங்க.

நீங்கள் அ.தி.மு.க அரசை கலைக்க முயல்வதாகவும் அதனால்தான் வெளியே வந்துட்டோம்ன்னு ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் சொல்கிறார்கள்?

ரத்தினசபாபதி
ரத்தினசபாபதி

இன்னைக்கு சொல்றாங்க. இரண்டு மாசத்துக்கு முன்புகூட தேர்தல் நேரத்தில் அவர்கள் யாருக்காகப் பணியாற்றினார்கள் என்று தெரியும். பாவம் பதவியைக் காப்பாத்துறத்துக்காகப் போறாங்க. அவுங்க சொல்லறதை பெரிசுப்படுத்தாதீங்க. கூட இருந்தவங்க நாங்க. அவுங்கள மாதிரி இறங்கிப்போய் அரசியல் பண்ணவிரும்பல. பதவியில இருக்கணும்னு போயிருக்காங்க. அவ்வளவுதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism