Published:Updated:

``வழக்கம் போல வசனத்தை பேசி ஏமாத்தாதீங்க!" - திருச்சியில் கொதித்த டி.டி.வி.தினகரன்

ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி தினகரன்

நாம் அவர்களை சகோதர சகோதரிகளாக நினைக்கின்றோம். ஆனால் அவர்கள் நம்மை ஏதோ பாகிஸ்தான்காரர்கள் போல நினைக்கிறார்கள்.

``வழக்கம் போல வசனத்தை பேசி ஏமாத்தாதீங்க!" - திருச்சியில் கொதித்த டி.டி.வி.தினகரன்

நாம் அவர்களை சகோதர சகோதரிகளாக நினைக்கின்றோம். ஆனால் அவர்கள் நம்மை ஏதோ பாகிஸ்தான்காரர்கள் போல நினைக்கிறார்கள்.

Published:Updated:
ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி தினகரன்

இந்த மேக்கே தாட்டூ அணை கட்ட கர்நாடக அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதைக் கண்டித்து, அ.ம.மு.க., மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.ம.மு.க.,பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கத் தலைவர்கள் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ``கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, மத்திய அரசையும் மதிப்பதில்லை. ஒரு வெறுப்பு அரசியலை, பிரிவினையை உருவாக்குகின்ற அரசியலை உருவாக்கி கர்நாடக அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காவிரியின் உபரிநீரை ஒருசொட்டு கூட கிடைக்காத அளவிற்கு மேக்கே தாட்டூவிலே அணை கட்டுவதற்கு அந்த அரசாங்கம் உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கூட மதிக்காமல், 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களின் ஜீவாதாரப் பிரச்னை. இது ஏதோ விவசாயப் பிரச்னை மட்டுமல்ல. தமிழக மக்களின் சமூக, வாழ்வாதார, பொருளாதார, குடிநீர்ப் பிரச்னை. அப்பாவியான தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிற ஒரு கொடுமையான திட்டத்திற்கு கர்நாடக அரசு வேலை செய்து வருகிறது. நாம் அவர்களை சகோதர சகோதரிகளாக நினைக்கின்றோம். ஆனால், அவர்கள் நம்மை ஏதோ பாகிஸ்தான்காரர்கள் போல நினைக்கிறார்கள். இதற்கு மத்திய அரசாங்கம் ஒரு முடிவு கொண்டு வர வேண்டும். மத்தியில் ஆள்கின்ற பா.ஜ.க., தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. தமிழக அரசாங்கம் மத்திய அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்டு, இந்த அணை கட்டும் எண்ணத்தையோ அவர்கள் நிறுத்திக் கொள்ளும் விதமாக அதற்கான முயற்சிகளையும் முடிவுகளையும் எடுக்க வேண்டும்" என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
அ.ம.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
அ.ம.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து பேசியவர், ``இப்போ பயமே தி.மு.க., ஆட்சி தான். ஏன்னா தி.மு.க., எப்ப எல்லாம் ஆட்சியில இருந்துச்சோ, அப்போ தமிழ்நாட்டின் பிரச்னைகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்படும். குறிப்பாக காவிரி பிரச்னையில் கருணாநிதி அவர்கள் முதலைமைச்சராக இருந்தப்போ 1970, 1972, 1974, 1998, 2007-ல என்ன பண்ணாருன்னு உங்களுக்கு நல்லா தெரியும். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்'ன்னு சொல்ற கருணாநிதி, 1970-ல் கர்நாடக அரசாங்கம் காவிரியின் துணை நதியான ஹேமாவதியில் அணை கட்ட எங்களுக்கு எந்தவித மறுப்பும் கிடையாது என்று அவர்களுக்கு பச்சைக்கொடி காட்டினார். அதேபோல 1972-ல் இந்திராகாந்தி அம்மையாருக்கு பயந்துகொண்டு உச்ச நீதிமன்றத்திலே காவிரி பிரச்னைக்காக நிலுவையில் இருந்த வழக்குகளை வாபஸ் பெற்றார். 1974-ல் காலாவதியான தீர்மானத்தை தொடர்ந்து புதுப்பிக்காமல் விட்ட காரணத்தினால் தான் 3 போகமாக இருந்த தமிழ்நாட்டின் சாகுபடி, இன்றைக்கு ஒரு போகமே கஷ்டப்பட்டு செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. அரிசிக்கே பஞ்சம் வருகின்ற நிலைமை வந்துவிட்டது. இதுபோன்று தமிழக மக்களை, விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கின்ற வகையிலே தான் தி.மு.க., செயல்பட்டு வந்திருக்கிறது.

அ.ம.மு.க.,கண்டன ஆர்ப்பாட்டம்
அ.ம.மு.க.,கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் வாழ்கின்ற 85 சதவிகித மக்களின் குடிநீர்ப் பிரச்னையை தீர்ப்பதே காவிரித் தாய் தான். தமிழ்நாட்டுப் பிரச்னையில் தி.மு.க., எப்போதும் கோட்டை விடும். அதனால தான் நமக்கு பயமா இருக்கு இப்போ. கபினி, ஹேரங்கி போன்ற நதிகளில் எல்லாம் கர்நாடகா எத்தனையோ கட்டுமானங்களை எழுப்பியபோது கருணாநிதி கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். இன்னைக்கு அவரோட வாரிசு வந்துருக்காரு. இவங்க வந்த தைரியத்துல அவங்க மேக்கே தாட்டூ அணையைக் கட்ட 1,000 கோடியை ஒதுக்கியிருக்காங்க. இதை தடுக்காவிட்டால் தமிழ்நாடு சோமாலியா போல் ஆகிவிடும் என்பதுதான் உண்மை. எற்கெனவே நீதிமன்றத் தீர்ப்புகள் எல்லாம் கர்நாடகாவுக்கு சாதகமாக இருக்கிறது. திராவிட மாடல் என்று சொல்கின்ற இந்த அரசாங்கம் தமிழக நலன்களை குழிதோண்டிப் புதைத்தால் வருங்கால சமூகம் அவர்களை மன்னிக்காது. இந்த விடியல் ஆட்சி அவங்க குடும்பத்துக்கும் கட்சிக்கும் மட்டும் இல்லாம தமிழ்நாட்டு மக்களின் ஜீவாதாரப் பிரச்னைகளை அந்த அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக இருக்க வேண்டும். தி.மு.க., ஆட்சிக்கி வந்தாலே சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பது தெரியும். தி.மு.க., நிர்வாகிகள் மட்டுமல்ல தி.மு.க., கொடி கட்டிய வண்டிகளில் ரெளடிகளும், சமூக விரோதிகளும் வலம் வரத் தொடங்கி விட்டார்கள் என்பது தான் உண்மை. வழக்கம் போல் வசனம் பேசி மக்களை ஏமாற்றாமல் மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க தி.மு.க., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அ.ம.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
அ.ம.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் இன்றைக்கு ஆளுங்கட்சியும் கிடையாது. எதிர்க்கட்சியும் கிடையாது. ஆனால், தமிழகத்தின் பிரச்னைகளுக்கு முதல் ஆளாய் நின்று போராடக்கூடிய அம்மாவின் உண்மையான போராளிப் பிள்ளைகளாக நாம் இருக்கிறோம். அரசியல் பயணத்துக்காக அ.ம.மு.க., போராட்டம் நடத்துதுன்னு சிலர் நினைக்கலாம். எல்லாருக்கும் தெரியும் அ.ம.மு.க., போராட்டத்தில் தொடங்கி, போராட்டத்தில் வளர்ந்த இயக்கம். எங்களை எந்தவொரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது. அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மீண்டும் கொண்டு வருவதற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டுக்கிறது. எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். தேர்தல் பின்னடைவுகளால் துவண்டு போகாதவர்கள் நாங்கள். மக்கள் பிரச்னைக்காகப் போராடக்கூடிய ஜனநாயகப் போராளிகள் நாங்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism