Published:Updated:

துரை வையாபுரி டு துரை வைகோ... வாரிசு அரசியலை வழிமொழிகிறாரா வைகோ?

மகனுடன் வைகோ
பிரீமியம் ஸ்டோரி
மகனுடன் வைகோ

‘இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வில் உயிரை துச்சமாக மதித்துப் பணியாற்றியவன் நான்.

துரை வையாபுரி டு துரை வைகோ... வாரிசு அரசியலை வழிமொழிகிறாரா வைகோ?

‘இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வில் உயிரை துச்சமாக மதித்துப் பணியாற்றியவன் நான்.

Published:Updated:
மகனுடன் வைகோ
பிரீமியம் ஸ்டோரி
மகனுடன் வைகோ

‘இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க-வில் உயிரை துச்சமாக மதித்துப் பணியாற்றியவன் நான். ஆனால், பட்டத்து இளவரசருக்குப் பட்டாபிஷேகம் செய்வதற்கு நான் இடையூறாக இருப்பேன் என்பதற்காக, என்மீது கொலைப்பழி சுமத்தி கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள்’ தி.மு.க-வில் இருந்து வெளியேறிய சமயத்தில், அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதிமீது வைகோ வைத்த குற்றச்சாட்டு இது.

தனிக்கட்சி தொடங்கிய வைகோ, ‘வாரிசு அரசியலை எதிர்த்து உருவான கட்சி ம.தி.மு.க’ என்று அடிக்கடி சொல்லிவந்தார். ‘தற்போது நடக்கும் சம்பவங்கள், குடும்பத்துக்காக வைகோ தனது கொள்கைகளில் சமரசம் செய்கிறாரா என்ற சந்தேகத்தை எங்களுக்குள் எழுப்புகின்றன’ என்று ம.தி.மு.க-வினரே குற்றம் சாட்டுகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜூலை 28-ம் தேதி, ராஜபாளையம் மேற்கு ஒன்றிய

ம.தி.மு.க சார்பில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுதான், வைகோ மீது சந்தேகம் எழக் காரணம். அந்தக் கூட்டத்தில், ‘இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழர் நலனுக்காகவும், கழகத்தின் வளர்ச்சிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், துரை வைகோவுக்கு கட்சிப் பணியாற்றவும், கட்சியில் பதவி வழங்குவதற்கும் அனுமதி வழங்குமாறு பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது’ என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இதுதான் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

ம.தி.மு.க வட்டாரத்தில் இதுகுறித்து பேசியபோது, ‘‘தி.மு.க-வில் பெரிய சக்தியாக வைகோ உருவெடுத்த சமயத்தில், அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது `ஸ்டாலினுக்குப் பதவி கொடுப்பதற்காகத்தான் என்னை தி.மு.க-விலிருந்து நீக்கினார்கள்’ என்று சொல்லிவந்த வைகோ, அப்போதிருந்தே வாரிசு அரசியலை எதிர்த்தார்.

ம.தி.மு.க-வைவிட்டு நாஞ்சில் சம்பத் விலகிய சமயத்தில், ‘வைகோ, தன் மகனை கட்சிக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறார். அதற்கு நான் தடையாக நிற்பேன் என்பதற்காக என்னைப் புறக்கணிக்கிறார்’ என்று வைகோவைச் சாடினார். அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பதுபோல இப்போது பல சம்பவங்கள் நடக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துரை வையாபுரி டு துரை வைகோ... வாரிசு அரசியலை வழிமொழிகிறாரா  வைகோ?

துரை வையாபுரியை கொஞ்சம் கொஞ்சமாகக் கட்சிக்குள் கொண்டுவரும்விதமாக… கட்சிக் கூட்டங்கள், விழாக்கள் அனைத்திலும் அவர் முன்னிலைப்படுத்தப்படுகிறார். `துரை வையாபுரி’ என்ற பெயர் தற்போது `துரை வைகோ’ என மாற்றம் பெற்றுள்ளது. துரை வைகோ என்ற பெயரில் புதிய வாட்ஸ்அப் குழு அமைக்கப் பட்டுள்ளது. சுவரொட்டிகள், பேனர்கள், பத்திரிகைகள் அனைத்திலும் துரை வைகோ பெயரையும் சேர்க்கச் சொல்கிறார்கள். `அவருக்கு தனி வரவேற்பு கொடுக்க வேண்டும்’ என்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் பலரும், ‘துரை வைகோவுக்குப் பதவி கொடுக்க வேண்டும்’ என்று பேசிவருகிறார்கள். இவையெல்லாம் வைகோவுக்குத் தெரியாமலோ, அவரின் ஒப்புதல் இல்லாமலோ நடக்க வாய்ப்பேயில்லை.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால் நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல், ‘எத்தனையோ ஈட்டிகள் பாய்ந்து என் இதயம் மரத்துப்போய்விட்டது. இனி காயப்படுவதற்கு என்ன இருக்கிறது?’ என்று மழுப்புகிறார் வைகோ.

தேர்தல் சமயங்களில் பெயருக்கு ஒரு குழுவை அமைத்துவிட்டு, அத்தனை வேலைகளையும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாகத்தான் வைகோ செய்வார். இந்த முறை, அவரே களத்துக்கும் வந்துவிட்டார். ராஜ்ய சபா தேர்தலில் மாற்று வேட்பாளராக தி.மு.க-வைச் சேர்ந்தவர் நிறுத்தப்பட்டது தொடர்பாக கேள்வி எழுந்தபோது, ‘இந்த சீட் எனக்குத்தான் ஒதுக்கப்பட்டது; ம.தி.மு.க-வுக்கு அல்ல’ என்று வைகோ சொன்னதும், கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு ஸ்டாலினைச் சந்திக்க வைகோ சென்றபோது, சில தொண்டர்களும் உடன் சென்றனர். இதைக் கேள்விப்பட்ட துரை வைகோ, ‘தொண்டர்களை ஏன் அனுமதித்தீர்கள்?’ என்று வைகோவின் உதவியாளர்களைக் கடுமையாகத் திட்டியிருக்கிறார். அதிலிருந்து தாயகம் அலுவலகத்திலும் வைகோவின் வீட்டிலும் தொண்டர்களுக்கும் வைகோவின் உதவியாளர்களுக்குமான மோதல் வலுத்துவருகிறது. இந்தப் பஞ்சாயத்துகளையும் துரை வைகோதான் தலையிட்டுத் தீர்த்து வருகிறார். `ஸ்டாலினுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பார்க்கிறார் கருணாநிதி’ என்று குற்றம்சாட்டிய வைகோ, தன் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய நினைப்பது நியாயமா என்பதுதான் எங்கள் கேள்வி’’ என்றனர்.

இந்த விவகாரம் குறித்து ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவிடம் பேசினோம். ‘‘விருதுநகர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் என்ற முறையில் நான் வரவேற்கிறேன். ஒரு கட்சித் தலைவரின் மகன், வேறு கட்சியில் இருந்தால்தான் அவமானம். தலைவருக்குத் துணையாக இயக்கத்தில் இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அவருக்கு என்ன பதவி கொடுப்பது என்ற கேள்வி எழுமானால், கடந்த 15 ஆண்டுகளாக நான் வகித்துவரும் பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார். கழகத்தை வெற்றிச் சமவெளிக்குக் கொண்டுவருவதற்கு துரை வைகோ அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்” என்றார்.

என்னவோ போங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism