Published:Updated:

வாசகர்களுக்கு வணக்கம்: ஷாக் அடிக்க வைக்கும் மின் கட்டண உயர்வு!

தமிழ்நாடு மின்சார வாரியம்

கட்டண உயர்வை நியாயப்படுத்த அரசு பல ஒப்பீடுகளைச் செய்யலாம். ஆனால், சில விஷயங்களைத் தமிழக அரசு கவனிக்க வேண்டும்.

வாசகர்களுக்கு வணக்கம்: ஷாக் அடிக்க வைக்கும் மின் கட்டண உயர்வு!

கட்டண உயர்வை நியாயப்படுத்த அரசு பல ஒப்பீடுகளைச் செய்யலாம். ஆனால், சில விஷயங்களைத் தமிழக அரசு கவனிக்க வேண்டும்.

Published:Updated:
தமிழ்நாடு மின்சார வாரியம்
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்திருக்கிறது. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்குத் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நஷ்டத்தை சுட்டிக் காட்டி, `மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை' என்று கூறியிருக்கிறார் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. "மத்திய அரசு கொடுத்த அழுத்தம்தான், மின்கட்டண உயர்விற்குக் காரணம். எனினும், ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது" என்று சொல்லியிருக்கிறார் அவர்.

பாதிப்பு ஏற்படுத்தாத கட்டண உயர்வு என்று எதுவும் இருக்க முடியாது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 100 யூனிட் வரையிலான இலவச மின்சாரம் இப்போதும் தொடர்கிறது. அதைத் தாண்டிய மின் பயன்பாட்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோர் முன்பு 170 ரூபாய் கட்டணம் செலுத்தினர். அது இனி 225 ரூபாயாக இருக்கும். இப்படி எல்லோருக்குமே 12% முதல் 52% வரை மின் கட்டணம் உயர்ந்துள்ளது.

மின் கட்டணம் (Representational Image)
மின் கட்டணம் (Representational Image)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கட்டண உயர்வுக்குப் பிறகும் தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான் என்று தமிழக அரசு கூறுகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் என்று பல மாநிலங்களின் கட்டணங்களுடன் ஒப்பிட்டு இதை அரசு விவரித்துள்ளது.

கட்டண உயர்வை நியாயப்படுத்த அரசு பல ஒப்பீடுகளைச் செய்யலாம். ஆனால், சில விஷயங்களைத் தமிழக அரசு கவனிக்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டிலேயே மின் கட்டணம் குறைவாக இருக்கும் மாநிலங்களை இந்த ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியாவிலேயே வாழ்க்கைச் செலவுகள் அதிகம் இருப்பதாகக் கருதப்படும் மாநகரமான டெல்லியில் மின் கட்டணம் தமிழகத்தை விடக் குறைவு. பஞ்சாப்பில் புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அரசு, அம்மாநிலத்தில் வீட்டு உபயோகத்துக்கான மின்சாரத்தில் மாதம் 300 யூனிட் வரை இலவசமாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 'மத்திய அரசின் அழுத்தம் காரணமாக கட்டணத்தை உயர்த்தினோம்' என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், டெல்லியிலும் பஞ்சாப்பிலும் இதைச் சாத்தியமாக்க முடிந்திருக்கிறதே!

மின்சாரம் (Representational Image)
மின்சாரம் (Representational Image)

'இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க மாதா மாதம் மின் கட்டணம் கணக்கிடப்படும்' என்று தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சி அமைந்து ஓராண்டு காலம் தாண்டியும் இன்னமும் அது அமலுக்கு வரவில்லை. அதை அமல் செய்யும் உத்தேசம் இந்த அரசுக்கு இருக்கிறதா என்பதுகூட தெரியவில்லை.

`பணவீக்கமும் விலைவாசி உயர்வும் மக்களை வதைக்கிறது. இந்நிலையில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தலாமா' என்று மத்திய அரசைக் கண்டிக்கும் தி.மு.க., தன் பங்கிற்கு மின் கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்துவது சரியல்ல!