Published:Updated:

``வாக்காளர் அட்டை என்.ஆர்.சிக்குச் செல்லாது!'' - அஸ்ஸாம் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?

அஸ்ஸாம் மாநிலத்தில் என்.ஆர்.சி சட்டம் அமல்
News
அஸ்ஸாம் மாநிலத்தில் என்.ஆர்.சி சட்டம் அமல்

அஸ்ஸாம் என்.ஆர்.சி பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுள் ஜபேதா பேகம் என்பவரும் ஒருவர். என்.ஆர்.சி பட்டியலில் பெயர் விடுபட்டதால் அவரை `வெளிநாட்டவர்' என்று வெளிநாட்டுத் தீர்ப்பாயம் அறிவித்தது.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஏதுவாக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 31.12.2014-க்கு முன் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு, இந்தச் சட்டத் திருத்தம் பொருந்தும்.

ஆனால், மேற்கண்ட மூன்று நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளுக்குப் பொருந்தாது. அதேபோல மற்ற நாடுகளிலிருந்து வரும் அகதிகள், உதாரணமாக இலங்கைத் தமிழர்கள், மியான்மர் முஸ்லிம்கள் முதலானோருக்கும் இது பொருந்தாது. ஆனால், அஸ்ஸாமில் உள்ள விவகாரம் முற்றிலும் வேறானது.

அஸ்ஸாம் சி.ஏ.ஏ போராட்டம்
அஸ்ஸாம் சி.ஏ.ஏ போராட்டம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தியாவிலேயே இந்த மாநிலத்தைத்தான் அதிகமான சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் சீனர்களாக அல்லது வங்கதேசத்தவர்களாக, பர்மியர்களாகக் கூட இருக்கலாம். அஸ்ஸாம் மக்களின் 70 ஆண்டுக்கால கோரிக்கை என்னவென்றால், `அஸ்ஸாமில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இந்துவாக இருந்தாலும் சரி... முஸ்லிமாக இருந்தாலும் சரி... கிறிஸ்தவர்களா இருந்தாலும் சரி அங்கிருந்து வெளியேறியே தீர வேண்டும்' என்பதே. அதற்காக, 1951-ம் ஆண்டிலேயே, அஸ்ஸாம் குடியேற்றப் பதிவேடு ஒன்றும் தயார் செய்யப்பட்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அகில அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் பல ஆண்டுக்காலமாக சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற வேண்டி, பல கட்டங்களில் போராடி வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட வன்முறைக்கு 880 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் 80 லட்சம் சட்டவிரோதக் குடியேறிகள் உள்ளதாக அந்த மாநிலப் பொதுப்பணித்துறை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

கடைசியாக நடந்த அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, `சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டிப்பாக இந்த மாநிலத்தை விட்டு வெயியேற்றுவோம்' என்று வாக்குறுதி அளித்தது. அதோடு, அந்த மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்தது. இப்போது, அந்தக் கட்சி அங்கே வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளது. என்.ஆர்.சி சட்டம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட முதல் மாநிலம் அஸ்ஸாம்தான். இதற்காக, கடந்த 10 ஆண்டுகளாக என்.ஆர்.சி பட்டியல் அஸ்ஸாமில் தயாரிக்கப்பட்டு வந்தது. ரூ.1,200 கோடி செலவில் 52 ஆயிரம் ஊழியர்கள் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் என்.ஆர்.சி பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலிலிருந்து 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படி பெயர் விடுபட்டவர்களுள் ஜபேதா பேகம் என்பவரும் ஒருவர். என்.ஆர்.சி பட்டியலில் பெயர் விடுபட்டதால், அவரை, `வெளிநாட்டவர்' என்று வெளிநாட்டுத் தீர்ப்பாயம் அறிவித்தது. இதை எதிர்த்து, ஜபேதா பேகம் கௌகாத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் ஜபேதா பேகமுக்கு இன்னோர் அதிர்ச்சி காத்திருந்தது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்க, ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், கிராம அதிகாரி கொடுத்த சான்றிதழ், வரி கட்டிய ரசீது, நிரந்தரக் குடியுரிமை விலாசம் திருமண சான்றிதழ் உட்பட 15 சான்றிழ்களை கோர்ட்டில் ஜபேதா பேகம் சமர்ப்பித்திருந்தார். ஆனால், இந்த 15 ஆவணங்களையும் நிராகரித்த நீதிமன்றம் இவை செல்லாது என்று சொல்லி விட்டது. அப்புறம் நீதிமன்றம் கேட்ட விஷயம் என்ன தெரியுமா... "உங்க அப்பா அம்மா 1971-க்கு முன்னரே இங்கே இருந்தற்கான ஆதாரங்களைக் காட்டுங்கள்" என்று சொன்னது. அப்போதுதான் ஆடிப் போனர் ஜபேதா பேகம்.

சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம்
சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம்

அதாவது, அஸ்ஸாமில் 1971-க்கு முன்னர் பிறந்தவர்கள் தங்களின் பெற்றோர்களும் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். 1951-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அஸ்ஸாம் குடியேற்றப் பதிவேடு அல்லது 1971-ம் ஆண்டுக்கு முந்தைய வாக்காளர்கள் பட்டியலை இதற்கு ஆதாரமாகக் காட்டலாம். ஆனால், இதுவெல்லாம் ஜபேதா பேகத்திடம் இல்லை. அதேவேளையில, இந்த மாநிலத்தில் 1971-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் தங்கள் பெற்றோருக்கும் தங்களுக்குமுள்ள உறவை பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை வைத்து நிரூபித்தால் போதுமானது. இப்போது 50 வயதை நெருங்கியுள்ள ஜபேதா பேகம் கல்வியறிவு இல்லாதவர்.

பெற்றோர் குறித்த ஆவணங்கள் அவரிடம் இல்லாத காரணத்தினால் அவர் தனது குடியுரிமையை இழந்து தவிக்கிறார். ஜபேதா பேகம் கணவருக்கும் தனக்குமுள்ள உறவை 1997- ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் வழியாக நிரூபித்தார். ஆனால், `நான் இவங்களுக்குத்தான் பிறந்தேன் என்னோட பெற்றோர்களும் இங்கேதான் பிறந்தார்கள்' என்பதை நிரூபிப்பதில் தோல்வியடைந்துள்ளார். இதே மாதிரி லட்சக்கணக்கான ஜபேதா பேகங்கள் அஸ்ஸாம் முழுவதும் நிரம்பியுள்ளனர். அவர்களின் நிலைமை இனிமேல் பரிதாபம்தான்.

இது குறித்து ஜபேதா பேகத்தின் வழக்கறிஞர் சையது ரஹ்மான் கூறுகையில், "ஜபேதா பேகத்தின் அனைத்து ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படாமல் போனதால், இனிமேல் அவர் இதே நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்யலாம் அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்'' என்று தெரிவித்துள்ளார்.