Published:Updated:

`இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை; தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்' - தமிழக அரசு

சென்னை உயர் நீதிமன்றம்

`மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் என்ன சிரமம்?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, `இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை, தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்' என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.

`இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை; தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்' - தமிழக அரசு

`மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் என்ன சிரமம்?’ என்று சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, `இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை, தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்' என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.

Published:Updated:
சென்னை உயர் நீதிமன்றம்

ஆலமரம் தொண்டு நிறுவனத்தின் செயலாளரான கடலூரைச் சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர், முன்னதாக தமிழகத்தில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை குறித்து தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினார்கள்.

தமிழக அரசு
தமிழக அரசு

`தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுவதில் என்ன சிரமம், மூன்றாவதாக ஒரு மொழியைச் சேர்ப்பதில் என்ன சிக்கல்?’ என்று, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பின்பற்றப்படும் மும்மொழிக் கொள்கையைச் சுட்டிக்காட்டி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறும்விதமாக, ``இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும்" எனத் தாங்கள் முடிவெடுத்துள்ளதாகத் தமிழக அரசு கூறியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக அரசின் இந்த விளக்கத்துக்கு எதிராக, தாய்மொழியுடன் கூடுதல் மொழிகளைக் கற்பதற்காகவே தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்தி, சம்ஸ்கிருதம் மொழித் திணிப்பு எனக் கூறி அரசியலுக்காக, தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது நியாயமற்றது என வழக்கின் மனுதாரர் மனு அளித்தார். அதையடுத்து, மனுதாரரின் மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism