Election bannerElection banner
Published:Updated:

''நாம் தமிழரோடு சேர்ந்து 'தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க'வை வேரறுப்போம்!'' - மன்சூர் அலிகான் சூளுரை

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

''நாம் தமிழர் கட்சி பற்றிய கேள்விகளுக்கு ஏற்கெனவே நிறைய பதில் சொல்லிவிட்டேன்... நீங்கள் அடுத்தக் கேள்விக்கு வாங்க!'' என்கிறார் தமிழ்த் தேசிய புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான்.

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக, புதிய கட்சி தொடங்கி அரசியல் செய்வோரில் அண்மைக்கால புது வரவு நடிகர் மன்சூர் அலிகான்! இதுநாள்வரையில், நாம் தமிழர் கட்சியில் தமிழ்த்தேசியம் பேசிவந்தவர், தேர்தல் நெருக்கத்தில், 'தமிழ்த் தேசிய புலிகள் கட்சி' என்ற பெயரில், புதிய கட்சியை ஆரம்பித்து களத்தில் குதித்திருக்கிறார்!

அவரை நேரில் சந்தித்தோம்....

''புதிய கட்சி அறிவிப்பின்போதே, கண்ணியமிகு காயிதேமில்லத் பற்றி உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறீர்களே... இந்தத் திடீர் மாற்றத்துக்கான ரகசியம் என்ன?''

காயிதேமில்லத் - பெரியார்
காயிதேமில்லத் - பெரியார்

''கண்ணியமிகு என்ற வார்த்தைக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானவர் காயிதேமில்லத். அவரைப்பற்றிப் பேசுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. காயிதேமில்லத் இல்லையென்றால், தி.மு.க ஆட்சி அமைத்திருக்கவே முடியாது. ஆனால், அப்படிப்பட்டவருக்கு கலைஞர் மிகப்பெரிய துரோகங்களை செய்துவிட்டார்.

அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர், மதுவிலக்கு கொள்கையை விலக்கி பல்டியடித்துவிட்டார். துடிதுடித்துப்போன காயிதேமில்லத், 'இளைஞர் சமுதாயமே கெட்டு குட்டிச்சுவராகிவிடும்' என்று கலைஞருக்கு எதிராக எவ்வளவோ வாதாடுகிறார். ஆனாலும் கலைஞர் கேட்கவில்லை! இந்தத் துரோக சரித்திரங்களையெல்லாம் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். பெரியாரும், காயிதேமில்லத்தும் என் இரு கண்கள்!''

''திராவிடக் கட்சிகளுக்கு எதிராகப் பேசுகிற நீங்கள், தி.மு.க-வை தாக்குகிற அளவுக்கு அ.தி.மு.க-வை தாக்கிப் பேசுவதில்லையே ஏன்?''

''அ.தி.மு.க-வையும்தான் தாக்கிப் பேசுகிறோம். ஆனால், தி.மு.க செய்த துரோகங்கள் அதிகமாக இருப்பதால், நாங்களும் அதிகமாக தாக்குகிறோம். பெரியார், அண்ணா என புரட்சியை ஏற்படுத்திய தலைவர்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் 'சமதர்மம் சமுதாயம் காணப்போகிறோம்' என்று மகிழ்ச்சியடைந்தார்கள். காங்கிரஸ் மதவாத சிந்தனையோடு செயல்படுகிறது என்றெண்ணிய இந்த மக்கள் திராவிட கட்சியை முழுவதுமாக நம்பி, மொழிப்போரில் உயிரையும் கொடுத்தனர். ஆனால், இந்த அர்ப்பணிப்புகளையெல்லாம் காலில் போட்டு மிதித்துத்தள்ளிவிட்டு கலைஞரின் குடும்பம் இன்றைக்கு உலகப் பணக்காரர்களில் ஒருவராக மாறிவிட்டது. இதெல்லாம் வாட்ஸப்பிலேயே வருகிறதே... நீங்கள் படிக்கவில்லையா?''

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

''வாட்ஸப் தகவலை வைத்துக்கொண்டு தி.மு.க-வை குற்றம் சாட்டுகிறீர்களே... மற்றக் கட்சிகளில் யாருமே ஊழல் செய்யவில்லையா?''

''அ.தி.மு.க-வும் ஊழல் கட்சிதான். ஆட்சிப் பொறுப்புக்கு வந்த இந்த 6 வருடங்களில் பா.ஜ.க-வும் பல லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டது. ஆனால், ஈழத்தில் தமிழின அழிப்பு, காவிரி, கட்சத் தீவு உரிமையை விட்டுக்கொடுத்தல் என அனைத்தையும் செய்தது தி.மு.க-தானே... தமிழினத் தலைவன் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியதும் முஸ்லீம் மக்களை வஞ்சித்ததும் தி.மு.க-தானே?''

விழுப்புரம்: கடித்துக் குதறிய நாய்கள்... 28 ஆடுகள் உயிரிழந்த சோகம்... என்ன நடந்தது?

''ஊழலைப் பற்றிப் பேசுகிற உங்களைப் போன்றோர், பா.ஜ.க-வின் மதவாத அரசியல் பற்றி பேசாதது ஏன் என்று அரசியல் விமர்சகர்கள் கேட்கின்றனரே?''

''பா.ஜ.க-வின் மதவாதம் பற்றி நான் பேசவில்லை என்று எப்படி சொல்லமுடியும்? அரசியலிலிருந்தே துடைத்தெடுக்கப்பட வேண்டிய ஒண்ணாம் நம்பர் அயோக்கியத்தனமான கட்சி அது. ஓட்டு மெஷினை வெச்சு ஏமாற்றி அரசை ஆண்டுகொண்டிருப்பவர்கள். தூக்கில் போடவேண்டிய கொலைக்குற்றவாளிகள். நாங்கள் வந்து வழக்கு தாக்கல் செய்வோம்... விட்டுவிடமாட்டோம் இவர்களை!''

சீமான்
சீமான்

''நா.த கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. நீங்களும் அதே தொகுதிகளில் எதிர்த்து நின்றால், தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான வாக்குகள் சிதறிவிடாதா?''

''நீங்கள் அப்படி நினைத்துக்கொண்டால் நான் என்ன செய்வது? எங்கள் கட்சிக்கு சின்னம் பார்க்கணும், மக்களையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும்... இப்படி எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. நாம் தமிழர் கட்சி பற்றிய கேள்விகளுக்கு ஏற்கெனவே நிறைய பதில் சொல்லிவிட்டேன்... நீங்கள் அடுத்த கேள்விக்கு வாங்க!''

கர்நாடகா: 'பாலியல் வீடியோ சர்சை' - தாமாக முன்வந்து ராஜினாமா செய்த அமைச்சர்!

''பரோட்டோ மாஸ்டர், இளநீர் வியாபாரி என திண்டுக்கல் எம்.பி தேர்தலில் நீங்கள் செய்த பிரசார பாணியை இப்போது ராகுல்காந்தி காப்பியடிக்கிறாரா...?''

''பானியும் இல்லை பூரியும் இல்லை! மற்றபடி இப்போதும் அதே மாதிரிதான் பிரசாரம் செய்வேன். தமிழ் இனத்தைக் கூண்டோடு அழித்த ராகுல்காந்தி, எங்கள் இன விரோதி!''

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

''தி.மு.க - காங்கிரஸ் அல்லாத மற்றக் கட்சிகளின் ஆட்சியில், ஈழத் தமிழர்களுக்கு என்னவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது?''

''அதை நீங்கள்தான் கேட்கவேண்டும்.... ஒரு மண்ணும் நடக்கவில்லை! இப்போதுகூட 4 மீனவர்களை சுட்டுக் கொன்றது இலங்கை ராணுவம். ஆயிரம் மீனவர்கள் கடலில் உயிருக்காகப் போராடியபோது யார் வந்தார்கள்? எல்லோரும் செத்துதானே மிதந்தார்கள். பா.ஜ.க அரசு உதவியதா? நாம் தமிழர் மற்றும் தமிழ் தேசியப் புலிகள் கட்சிகள் சேர்ந்து 'தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க'வை வேரறுப்போம்!''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு