Published:Updated:

காஷ்மீரிலிருந்து பிரிந்த பின்... லடாக் மக்கள் என்ன சொல்கிறார்கள்...?

லே நகரம்

உணவு, கலாசாரம், நிலவமைப்பு, தட்பவெட்பம் என்று அனைத்து வகையிலும் முற்றிலுமாக மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டது லடாக்.

காஷ்மீரிலிருந்து பிரிந்த பின்... லடாக் மக்கள் என்ன சொல்கிறார்கள்...?

உணவு, கலாசாரம், நிலவமைப்பு, தட்பவெட்பம் என்று அனைத்து வகையிலும் முற்றிலுமாக மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டது லடாக்.

Published:Updated:
லே நகரம்

காஷ்மீர் விவகாரம் பற்றியே தேசமெங்கும் பேச்சாக இருக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து, இரண்டு யூனியன்களாகப் பிரிப்பு என்று மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் பற்றிச் சாதகமும் பாதகமுமாகக் கலந்துகட்டிவரும் சலசலப்புகும் பஞ்சமில்லை.

இவையெல்லாம் வெளியிலிருந்து காஷ்மீர் பற்றிப் பார்க்கப்படும் பார்வைகள் மட்டுமே. அங்குள்ள மக்கள் இந்த நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறார்கள், அதனால் அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கையில் என்னவிதமான பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றித் தெளிவான ஆய்வுகளோ, தகவல்களோ இல்லை. ஆனால், அங்குள்ள ஒவ்வொரு பகுதி மக்களும் இந்த நடவடிக்கைகளை ஒவ்வொருவிதமாகப் பார்க்கிறார்கள் என்பதே உண்மை.

லடாக்
லடாக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காஷ்மீர் மக்களுக்குச் சுற்றுலாதான் முக்கியமான வருவாய் தரும் தொழில், வேலை எல்லாமே. விடுதிகள், உணவகங்கள், போக்குவரத்து என்று அனைத்தும் உள்ளூர்வாசிகளிடமே இருக்கின்றன. இப்போது அந்தக் கதவுகள் காஷ்மீரி அல்லாதவர்க்கும் திறந்துவிடப்பட்டிருக்கும் நிலையில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், லடாக் பகுதியில் மக்களின் மனநிலை வேறாக இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேர்தல் இல்லை, அரசாங்க வேலையில் முன்னுரிமை கிடையாது போன்ற பல பிரச்னைகள் இருந்தாலும் இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், காஷ்மீரில் இருந்து பிரிந்ததற்காகக் கொண்டாட்டத்தில் இருக்கிறது லடாக். ஆம்...1947-லிருந்தே தனியாக வர வேண்டும் என்று போராடிவரும் லடாக்கிகளுக்கு இது ஒரு திருவிழாக் கொண்டாட்டம்தான். அங்குள்ள சூழலைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் லடாக்வாசியான ஸ்டேன்ஸின்.

லடாக்
லடாக்

‘‘உணவு, கலாசாரம், நிலவமைப்பு, தட்பவெட்பம் என்று அனைத்து வகையிலும் முற்றிலுமாக மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டது லடாக். இந்தியா, சீனா, பாகிஸ்தான் என மூன்று நாடுகளால் சூழப்பட்டிருந்தாலும் லடாக் தனித்துவமானது. இப்படியான சூழ்நிலையில் இந்தியாவோடு இருப்பது எங்களுக்குப் பெருமையே. காஷ்மீரோடு சேர்ந்திருப்பதை 1947-லிருந்தே நாங்கள் எதிர்த்துவருகிறோம். அதற்கான பலனாகத்தான் இப்போது மத்திய அரசின் முடிவைப் பார்க்கிறோம்’’ என்றார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காஷ்மீரிடமிருந்து பிரிந்ததில் சாதகமாகவும் பாதகமாகவும் எதைக் கருதுகிறீர்கள்?

ஸ்டேன்ஸின்
ஸ்டேன்ஸின்

சட்டரீதீயாக மற்றும் அரசாங்கம் சம்பந்தமாக எதுவாக இருந்தாலும் 400 கிலோ மீட்டர் தாண்டி காஷ்மீர் போக வேண்டும். அதுவே, மிகுந்த சிரமம். அப்படிப்போனாலும் லடாக்கி என்றால் வேலைகள் ரொம்பவே மெதுவாகத்தான் நடக்கும். அரசாங்கத் திட்டங்கள், சலுகைகள், நிதி என்று எதுவானாலும் காஷ்மீர்க்கு 100 சதவிகிதம் என்றால் லடாக்கிற்கு 10 சதவிகிதம் மட்டுமே வந்து சேரும்.

அதுமட்டுமன்றி, கலாசாரரீதியாகவும் மதரீதியாகவும் சிலநேரம் இருவருக்கும் ஒன்றுபட்டுப் போகாது. இப்படிப் பல சிரமங்கள் உண்டு. இப்போது இந்தக் கஷ்டமெல்லாம் முடிவுக்கு வந்துவிடும். லடாக்குக்கான திட்டங்கள், அலுவலகங்கள், சட்டங்கள் தனியாகவே உருவாக்கப்படும். திட்டங்கள் நேரடியாக எங்களைச் சேரும்போது நாங்கள் யாரையும் சார்ந்திருக்கத் தேவையில்லை. இதில்தான் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி!

35a ரத்து செய்ததால் வெளிமாநிலத்தவர்கள் இங்கே நிலம் வாங்கக்கூடும்... இது, உங்களுக்குப் பாதிப்பில்லையா?

நாங்கள் மற்ற மாநிலங்களில் நிலம் வாங்கலாம் என்கிறபோது, மற்றவர்கள் இங்கு நிலம் வாங்கினால் என்ன தவறு? அது, ஒன்றும் பெரிய விஷயமில்லை.

லடாக்
லடாக்

மற்ற பெரிய முதலாளிகள் இங்கே வரும்பட்சத்தில் காஷ்மீர், சுற்றுலாப் பயணிகளை மட்டுமே நம்பியுள்ள லடாக் மக்களுக்கு இது பாதிப்புதானே ?

இமாசலப் பிரதேசத்தில் பெரிய முதலீட்டாளர்கள் நேரடியாக வந்ததால், அங்குள்ள உள்ளூர் மக்கள் பலர் அவர்களிடமே கூலி வேலைக்குச் செல்லும் நிலையே இருக்கிறது. ஆனால், லடாக்கில் அதுபோன்று நடக்க வாய்ப்பில்லை. லடாக்கை எங்களைவிட நன்கறிந்தவர்கள் இருக்க முடியாது. ஆகையால், எவர் வந்தாலும் லடாக்கிகளுக்குப் பாதிப்பில்லை என்றே எண்ணுகிறேன். கார்ப்பரேட்டுகளின் வருகை ஒரு முன்னேற்றமே.

அப்படியானால் நிலம், கலாசாரம் என்று பல மாற்றங்கள் ஏற்படுமே... லடாக்கின் சிறப்பே லடாக் மக்கள், தனித்துவமான கலாசாரம், அதன் இயற்கை வளங்கள் மற்றும் நிலப்பரப்பும்தானே. அதற்கு ஏதும் பாதிப்பு வராதா?

நிச்சயமாக. இவை கவனத்தில்கொள்ள வேண்டியவைதான். அடிப்படையாகப் புத்தமதத்தைப் பின்பற்றும் வலுவான பாரம்பர்யமிக்க கலாசாரத்தைக் கொண்டது, இந்த நிலம். அதை எளிதில் எவரும் மாற்றிவிட முடியாது. அதேபோல் கலாசாரம், சுற்றுச்சூழல், மக்கள் வாழ்வாதாரம், இயற்கை வளங்கள் மற்றும் நிலப்பரப்பு என்று அனைத்தையும் பாதுகாக்கும் வகையில் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவரும் என்று நம்புகிறோம்.

லே ஆப்பிள் மரம்
லே ஆப்பிள் மரம்

லடாக் சட்டசபை இல்லாத யூனியன் என்ற அறிவிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதைப்பற்றிய நிறைகுறைகளை இப்போது கணிக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை, இனி எங்களுக்கென்று தனி உரிமைகள் உண்டு. அவை, எங்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்றே நம்புகிறோம்.

இதை, காஷ்மீர் மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

இந்த முடிவு, அவர்களை மிகவும் வருத்தமடையச் செய்திருக்கிறது. பா.ஜ.க மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர் காஷ்மீரிகள். இது, அவர்களுக்குச் சங்கடமான சூழ்நிலைதான். அதே சூழ்நிலையில், பா.ஜ.க-வுக்கான ஆதரவு லடாக்கில் அதிகரித்திருக்கிறது என்றே சொல்லலாம். இருந்தும் இந்த முடிவு பல நன்மைகளுக்கு வித்திடும் என்று நம்புகிறோம்.

இறுதியாக லடாக்கைக் காஷ்மீரிடமிருந்து யூனியன் பிரதேசமாக அறிவித்தமைக்கு லடாக்கிகள் பல இடங்களில் இனிப்பு வழங்கி, இசை முழங்கி கொண்டாடியதாகக் குறிப்பிட்டார் ஸ்டேன்ஸின்.

"no one saves us but ourselves. no one can and no one may. we ourselves must walk the path" என்ற புத்தரின் பொன்மொழிக்கேற்ப லடாக் தனக்கான பாதையில் பயணிக்க இருக்கிறது. அந்தப் பாதை லடாக்கிகளின் நல்லுள்ளம்போல என்றும் பசுமையாய் அமையட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism