Published:Updated:

அம்பானி எக்ஸ்பிரஸ், அதானி எக்ஸ்பிரஸ்... இந்திய ரயில்வே இனி?

விகடன் டீம்

பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்குவதற்குத் தனியாருக்கு சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிபேக் தேப்ராய் குழு பரிந்துரைத்துள்ளது

train
train

பச்சைக்கொடி காட்டிவிட்டது பா.ஜ.க அரசு. சேரன் எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஓடும் ரயில்தடங்களில் இனி அம்பானி எக்ஸ்பிரஸ், அதானி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓடலாம். அசுரபலத்தில் அரியணை ஏறியதும் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய பா.ஜ.க அரசு, ரயில்வே துறையைக் கூறுபோட்டுத் தனியாரிடம் ஒப்படைக்கும் பணியை 'தேஜஸ்' வேகத்தில் செய்துகொண்டிருக்கிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க.. http://bit.ly/2Zqtcan

இந்திய மக்களின் முக்கியமான பொதுப் போக்குவரத்தாக விளங்கிவருகிறது இந்திய ரயில்வே. தினமும் சுமார் இரண்டரைக் கோடி மக்கள் இந்திய ரயில்களில் பயணம் செய்கிறார்கள். சுமார் 13 லட்சம் ஊழியர்களைக் கொண்டிருக்கிற இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய அரசுத்துறை. இதைத் தனியாருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று நீண்டகாலமாகச் சிலர் சொல்லிவருகிறார்கள். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பும் ரயில்வேயில் முதலீடு செய்ய தனியார் முன்வரவில்லை என்பதுமே அதற்குக் காரணம்.

இப்போது 100 ரூபாய் கட்டணம் என்றால், 53 ரூபாய்தான் பயணிகளிடம் வாங்குகிறோம், மீதி 47 ரூபாயை மானியமாக அரசு கொடுக்கிறது

ஆனால் இன்றைக்கு '100 நாள் செயல்திட்டம்' என்று அறிவித்து, ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைப்பதை உறுதிசெய்துள்ளது நரேந்திர மோடி தலைமையிலான 'பா.ஜ.க - 2' அரசு. இதற்கு முன்பாக, கடந்த ஐந்தாண்டுக்கால பா.ஜ.க ஆட்சியிலேயே ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. நீண்டகாலமாக, ரயில்வே துறைக்குத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவந்தது. 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் ரயில்வே துறைக்குத் தனி பட்ஜெட் என்பது ரத்துசெய்யப்பட்டது. பின்னர், ரயில்வே துறையில் 'சீர்திருத்தங்கள்' மேற்கொள்ள பிபேக் தேப்ராய் என்பவர் தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. 'அனைத்தையும் தனியாரிடம் கொடு' என்ற தாரக மந்திரத்துடன் பல பரிந்துரைகளை அளித்தது பிபேக் தேப்ராய் குழு.

தனியார்மயத்தை இலகுவாக மேற்கொள்ள வசதியாக, 'மையமான வேலைகள்' (Core Activities), 'மையமற்ற வேலைகள்' (Non Core Activities) என ரயில்வே பணிகளை இரண்டாகப் பிரித்து, மையமற்ற வேலைகள் எதையும் ரயில்வே வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூறியிருக்கிறது பிபேப் தேப்ராய் குழு.

பயணிகள் ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்குவதற்குத் தனியாருக்கு சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பிபேக் தேப்ராய் குழு பரிந்துரைத்துள்ளது. எனவே, நிறைய தனியார் ரயில்களை அனுமதிப்பார்கள். அதனால், ரயில் கட்டணங்கள் கடுமையாக அதிகரிக்கும். அதனால், ரயில் கட்டணங்களை இப்போதே அதிகரிப்பதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள்.

rail way
rail way

அதாவது, இப்போது 100 ரூபாய் கட்டணம் என்றால், 53 ரூபாய்தான் பயணிகளிடம் வாங்குகிறோம், மீதி 47 ரூபாயை மானியமாக அரசு கொடுக்கிறது என்று சொல்கிறார்கள். தற்போது வழங்கப்பட்டுவரும் இந்த மானியத்தை, 'விட்டுக்கொடுங்கள்' என்று பயணிகளிடம் கேட்பார்கள். அப்படிச் செய்தால் தற்போதுள்ள 53 ரூபாய் டிக்கெட் என்பது, 100 ரூபாயாக உயர்ந்துவிடும். சிறிது காலத்துக்குப் பிறகு மானியத்தை முற்றிலும் ரத்துசெய்துவிடுவார்கள். அதனால், கட்டணங்கள் அதிகரிக்கும். அதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை எப்படி ஒழித்தார்களோ, அதே பாணியில் ரயில் கட்டண மானியத்தையும் ஒழித்து, கட்டணத்தை உயர்த்தப்போகிறார்கள்.

- பிபேக் தேப்ரா குழுவின் பரிந்துரையின் அத்தனை அம்சங்களுடன், அரசு எடுத்துவரும் தனியார்மய நடவடிக்கையால் ரயில்வே துறை சந்திக்கக் கூடிய விளைவுகள் குறித்த முழுமையான அலசல் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > அதானி ரயில் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறது! https://www.vikatan.com/news/travel/adani-train-is-coming-to-the-first-platform க்ளிக் செய்க http://bit.ly/2Zqtcan

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/