Published:Updated:

தனியார்மயமும் மாநில உரிமைகளும்... ரூ.20 லட்சம் கோடி யாருக்கு?

20 லட்சம் கோடி
20 லட்சம் கோடி

மாநிலங்களை யூனியன் பிரதேசங்கள் போல் பார்க்கும் மத்திய ஆட்சியாளர்கள், யூனியன் பிரதேசங்களை மாவட்டங்கள் போல் பார்க்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கி விண்வெளித் துறை, அணுசக்தித் துறை வரை தனியார்மய மாக்கப்படும் என்கிறது மத்திய அரசு. உற்சாகத்தில் திளைக்கின்றன பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்.

உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதுகூட இந்தியாவில் பெரிய பாதிப்புகள் ஏற்படாததற்கு பொதுத்துறை வங்கிகளும் பொதுத்துறை நிறுவனங்களும்தான் காரணம் என்றார்கள் பொருளாதார வல்லுநர்கள். அவற்றை தனியாரிடம் கொடுத்துவிட்டால் என்ன ஆகும்?

இதுகுறித்து, பொருளாதார நிபுணரான பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறும்போது, ''கொரோனாவுக்கும் தனியார்மயத் துக்கும் என்ன சம்பந்தம், இதில் பொருளாதார உந்துதல் எங்கே இருக்கிறது, இதை யார் கேட்டார்கள், இது யாருடைய பசியை, யாருடைய துயரத்தைப் போக்கப் போகிறது? குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு இந்தியா முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

20 லட்சம் கோடி
20 லட்சம் கோடி

எனவே, மிகப்பெரிய கொள்கை மாற்றங்களைக் கொண்டுவந்தால், மக்கள் போராடுவார்கள் என்பதைத் தெரிந்துதான், ஊரடங்கு நேரத்தில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்பது தோற்றுப்போன ஒரு கொள்கை. தனியார்மயத்தைத் தீவிரமாகச் செயல்படுத்திய நாடுகள், பெரும் சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளன. அதை கருத்தில் கொள்ளாமல் தனியார்மய நடவடிக்கைக்கு மத்திய அரசு தீவிரமாகச் செல்வது மிகவும் ஆபத்தானது" என்கிறார்.

- இதுதொடர்பான ஜூனியர் விகடன் கட்டுரையை முழுமையாக வாசிக்க > செத்துவிழும் மக்கள்... சொத்தை விற்கும் அரசு! - 20 லட்சம் கோடி யாருக்கு? https://bit.ly/36hMTSC

மாநில உரிமைகளைப் பறிக்கிறதா மோடி அரசு?

"...இவை அனைத்தும் மிகப்பெரிய கொள்கை முடிவுகள். இவற்றை தன்னிச்சையாக வெளியிட்டிருப்பதன்மூலம், 'இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்' என்ற அரசியல் சாசனத்தையே மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. எக்காரணம்கொண்டும் தனியாரை அனுமதிக்கவே கூடாது என்று சொல்லப்படும் துறைகள் உட்பட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்குத் திறந்துவிடப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமல், விவாதம் நடத்தாமல், ஒட்டுமொத்த தேசத்தையும் புரட்டிப்போடுகிற விஷயங்களை ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துவிட்டுச் செல்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மாநில அரசுகளை ஒரு பொருட்டாகவே மத்திய அரசு கருதவில்லை'' என்று மாநில உரிமைச் செயற்பாட்டாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

20 லட்சம் கோடி
20 லட்சம் கோடி

இதுகுறித்து, எழுத்தாளரும் 'தன்னாட்சித் தமிழகம் கட்சி'யின் தலைவருமான ஆழி செந்தில்நாதன் கூறும்போது, ''இந்த அறிவிப்புகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் மாநிலங்கள் என்ற ஒன்று இருப்பது மத்திய அரசுக்குத் தெரியுமா எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதிகளாக இருக்கக்கூடிய எம்.பி-க்களின் ஒப்புதல் பெற்றே இதைச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது, அரசியல் சாசனத்துக்கும் நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கும் விரோதமானது.

மாநிலங்களை யூனியன் பிரதேசங்கள் போல் பார்க்கும் மத்திய ஆட்சியாளர்கள், யூனியன் பிரதேசங்களை மாவட்டங்கள் போல் பார்க்கிறார்கள். இனி மாநிலங்களிடம் எந்த அதிகாரமும் இருக்காது. மாநிலங்களிடம் இருந்த கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளை ஏற்கெனவே உருவிவிட்டார்கள். இனிமேல் மின்சாரம், சாலைகள் போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. காவல்துறை மற்றும் கங்காணி வேலைசெய்யும் துறைகள் மட்டுமே இனி மாநில அரசுகளிடம் இருக்கும். மாநிலங்களின் கதையை முற்றிலுமாக முடித்துவிட்டார்கள்'' என்றார் ஆழி செந்தில்நாதன்.

இதுகுறித்த முழுமையான கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மாநில உரிமைகளைப் பறிக்கிறதா மோடி அரசு? - 20 லட்சம் கோடி யாருக்கு? https://bit.ly/3e2VH1f

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு