Published:Updated:

இந்தியா - சீனா - அமெரிக்கா... யாருக்கு லாபம்? - ஒரு 'ராஜதந்திர' பார்வை!

மோடி
மோடி

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் விழுந்திருக்கும் இடைவெளி யை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியுமா எனப் பார்க்கிறார் மோடி. அ

வந்தார்கள், பேசினார்கள், சென்றுவிட்டார்கள். மற்றபடி, இன்னன்ன விஷயங்கள் பேசினோம், இன்னன்ன திட்டங்கள் தீட்டியுள்ளோம், இத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளோம் என்று நரேந்திர மோடியோ ஜின்பிங்கோ தனித்தனியாகவோ இணைந்தோ திட்டவட்டமாக எதையுமே அறிவிக்கவில்லை. 'நண்பர்கள் போல் மனம்விட்டுப் பேசினோம்', 'இரு நாடுகளின் உறவில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது', 'வேறுபாடுகள் மறந்து ஒன்றாக நடைபோடுவோம்' என்று 'லாலாலா... லாலா லாலாலா' ரீதியிலான அறிக்கைகள் மட்டுமே இரு தரப்பிலிருந்தும் வெளிவந்திருக்கின்றன... விரிவான அலசல் கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2MidUwG

இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை தீர்க்கப்படவில்லை என்பது உண்மை. காஷ்மீரில் இந்தியா மேற்கொண்ட மாற்றம் சர்ச்சைக்குரியது. ஆனால், அதற்காகச் சண்டையிடுவதை விட இந்தியாவை ஒரு சந்தையாகக் கருதுவது சீனாவுக்கு அதிக லாபத்தைக் கொடுக்கும். பாகிஸ்தான், பிரச்னைக்குரிய ஒரு நாடு. இருந்தாலும், புவிசார் அரசியலில் அது ஒரு முக்கியமான கேந்திரம். அந்த நாட்டை பகைச் சக்தியாகக் காண்பதைவிட சந்தைச் சக்தியாகக் காண்பதுதானே சீனாவுக்கு உகந்தது.

இந்தியா - சீனா - அமெரிக்கா... யாருக்கு லாபம்? - ஒரு 'ராஜதந்திர' பார்வை!

அமெரிக்காவுக்கும் கிட்டத்தட்ட இதே அணுகுமுறைதான். சீனா என்றாலே காலில் வெந்நீர் கொட்டிக் கொண்டதைப்போல் துள்ளுபவர் அதிபர் டொனால்டு ட்ரம்ப். திங்கட்கிழமை காலையில் தூங்கி எழுந்ததும் அவர் அளிக்கும் உறுதிமொழி அன்று மதியம் வரை நிலைத்திருந்தாலே பெரிய விஷயம். இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் அவரையும் மெல்ல மெல்ல அசைத்துக்கொண்டுதான் இருக்கிறது சீனா. வெறுப்பையும் கோபத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த நிமிடம் வரை சீன அதிகாரிகள் வெள்ளை மாளிகை யுடன் வர்த்தக உரையாடல் களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் விழுந்திருக்கும் இடைவெளி யை நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியுமா எனப் பார்க்கிறார் மோடி. அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவைப் பலப்படுத்திக்கொண்டால் சீனாவுக்குச் செல்லவேண்டிய வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கும் அல்லவா? சில வாரங்களுக்கு முன்பு டெக்சாஸ் சென்றதும், 'அப் கீ பார் ட்ரம்ப் சர்க்கார்' என்று அவர் முழங்கியதும் இதை மனதில்வைத்துதான். தவிர, ஜின்பிங் வழியில் சீனா, அமெரிக்கா இருவருடனும் ஒரே சமயத்தில் நெருக்கமாக இருக்க முடியுமானால், இரு தரப்பினரிடமிருந்தும் பலன்களை ஈட்டிக்கொள்ள முடியுமல்லவா?

முடியும்தான். ஆனால், சீனாவுக்கு சுலபமாகக் கைகூடும் இந்த அணுகுமுறை இந்தியாவுக்குக் கடினமானதாக இருக்கிறது. ஏன்? ஓர் உதாரணத்துக்கு ஹுவேயை எடுத்துக்கொள்வோம். சீனாவின் தொழில்நுட்ப அசுர நிறுவனமான ஹுவேக்கு இந்தியாவில் இடம் கொடுக்க வேண்டும் என்று சீனா சிறிது காலமாகவே இந்தியாவை நச்சரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 5ஜி ஒளிக்கற்றை ஏலம்விடும்போது ஹுவேக்கு இடம் ஒதுக்கவேண்டும் என்று ஜின்பிங்கும் மோடியிடம் கேட்டிருக்கக்கூடும். ஹுவேயை அனுமதித்தால் இங்கு உள்ள சந்தை பாதிக்கப்படலாம் என்று இந்தியா தயங்குகிறது.

MODI
MODI

ஜின்பிங் சென்னையில் இருந்த அதே நேரம், அமெரிக்க செனெட்டர் ஒருவர் டெல்லிக்கு வந்திருந்தார். ஜின்பிங் விமானம் ஏறிக் கிளம்புவதற்குள் அவர் இந்தியாவின் கையைப் பிடித்து முறுக்க ஆரம்பித்துவிட்டார். 'நீங்கள் என்ன பேசினீர்களோ, ஏது பேசினீர்களோ எங்களுக்குத் தெரியாது. ஹுவேயை இந்தியாவுக்குள் அனுமதித்தால், நம் உறவில் விரிசில் ஏற்பட்டுவிடும். எங்களிடமிருந்து எந்த உளவுத் தகவலும் உங்களுக்குக் கிடைக்காமல்போகும்... ஜாக்கிரதை!' என்றரீதியில் அவர் எச்சரித்திருக்கிறார். சீனாவை இதேபோல் அமெரிக்காவோ இந்தியாவோ பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த நாடோ கையைப் பிடித்து முறுக்க முடியாது என்பதுதான் சீனாவின் மிகப்பெரிய பலம். அகண்ட சீனா என்பது ஜின்பிங்கின் கனவு என்றால், அகண்ட பாரதம் மோடியின் கனவு. இங்கே காஷ்மீர் என்றால், அங்கே ஹாங்காங். மோடி, ஜின்பிங் இருவருக்குமே ஒற்றைக் கலாசாரம் ஏற்புடையதாக இருக்கிறது.

- என்ன நடந்தது? என்ன நடக்கவில்லை? இனி என்ன நடக்கும்? இந்திய - சீன ஒற்றுமைகள் என்னென்ன? இந்திய - சீன வேற்றுமைகள் என்னென்ன? யாருக்கு லாபம்? - இப்படி பல கோணங்களில் ராஜதந்திர பார்வையில் நறுக்கென அலசும் மருதனின் சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > இந்தியா - சீனா தலைவர்கள் சந்திப்பு... என்ன நடந்தது, என்ன நடக்கப்போகிறது? https://www.vikatan.com/government-and-politics/politics/discuss-about-modi-and-xi-jinping-meeting-whats-going-to-happen

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு