Published:Updated:

அமித் ஷா இந்தியைத் தூக்கிப் பிடிப்பது ஏன்? - அரசியல் பின்புலக் கணக்குகள்!

Amit Shah
Amit Shah

இந்தி தெரியாமல் இருந்த இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட சிலரை வேறு துறைக்கு மாற்றியதுதான்!

"பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, 'ஒரே நாடு... ஒரே மொழி' என்று அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்துவிட்டார். இந்துத்துவ சிந்தனைகொண்டவரின் எண்ணத்தையே அமித் ஷாவின் பேச்சு வெளிப்படுத்தியது. ஆனால், இந்தி விஷயத்தை அமித் ஷா கையாண்டவிதம்தான் பல்வேறு எதிர்ப்புகளையும் கிளப்பிவிட்டது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2mnUAUv

'ஒரே நாடு... ஒரே மொழி' என்பதிலும், அந்த மொழி இந்தி மொழியாக இருக்க வேண்டும் என்பதிலும் பி.ஜே.பி தலைமை உறுதியாக இருக்கிறது. புதிய கல்விக்கொள்கையின் திட்டங்களும் இதற்குத்தான் மறைமுகமாக உதவுகின்றன. அடுத்து, 'அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் ஆங்கில மொழிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டு, இந்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்று ஏற்கெனவே வாய்மொழி உத்தரவு பல்வேறு துறைகளுக்குப் போயிருக்கிறதாம்."

"குஜராத்தியான அமித் ஷா, ஏன் இந்தியை இப்படித் தூக்கிப் பிடிக்கிறார்?"

பின்புலத்தில் அரசியல் கணக்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது, மோடிக்குப் பிறகு பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு அமித் ஷாவுக்குத்தான் இருக்கிறது

"உண்மைக் காரணம் என்னவென்றால், அவருக்கு ஆங்கிலத்தில் பெரிய புலமை கிடையாது. அவர் சரளமாகப் பேசும் மொழிகள், குஜராத்தியும் இந்தியும் மட்டும்தான். ஆனால், அவர் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது பத்து நாளில் ஒரு ஃபைல்கூட இந்தி மொழியில் வரவில்லையாம். இப்போது அறுபது சதவிகிதக் கோப்புகள் இந்தி மொழியில்தான் வருகின்றனவாம்.

ஆங்கிலத்தில் வந்த கோப்புகளை தன் உதவியாளர்கள் மூலம் மொழிமாற்றம் செய்தே கையெழுத்துப் போட்டுவந்திருக்கிறார். அதற்குப் பிறகு தான் இந்தியில் கோப்பு அனுப்புமாறு உள்துறை அமைச்சகத்தில் இருந்து உத்தரவு போயிருக்கிறது. அதைவிடக் கொடுமை, உள்துறை அமைச்சகத்தில் இந்தி தெரியாமல் இருந்த இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட சிலரை வேறு துறைக்கு மாற்றியதுதான்!

"அவருக்கு மட்டும்தான் ஆங்கிலத்தில் பிரச்னையா?"

"இல்லை இல்லை... அமைச்சரவையில் உள்ள பலருக்கும் ஆங்கிலத்தில் உரையாடுவதில் பிரச்னை இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் ஆங்கிலத்துக்கு இடமில்லை என்பதால், அங்கு பட்டைத்தீட்டப் பட்டவர்கள் ஆங்கிலத்தில் தடுமாறுகிறார்கள்.

Amit Shah
Amit Shah

இதன் பின்புலத்தில் அரசியல் கணக்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது, மோடிக்குப் பிறகு பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளராகும் வாய்ப்பு அமித் ஷாவுக்குத்தான் இருக்கிறது. அதில் வெற்றியடைய வேண்டுமென்றால், இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள 226 நாடாளுமன்றத் தொகுதிகளின் பலம் அவசியம். ‘இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும்’ எனப் பேசியிருப்பதன் மூலமே, இந்தி பேசும் பெரும்பான்மை வாக்காளர்களிடம் 'குஜராத்தி'யான தான் நெருங்க முடியும் என அமித்ஷா கருதுகிறாராம்."

- இதன் விரிவான பின்னணியுடன், இந்த மிஷனுக்காக மேற்கொள்ளப்படும் விஷயங்களையும் அடுக்கும் ஜூனியர் விகடனின் கழுகார் பகுதியை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: இந்தி தோல்போர்த்திய அமித் ஷா! - பிரித்தாளும் பி.ஜே.பி https://www.vikatan.com/government-and-politics/politics/mr-kazhugar-about-amit-shahs-take-on-hindi-being-the-national-language

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு