Published:Updated:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி :நாகலாந்து போராளிகளை ஒடுக்கப்போன உளவு அதிகாரி தமிழகத்திற்கு வருவது ஏன்?

பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி

ஐ.பி.எஸ் அதிகாரியான அலெக்ஸாண்டர் கவர்னராக இருந்தபோது, அவருக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் நிகழ்ந்த பனிப்போர் பிரசித்தமானது. இப்போது மீண்டும் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி தமிழ்நாட்டின் ஆளுநர் ஆகிறார். கருணாநிதிக்கு அலெக்ஸாண்டர் போல ஸ்டாலினுக்கு சிக்கல் கொடுப்பாரா ஆர்.என்.ரவி?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி :நாகலாந்து போராளிகளை ஒடுக்கப்போன உளவு அதிகாரி தமிழகத்திற்கு வருவது ஏன்?

ஐ.பி.எஸ் அதிகாரியான அலெக்ஸாண்டர் கவர்னராக இருந்தபோது, அவருக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் நிகழ்ந்த பனிப்போர் பிரசித்தமானது. இப்போது மீண்டும் ஒரு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி தமிழ்நாட்டின் ஆளுநர் ஆகிறார். கருணாநிதிக்கு அலெக்ஸாண்டர் போல ஸ்டாலினுக்கு சிக்கல் கொடுப்பாரா ஆர்.என்.ரவி?

Published:Updated:
பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கும் ஆர்.என்.ரவியை ''தமிழ்நாடு வரவேற்கிறது'' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார். ஆனால், இன்னொரு பக்கம் நாகா சமூகத்தினரோ, நாகாலாந்திலிருந்து ரவி வெளியேறுவதைக் கொண்டாடுகிறார்கள். நாகாலாந்து போராளிகள் ஏன் கொண்டாடுகிறார்கள், நாகாலாந்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஏன் மாற்றப்பட்டிருக்கிறார் ரவி?!

முன்னாள் காவல்துறை அதிகாரியான ரவி, பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமானவர். அதனாலேயே அவர் தமிழகம் வந்திருப்பதாக டெல்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவது புதிதல்ல. பி.சி.அலெக்ஸாண்டர், பி.எஸ்.ராமமோகன் ராவ் போன்றோர் இதற்குமுன் இருந்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டர் கவர்னராக இருந்தபோது, அவருக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் நிகழ்ந்த பனிப்போர் பிரசித்தமானது. ஸ்டாலினுடன் புரோஹித் இணக்கமான உறவில் இருந்தார். ஆனால், கருணாநிதிக்கு அலெக்ஸாண்டர் போல ஸ்டாலினுக்கு ரவி சிக்கல் கொடுப்பாரா?

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேரளா டு டெல்லி!

பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்த ரவீந்திர நாராயண் ரவி, கல்லூரி படிப்பை முடித்ததும் பத்திரிகையாளர் ஆகவே ஆசைப்பட்டார். சில மாதங்கள் அப்படிப் பணியாற்றியவர், அதன்பின் ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றார். கேரளா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தார். பக்கத்து மாநிலம் என்பதால், தமிழக அரசியல் சூழல் பற்றி அப்போதே அவருக்குத் தெரியும்.

அதன்பின் சி.பி.ஐ பணிக்காக டெல்லி போனார். அவரது புலனாய்வுத் திறமை, விரைவிலேயே உளவுத் துறையான இன்டெலிஜென்ஸ் பீரோ (ஐ.பி)வுக்கு அவரை அழைத்துப் போனது. காஷ்மீரிலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கையாளும் அதிகாரியாக ஐ.பி-யில் அவர் இருந்தார். தற்போதைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுக்கு நம்பிக்கையான அதிகாரியாக மாறினார். 2012-ம் ஆண்டு ஐ.பி சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாகாலாந்து பேச்சுவார்த்தையும், சிக்கலும்!

2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரானதும் ரவிக்கு வசந்த காலம் ஆரம்பித்தது. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பேற்ற அஜித் தோவல், தனது நம்பிக்கைக்குரிய ரவியை அழைத்துக் கொண்டார். உளவுத்துறைக்கான பிரதமர் அலுவலகத்தின் கூட்டுக் கமிட்டியின் தலைவராக ரவி நியமிக்கப்பட்டார்.

அந்த நேரத்தில்தான் நாகாலாந்து பிரச்னையைத் தீர்க்கும் எண்ணம் மோடிக்கு வந்தது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தனிநாடு கேட்டு பெரும் போராட்டம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் நாகாலாந்திலும், மணிப்பூர், அசாம், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும், அண்டை நாடான மியான்மரிலும் நாகா மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து தனி நாகாலாந்து உருவாக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை. இதற்காக ஆயுதம் ஏந்திப் போராடும் குழுக்கள் பலவும் தனி அரசாங்கமே நடத்துகின்றன. வரி வசூலிப்பது உட்பட அரசு செய்ய வேண்டிய பல வேலைகளை இவர்கள் செய்கிறார்கள். வடகிழக்கில் மற்ற மாநிலங்களில் அமைதி திரும்பிவிட்டாலும், நாகாலாந்து மட்டும் இன்னமும் கொந்தளிப்பாக இருக்கிறது.

ஆர்.என்.ரவி
ஆர்.என்.ரவி

இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஆர்வம் காட்டினார் மோடி. அனுபவம் வாய்ந்த தலைவர்களையும் அதிகாரிகளையும் கூட புறக்கணித்து விட்டு, ரவியிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தார். நாகாலாந்து குழுக்களுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் மத்தியஸ்தராக 2014 ஆகஸ்ட்டில் ரவி நியமிக்கப்பட்டார். போன வேகத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்தி, முய்வா என்பவர் நடத்திவரும் நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுடன் (என்.எஸ்.சி.என்) ஒப்பந்தம் போட்டார். மோடி முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், வடகிழக்கில் நிரந்தர அமைதியைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகர் பதவியும் ரவிக்குக் கிடைத்தது. 2019 ஆகஸ்ட்டில் நாகாலாந்துக்கு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். அதன்பிறகே அவரை சர்ச்சைகள் சுற்ற ஆரம்பித்தன. ‘’நாங்கள் கையெழுத்து போட்ட ஒப்பந்தத்தில் நிறைய திருத்தங்களைச் செய்து போலி ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கிவிட்டார்’’ என்று ரவியை என்.எஸ்.சி.என் அமைப்பு குற்றம் சாட்டியது. ‘உண்மையான ஒப்பந்தம் இதுதான்’ என வேறொரு பிரதியை அந்த அமைப்பு காட்டியது. ‘இனி ரவியுடன் பேச மாட்டோம்’ என்றது.

ரவியும் சும்மா இல்லை. ‘’நாகாலாந்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. ஆயுதம் ஏந்திய தலைமறைவு கும்பல்கள் தனி அரசாங்கம் நடத்துகிறார்கள். வரி என்ற பெயரில் மக்களிடம் பணம் பிடுங்குகிறார்கள். சட்டப்படி இனி கவர்னரைக் கேட்காமல் நீங்கள் மாவட்ட அளவிலான அதிகாரிகளை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது’’ என்று மாநில முதல்வருக்குக் கடுமையான கடிதம் ஒன்றை எழுதினார். இத்தனைக்கும் அங்கு ஆள்வது பா.ஜ.க கூட்டணி அரசுதான்.

அதன்பின் பேச்சுவார்த்தைக்கு உளவுத்துறையான ஐ.பி அதிகாரிகள் டெல்லியிலிருந்து வந்தனர். ‘‘எங்களுக்கு தனி அரசியல் சட்டம், தனிக் கொடி என்பதை ஒப்புக்கொண்டால்தான் இனி பேச்சு’’ என பிடிவாதம் காட்ட ஆரம்பித்தார் முய்வா. இப்படி அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முட்டுச்சந்தில் நிற்க, கப்லாங் என்பவர் தலைமையிலான இன்னொரு என்.எஸ்.சி.என் குழுவுடன் மத்திய அரசு போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது.

மு.க.ஸ்டாலின்!
மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் ஆளுநர்!

நாகாலாந்தின் பெரிய குழுக்கள் எதுவுமே அமைதிக்காக அவருடன் பேசத் தயாராக இல்லை. அவரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என கேட்டனர். ‘’அவர் இல்லாவிட்டால்தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்’’ என்று அடம் பிடித்தன. தனக்குப் பிடித்த முன்னாள் அதிகாரிகளை முக்கியமான பொறுப்புகளில் வைத்து அழகு பார்க்கும் மோடிக்கு, ரவியை விட மனசில்லை. இந்நிலையில்தான் ரவி தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

‘’உளவுத்துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்தவர், ஆயுதம் ஏந்திய குழுக்களையே கடுமையாக நடத்தியவர், ஆளும் கூட்டணி அரசு ஒன்றையே சட்டம் ஒழுங்கு விஷயத்தில் கடுமையாக எச்சரித்தவர்’’ என்ற அடையாளங்களுடன் அவர் தமிழகம் வருகிறார். தீவிரவாதத் தாக்குதல் ஆபத்து அதிகம் இருந்த நாகாலாந்திலேயே அடிக்கடி சுற்றுப்பயணம் போன பழக்கமுள்ள ரவி, நிச்சயம் பன்வாரிலால் புரோஹித் போல அமைதியாக இருக்க மாட்டார்.

ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் நேரத்தில், இன்னொரு முன்னாள் போலீஸ் அதிகாரி தமிழக கவர்னர் ஆகியுள்ளார். பிரதான ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கு எதிராக வழக்குகளை தி.மு.க அரசு முடுக்கிவிடும் நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றும் நிலையில், ரவியின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism