Published:Updated:

தேனி:'கொரோனா காலத்திலும் வங்கி வாசலில் முதியவர்கள்... வீடு தேடி வருமா உதவித்தொகை?'

வங்கி வாசலில் காத்திருக்கும் முதியவர்கள்
வங்கி வாசலில் காத்திருக்கும் முதியவர்கள்

கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாதாந்தர உதவித்தொகை பெற, வங்கி வாசலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகம் முழுவது கொரோனா இரண்டாம் அலை காரணமாக, மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்துவருகிறது. முதியவர்கள் முதல் சிறுவர்கள்வரை கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு தேனி மாவட்டமும் விதிவிலக்கு அல்ல. தேனி மாவட்டத்தில் தினசரி கொரோனா பதிப்பு 400-ஐ தொட்டுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தும்வருகிறது. இப்படியான சூழலில், வயதான முதியவர்களுக்கு அரசு வழங்கும் மாதாந்தர உதவித்தொகை பெற, முதியவர்கள் வங்கி வாசலில் நெடு நேரம் காத்திருக்கின்றனர்.

வங்கி வாசலில் காத்திருக்கும் முதியவர்கள்
வங்கி வாசலில் காத்திருக்கும் முதியவர்கள்

தேனி நகர், அல்லிநகரம் பகுதிகளிலுள்ள வங்கியில், நேற்று காலை முதலே முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அதிகமானோர் காத்திருந்தனர். காலை 10 மணிக்குத்தான் வங்கி திறக்கப்படும் என்றாலும்கூட, காலை 9 மணிக்கே வந்துவிடும் முதியவர்கள், 1 மணி வரை காத்திருந்து தங்களது உதவித்தொகையை வாங்கிச் செல்கின்றனர். இதனால், அவர்கள் எளிதில் கொரோனா தொற்றுக்கு ஆளாக நேரிடும் எனக் கருத்து தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், அரசுக்கு கோரிக்கை ஒன்றையும் வைக்கின்றனர்.

இது தொடர்பாக நம்மிடையே பேசிய சமூக ஆர்வலர்கள், “முதியவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு, அதை ஏ.டி.எம் கார்டு மூலம் எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தால், முதியவர்களின் வீட்டில் உள்ளவர்கள் அந்தப் பணத்தை எடுத்துகொள்ள வாய்ப்பு உள்ளது. அதனால்தான், முதியவர்களே நேரடியாக வங்கிக்கு வந்து அவர்கள் கையால் பணத்தைப் பெற வழிவகை செய்யப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், தற்போது அவர்கள் வங்கிக்கு வருவது பாதுகாப்பானதாக இருக்காது.

தேனி: கம்பம் வழியாக கேரளா செல்ல `கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்! - ஏலக்காய் விவசாயிகள் வேதனை
வங்கி வாசலில் காத்திருக்கும் முதியவர்கள்
வங்கி வாசலில் காத்திருக்கும் முதியவர்கள்

கடந்த ஆண்டு, இதேபோல கொரோனா தொற்று அதிகரித்த நேரத்தில், வங்கி ஊழியர்கள் உதவியுடன் முதியவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில், இந்திய அஞ்சல்துறையும் இணைந்துகொண்டு, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அவர்கள் வீடுகளுக்கே சென்று கொடுத்தனர். அதேபோல, இப்போதும் செய்ய வேண்டும். இதுவே, புதிதாக பொறுப்பேற்கவிருக்கும் அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை” என்றனர்.

அரசு நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரைக்கு