Published:Updated:

`சம்பளம் பேசி முடிவெடுக்கப்படும்!'- மேலும் 5 நாள்கள் விடுமுறை அறிவித்தது அசோக் லேலண்ட்

அசோக் லேலண்ட் ( vikatan )

அசோக் லேலண்ட் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகப்பயன்பாட்டு வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்ட தொய்வு நிலை தொடர்வதால் வேலையில்லா நாள்களுக்கான அறிவிப்பை மேலும் தொடர்வதாகக் தெரிவித்துள்ளது.

Published:Updated:

`சம்பளம் பேசி முடிவெடுக்கப்படும்!'- மேலும் 5 நாள்கள் விடுமுறை அறிவித்தது அசோக் லேலண்ட்

அசோக் லேலண்ட் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகப்பயன்பாட்டு வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்ட தொய்வு நிலை தொடர்வதால் வேலையில்லா நாள்களுக்கான அறிவிப்பை மேலும் தொடர்வதாகக் தெரிவித்துள்ளது.

அசோக் லேலண்ட் ( vikatan )

இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலையால் ஆட்டோமொபைல் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அசோக் லேலண்ட் போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள், மாதத்தில் குறிப்பிட்ட சில நாள்களில் உற்பத்தியை நிறுத்திவிட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கின்றன. இதைச் சரிக்கட்டும் முயற்சியாக சமீபத்தில் கார்ப்பரேட் வரி மற்றும் ஜி.எஸ்.டி வரிகளைக் குறைத்து அறிவிப்புகளை வெளியிட்டது.

அறிவிப்பு
அறிவிப்பு
vikatan

வரிக்குறைப்பு அறிவிப்புகள் மூலம் ஆட்டோமொபைல் துறை புத்துணர்வு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசோக் லேலண்ட் நிறுவனம் இப்போது மீண்டும் 5 வேலையில்லா நாள்களை அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த மாதத்தில் அதன் வெவ்வேறு உற்பத்திக்கூடங்களையும் சேர்த்து மொத்தம் 59 நாள்களை வேலையில்லா நாள்களாக அறிவித்திருந்தது.

அந்த நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வணிகப்பயன்பாட்டு வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்ட தொய்வு நிலை தொடர்வதால் வேலையில்லா நாள்களுக்கான அறிவிப்பை மேலும் தொடர்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 28.09.2019, 01.10.2019, 08.10.2019, 09.10.2019 மற்றும் 30.09.2019 ஆகிய 5 நாள்கள், வேலையில்லா நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நாள்களுக்கான சம்பளம் குறித்து அசோக் லேலண்ட் தொழிலாளர் சங்கத்துடன் பேசி முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்கூடம்
தொழிற்கூடம்
vikatan

ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு, ஓலா, ஊபர் போன்ற வாகனச்சேவை நிறுவனங்களின் வளர்ச்சி, அதிக பார்க்கிங் கட்டணம் என்று வெவ்வேறு காரணங்களை மத்திய அமைச்சர்கள் கூறினார்கள். இன்னமும் இப்படி காரணங்களைக் கூறிக்கொண்டிருக்காமல், சரியான தீர்வை நோக்கிச் செல்வதே இந்தத் துறைசார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலத்துக்கு நன்மைதரும் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.