Published:Updated:

டாஸ்மாக்கைத் திறக்காமல் இப்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா? #DoubtofCommonMan

டாஸ்மாக் | TASMAC

மதுக்கடைகளைத் திறக்காமல் நம்மால் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா என்ற கேள்வி ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் எழுகிறது. இதற்கு பேராசிரியர் ஜோதி சிவஞானம் பதிலளிக்கிறார்.

Published:Updated:

டாஸ்மாக்கைத் திறக்காமல் இப்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா? #DoubtofCommonMan

மதுக்கடைகளைத் திறக்காமல் நம்மால் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா என்ற கேள்வி ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் எழுகிறது. இதற்கு பேராசிரியர் ஜோதி சிவஞானம் பதிலளிக்கிறார்.

டாஸ்மாக் | TASMAC
விகடனின் #DoubtofCommonMan பக்கத்தில் ``ஊரடங்கு காலத்தில்கூட டாஸ்மாக்கைத் திறக்காமல் தமிழக அரசால் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாதா? தமிழ்நாட்டின் வருவாயில் டாஸ்மாக்கின் பங்குதான் என்ன?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் விகடன் வாசகர் கலைச்செல்வி.
Doubt of a common man
Doubt of a common man

பொருளாதாரத்தை உயர்த்த டாஸ்மாக்கில் கிடைக்கும் வருவாய் உதவியாக இருந்தாலும் அதனால் காலங்காலமாகப் பல குடும்பங்களில் நிம்மதியற்ற நிலை உள்ளது. ஊரடங்கு விதிகளில் தளர்வுகளை ஏற்படுத்திவரும் மாநில அரசு படிப்படியாக அத்தியாவசியப் பொருள்களின் வணிகத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடிவெடுத்து நடைமுறைப்படுத்துகையில் ஒரு கட்டத்தில் மதுக்கடைகளையும் திறக்க உத்தரவிட்டது. பல குடும்பங்கள் பாதிக்கப்படும் என்ற நிலை அறிந்தும் அரசு இவ்வாறு செய்ததன் நோக்கம்தான் என்ன. மதுக்கடைகள் மூலம்தான் அரசுக்கு வருவாய் கிடைக்கிறதா? மதுக்கடைகளைத் திறக்காமல் நம்மால் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாதா என்ற கேள்வி ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் எழுகிறது. இக்கேள்விகளுக்கு பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான ஜோதி சிவஞானம் பதிலளித்தார்.  

"இந்தப் பேரிடர் காலத்தில் அரசு எந்திரத்தை இயக்க வரி வருவாய் மிக அவசியமான ஒன்று. அதற்காக டாஸ்மாக்கில் இருந்து ஒட்டுமொத்த வருவாய் வருவதாக அனைவரும் தப்புக்கணக்கு போடுகிறார்கள். மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயில் 25% டாஸ்மாக்கில் இருந்தும் 25% பெட்ரோல், டீசல் விற்பனையில் இருந்தும் கிடைக்கிறது. மற்ற அனைத்துத் தொழில்களில் இருந்து 50% வருவாய் கிடைக்கிறது. தற்போது நாடே முடங்கியுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் டாஸ்மாக்கில் இருந்து கிடைக்கும் வருவாயை அரசு பெரிதும் எதிர்பார்த்து உள்ளது. 

அதே சமயத்தில் அவசியமான பொருள், அவசியமற்ற பொருள் என்ற பொருள்களின் பட்டியலை மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்குகிறது. இதில் மருந்து, உணவு, பால் வரிசையில் மதுவையும் அவசியமான பொருள்களின் பட்டியலில் இணைத்துள்ளார்கள். மத்திய அரசின் ஒப்புதல் மூலமே மாநில அரசு மதுக்கடைகளைத் திறந்துள்ளது. மத்திய அரசின் செயலை எதிர்த்து கேரளா உட்பட ஒரு சில மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறக்க மறுத்துள்ளன. அந்த மாநிலங்கள் எல்லாம் வேறு வேறு வழிகளில் கிடைக்கும் வருவாயில் மக்களை வழிநடத்தி சமாளிக்கத்தான் செய்கிறார்கள்.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

தமிழ்நாட்டில் டாஸ்மாக்கைத் திறக்காமல் நிதி பற்றாக்குறையை நிச்சயம் சமாளிக்க முடியும். சிறு சிறு சிக்கல்களை காண நேர்ந்தாலும் தமிழ்நாடு அரசால் சமாளிக்க முடியும். நம் மாநில அரசுக்கு வர வேண்டிய பணம் மத்திய அரசிடம் உள்ளது. நிலுவைத்தொகை, ஜி.எஸ்.டி-க்கான பணம் டிசம்பர் மாதம் வரைதான் தந்துள்ளனர். இந்த வருடத்திற்கான வரி வருவாய் மீதம் உள்ளது. மாநிலங்களுக்கென பேரிடர் காலத்தில் உதவ வேண்டிய தொகை மத்திய அரசிடம் உள்ளது. இதையெல்லாம் மத்திய அரசு சிறிது சிறிதாக மாநிலங்களுக்குக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் மாநிலங்களுக்கென எந்த வருவாயும் இல்லாத இக்காலகட்டத்தில் மத்திய அரசிடம் ஆறு மாதத்திற்கு தேவையான தொகையை மாநிலங்களுக்கு தருமாறு கேட்கிறார்கள். ஆனால், மத்திய அரசு தர மறுத்துவருகிறது. எனவே, மாநில அரசு தொடர்ந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்து நமக்குக் கிடைக்க வேண்டிய தொகையை வாங்கினால், அந்தத் தொகையே மக்களை வழிநடத்த போதுமானதாக இருக்கும்.

நம் மாநிலத்திற்கு 33 சதவிகிதம் வருவாய் மத்தியில் இருந்துதான் வர வேண்டும். அவை சரியாகக் கிடைத்தால் டாஸ்மாக்கை திறக்காமலேயே அரசால் சமாளிக்க முடியும்.
Doubt of a common man
Doubt of a common man

எனவே மாநில அரசு டாஸ்மாக் நடத்தும் கஷ்டத்தைக் கைவிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதில் அக்கறை காட்டலாம். மேலும் மத்திய அரசிடமிருந்து கடன் வாங்கலாம். இது மாநில அரசுக்கு இக்காலகட்டத்தில் இன்னொரு வாய்ப்பாக உள்ளது.

Ooty Tasmac
Ooty Tasmac

ஊரடங்கினால் அரசுக்கு சேமிப்பும் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிகளை மூடினார்கள். அதோடு சத்துணவு வழங்குவதையும் நிறுத்தியுள்ளனர். எனவே, இதனால் அந்தப் பணம் அரசுக்கு சேமிப்புதான். மற்ற துறைகளின் செலவுகளும் குறைந்துள்ளன. தற்போது அரசும் சிக்கன நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளதால் மேலும் செலவு குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. கேரள அரசு, மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி வரி வருவாயை தரவில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகப்போவதாக அறிவித்துள்ளது. மேலும், அம்மாநிலத்தின் முதலமைச்சர்  கேரளாவில் பூரணமாக மக்கள் குணம் அடைந்த பின்புதான்  மதுக்கடைகளைத் திறப்போம் என்று அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவாய் நிதியை பெறுவதன் மூலமே இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க முடியும்" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of a common man
Doubt of a common man