Published:Updated:

``தீபாவளி வருமானம் ரூ.3 கோடி!” தெற்கு ரயில்வேயிடம் பயணிகள் எதிர்பார்ப்பது என்ன?

ரயில்

திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான சிறப்பு ரயில்கள் 100 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி பயன்படுத்தப்பட்டுள்ளன.

Published:Updated:

``தீபாவளி வருமானம் ரூ.3 கோடி!” தெற்கு ரயில்வேயிடம் பயணிகள் எதிர்பார்ப்பது என்ன?

திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான சிறப்பு ரயில்கள் 100 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரயில்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு ரூ 2.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. பல்வேறு ரயில் நிலையங்களில் காலியாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ரயில்களைக் கொண்டு மேற்கண்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டது முக்கியமானது.

கூட்டம் அலை மோதிய ரயில்கள்
கூட்டம் அலை மோதிய ரயில்கள்

கடந்த அக்டோபர் 24-ம் தேதி தீபாவளி பண்டிகைக்காக சென்னை,பெங்களூரிலிருந்து சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்டது.

தெற்கு ரயில்வேயால் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மக்களுக்கு எந்தளவுக்கு பயன்பட்டது? ரயில்வேக்கு கிடைத்த வருவாய் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சார்ந்த சமூக ஆர்வலரும், ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினருமான பாண்டியராஜா ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு தெற்கு ரயில்வே அதிகாரி ரவீந்திரன் அளித்த பதிலில், ``அக்டோபர் 18-லிருந்து நவம்பர் 3 வரை மொத்தம் 34 ரயில்கள் இயக்கப்பட்டதில், 19 ரயில்கள் தெற்கு ரயில்வே மூலமாகவும், 15 ரயில்கள் மற்ற மண்டலங்கள் மூலமாக தெற்கு ரயில்வே எல்லைக்குள் இயக்கப்பட்டன.

பெரும்பாலான ரயில்கள் தாம்பரத்திலிருந்து திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், கொச்சுவேலி (திருவனந்தபுரம்) வரையில் இயக்கப்பட்டன. மேலும், சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் வரை செல்லும் ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே

திருநெல்வேலி, நாகர்கோவில், கண்ணூர் ஆகிய ஊர்களிலிருந்து பெங்களூருக்கும், தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கும், தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, எர்ணாகுளம், மங்களூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலிருந்து வட மாநில நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இரு மார்க்கங்களிலும் சேர்த்து,

  • தாம்பரம் - திருநெல்வேலி ரூ. 22.43 லட்சம்,

  • திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் ரூ. 22.3 லட்சம்,

  • தாம்பரம் - நாகர்கோவில் ரூ. 18.2 லட்சம்,

  • கொச்சுவேலி - தாம்பரம் ரூ. 17.71 லட்சம்,

  • எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் ரூ. 17.01 லட்சம்,

  • தாம்பரம் - திருநெல்வேலி ரூ. 11.56 லட்சம்,

  • சென்னை - ராமேஸ்வரம் ரூ. 11.29 லட்சம்,

  • திருச்சி - தாம்பரம் ரூ. 2.62 லட்சம் என வருவாய் கிடைத்துள்ளது.

மொத்த வருமானமாக ரூ 2.96 கோடி...

மற்றொரு மார்க்கத்தில்,

  • நாகர்கோவில் - பெங்களூரு ரூ. 9 லட்சம்,

  • திருநெல்வேலி - தானாப்பூர் ரூ. 53.8 லட்சம்

வருமானமாகக் கிடைத்துள்ளது. இது தவிர மற்ற ரயில்வே மண்டலங்கள் மூலம் இயக்கப்பட்ட ரயில்கள் மூலம் ரூ. 1 கோடியும் மொத்த வருமானமாக ரூ. 2.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்
ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம்

தென் மாவட்டங்களில் சிறப்பு ரயில்

இந்த சிறப்பு ரயில்களில் பயணிகளின் பயன்பாட்டை பொறுத்தவரையில், அதிகபட்சமாக திருநெல்வேலி - தானாபூர் ரயிலை 204 சதவிகிதமும், குறைந்தபட்சமாக திருச்சி - தாம்பரம் ரயிலை 9.6 சதவிகிதமாகவும் மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பெரும்பாலான சிறப்பு ரயில்கள் 100 சதவிகிதத்துக்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பி பயன்படுத்தப்பட்டுள்ளன. கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி வழியாக இயக்கப்பட்ட முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் 115 சதவிகிதம் இருக்கைகள் நிரம்பியது. சரியான நேரத்தில் இயக்கப்படாத ஒன்றிரண்டு சிறப்பு ரயில்களைத் தவிர அனைத்து சிறப்பு ரயில்களும் முழுமையாக நிரம்பியுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயிடம் பயணிகளின் எதிர்பார்ப்பு!

நம்மிடம் பேசிய பாண்டியராஜா, ``தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, பெங்களூர் மற்றும் பல்வேறு வடமாநிலங்களுக்கு ஒன்றிரண்டு நாள்கள் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வேக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளது. இதுபோல் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர், ஜனவரி மாதம் முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கினால் தெற்கு ரயில்வேக்கு பலமடங்கு வருமானம் கிடைக்கும். மேற்கண்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் பல்வேறு ரயில் நிலையங்களில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களைக்கொண்டு இயக்கப்பட்டது.

பாண்டியராஜா
பாண்டியராஜா

எனவே, ரயில்வேயின் வருமானத்தையும், பயணிகளின் தேவையையும் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே நாகர்கோவில், தென்காசி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்களை உடனடியாக அறிவித்து இயக்க வேண்டும்" என்றார்.