Published:Updated:

இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாகக் குடியுரிமை பெற முடியுமா? | Doubt of Common Man

சிறப்பு அகதிகள் முகாம்வாசிகள்

தமிழ்நாட்டில் 107 அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 94,000 பேர் வசிக்கின்றனர்.

Published:Updated:

இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாகக் குடியுரிமை பெற முடியுமா? | Doubt of Common Man

தமிழ்நாட்டில் 107 அகதிகள் முகாம்கள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 94,000 பேர் வசிக்கின்றனர்.

சிறப்பு அகதிகள் முகாம்வாசிகள்
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சந்திரகாந்தன் என்ற வாசகர், "இந்தியாவில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் சட்டப்பூர்வமாகக் குடியேற / குடியுரிமை பெற முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

போரும் அதன் கோரமும் நெஞ்சை உலுக்குபவை. போரால் பாதிக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம். இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தப் போர் தந்த காயங்களைச் சுமந்தபடி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் அகதியாகச் சென்று வாழ்கின்றனர் இலங்கைத் தமிழர் பலர். தமிழ்நாட்டிலும் 107 அகதி முகாம்கள் உள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 94,000 பேர் வசிக்கின்றனர்.

இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வந்தவர்கள் இங்கு சட்டப்பூர்வமாகக் குடியுரிமை பெற முடியுமா என்று நம் வாசகர் ஒருவர் 'டவுட் ஆஃப் காமன் மேன்' பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளச் சென்னையில் இயங்கும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகமான 'Organization for Eelam refugees’ rehabilitation'-ஐ தொடர்பு கொண்டு பேசினோம்.

அகதிகள் முகாம்
அகதிகள் முகாம்

“இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்கு வந்தவர்கள் சட்டப்பூர்வமாக இங்குக் குடியுரிமை பெற இயலாது. அரசின் மறுவாழ்வு முகாம்களில் இருக்கலாமே தவிரக் குடியுரிமை பெற முடியாது. இலங்கை அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற எந்தவிதச் சட்டமும் இல்லை” என்றனர்.

பல ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலும் 'இந்தியக் குடிமக்கள்' என்ற அடையாளத்தை இலங்கை அகதிகள் பெற இந்தியாவில் எந்த வழிமுறையும் இல்லை. 2019-இல் வெளியான குடியுரிமைத் திருத்தச் சட்டத்திலும் இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man