Published:Updated:

சமையல் எரிவாயுவிற்கு தற்போது எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது? | Doubt of Common Man

சமையல் எரிவாயு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு விலை குறையவும், மானியத்தை அதிகரிக்கவும் மாநில அரசும் மத்திய அரசும் நினைத்தால் மட்டுமே முடியும்.

Published:Updated:

சமையல் எரிவாயுவிற்கு தற்போது எவ்வளவு மானியம் வழங்கப்படுகிறது? | Doubt of Common Man

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு விலை குறையவும், மானியத்தை அதிகரிக்கவும் மாநில அரசும் மத்திய அரசும் நினைத்தால் மட்டுமே முடியும்.

சமையல் எரிவாயு
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் முருகேசன் என்ற வாசகர், "சமையல் எரிவாயுவிற்கு எந்த அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. இப்போது ஒரு சிலிண்டருக்கான மானியம் எவ்வளவு? இதற்கு முன் எவ்வளவு?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

நம் வாசகரின் கேள்விக்கான பதிலை அறிந்துகொள்ளும் பொருட்டு தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையத்தின் தலைவர் சடகோபன் அவர்களிடம் இதுகுறித்துக் கேட்டோம், "சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்றபடி, இந்தியாவில் சமையல் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படும். மானியம், இவ்வளவு ரூபாய் சிலிண்டருக்கு இவ்வளவு ரூபாய் என்றோ அல்லது இவ்வளவு சதவிகித மானியம் என்றோ எந்தக் கணக்கும் இல்லை. அரசாங்கம் தானே நிர்ணயம் செய்கிற மானியம்தான் வழங்கப்படும். தற்போது 915 ரூபாய்க்கு சிலிண்டர் விற்கப்படுகிறது. ஆனாலும் மானியம் வெறும் 20-25 ரூபாய்தான் வருகிறது. கிட்டத்தட்ட பூஜ்ஜியம்தான்.

சமையல் எரிவாயு
சமையல் எரிவாயு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு விலை குறையவும், மானியம் கூடவும், மாநில அரசும் மத்திய அரசும் நினைத்தால் மட்டுமே முடியும். ஜி.எஸ்.டி, VAT வரிகளைத் தளர்த்தி மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என நினைக்க வேண்டும். மாநில அரசைப் பொறுத்தவரை விலைக்குறைப்பு வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார்கள். அதை அவர்கள் நிறைவேற்றினால் நன்றாக இருக்கும். ஆனால் இரு அரசுகளும் முன்வந்து விலையைக் குறைத்தால்தான் சொல்லிக்கொள்ளும்படியான அளவுக்குச் சமையல் எரிவாயுவின் விலை குறையும். சர்வதேச அளவில் விலை குறைந்தாலும், இந்தியாவில் விலையைக் குறைக்காமல் அப்படியேதான் வைத்திருக்கிறார்கள். மானியத்தை நிர்ணயிப்பது மத்திய அரசு தான், அவர்களும் கொஞ்சம் மக்களைப் பற்றி யோசிக்க வேண்டும். அதோடு, கேஸ், பெட்ரோல், குடிநீர் எல்லாவற்றிற்கும் தட்டுப்பாடு இருப்பதனால் மக்களும் அவற்றை வீணாகச் செலவு செய்யாமல் அளவோடு பயன்படுத்த வேண்டும்" என்றார்.

சமையல் எரிவாயு
சமையல் எரிவாயு

அன்றாடம் வீட்டில் நாம் பயன்படுத்தி வரும் சமையல் எரிவாயு சில ஆண்டுகளுக்கு முன்னர் விலை உயர்த்தப்பட்டு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வங்கிக்கணக்கில் நேரடியாகச் சமையல் எரிவாயு மானியம் ஏற்றப்பட்டு வந்தது. 2019-ம் ஆண்டு டிசம்பரில் 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலை ரூ.714 ஆகவும், அதற்காக வாடிக்கையாளர்களின் கணக்கில் செலுத்தப்பட்ட மானியம் ரூ.174.72 ஆகவும் இருந்தது. அதே 2019 ஏப்ரல் மாதம் சிலிண்டர் விலை ரூ.722 ஆக இருந்த போது 238.27 ரூபாய் மானியமாகச் செலுத்தப்பட்டது.

2020 மே மாதம், சிலிண்டர் விலை ரூ.569 ஆக இருந்தபோது மானியத் தொகை ஏதும் வாடிக்கையாளர்களுக்குச் செலுத்தப்படவில்லை. அதற்கு அடுத்த மாதங்களில் இருந்து, மானியத் தொகை ரூ.23.95 - ரூ.25.45க்கு இடைப்பட்ட அளவில் வழங்கப்பட்டுவருகிறது. தற்போதும் அதே அளவில் 30 ரூபாய்க்குள்தான் மானியம் வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், தற்போது தமிழகத்தில் சிலிண்டர் விலை 890 ரூபாயில் இருந்து 960 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man