Published:Updated:

PMAY வீடு வழங்கும் திட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா? | Doubt of Common Man

சொந்த வீடு

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளதா எனப் பலரும் கட்டுரைக்கான கமென்டிலும், கேள்விகள் பக்கத்திலும் கேட்டிருந்தனர்.

Published:Updated:

PMAY வீடு வழங்கும் திட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா? | Doubt of Common Man

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளதா எனப் பலரும் கட்டுரைக்கான கமென்டிலும், கேள்விகள் பக்கத்திலும் கேட்டிருந்தனர்.

சொந்த வீடு
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் தனசேகர் என்ற வாசகர், "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) வீடு வழங்கும் திட்டம் இன்னும் நடைமுறையில் இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
Doubt of common man
Doubt of common man

PMAY திட்டத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வீடு கட்டுவதற்கான மானியம் வழங்கப்பட்டு வருகிறது. EWS (Economically Weaker Section), ஆண்டுக்கு 3 லட்சம் வரை குடும்ப வருமானம் உடையவர்கள் இந்தப் பிரிவின் கீழ் வருவார்கள்.

பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம்
பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம்

LIG (Lower Income Group), ஆண்டுக்கு 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரை குடும்ப வருமானம் உடையவர்கள் இந்தப் பிரிவின் கீழ் வருவார்கள். MIG I (Middel Income Group I), ஆண்டுக்கு 6 முதல் 12 லட்சம் வரை குடும்ப வருமானம் உடையவர்கள் இந்தப் பிரிவின் கீழ் வருவார்கள். MIG II (Middle Income Group II), வருடத்திற்கு 12 முதல் 18 லட்சம் வரை குடும்ப வருமானம் உடையவர்கள் இந்தப் பிரிவின் கீழ் வருவார்கள்.

வீடு
வீடு

மேற்கூறிய நான்கு பிரிவுகளில் MIG I மற்றும் MIG II பிரிவில் கீழ் வருபவர்களுக்கான காலக்கெடு கடந்த மார்ச் 2021-யோடு முடிந்துவிட்டது. அவர்களால் இனி பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது. மற்ற இரண்டு பிரிவுகளான EWS மற்றும் LIG பிரிவுகளின் கீழ் வருபவர்களுக்கு இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்திருக்கிறது அரசு. அடுத்த மார்ச் 2022 வரை மேற்கூறிய இரண்டு பிரிவின் கீழ் வருபவர்களும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டமான PMAY திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். இந்த இரண்டு பிரிவின் கீழ் வருபவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 6.5 சதவிகிதம் வரை வட்டியில் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 2.67 லட்சம் ரூபாய் வரையான மானியம் மேற்கூறிய இரண்டு பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்குக் கிடைக்கும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man