Published:Updated:

பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகள் எவ்வளவு? | Doubt of Common Man

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள்

இந்தியாவின் 80 சதவிகித பெட்ரோல் மற்றும் டீசல் தேவை, கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து அதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்தெடுப்பதன் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

Published:Updated:

பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகள் எவ்வளவு? | Doubt of Common Man

இந்தியாவின் 80 சதவிகித பெட்ரோல் மற்றும் டீசல் தேவை, கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து அதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்தெடுப்பதன் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் ஜெய்பிரகாஷ் என்ற வாசகர், "பெட்ரோல் மற்றும் டீசல் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்துள்ள வரிகள் எவ்வளவு?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இவ்வளவு அதிக விலையில் விற்பதற்கு அதன் மீது மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்துள்ள வரியும் ஒரு காரணம்தான். இந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீது எவ்வளவு வரிகளை விதித்துள்ளது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நம் வாசகர் ஒருவருக்கு எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள்
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள்

இந்தியாவின் 80 சதவிகித பெட்ரோல் மற்றும் டீசல் தேவை, கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து அதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்தெடுப்பதன் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதுபோக நேரடியாகப் பிரித்தெடுக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலையும் கொஞ்சம் இறக்குமதி செய்கிறோம்.

கச்சா எண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பெட்ரோலுக்கு, மத்திய அரசின் Petroleum Planning and Analysis Cell இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள 3/2/2021 தேதியிட்ட தரவுப்படி,

  • Basic Excise Duty - Rs. 1.40/ltr

  • Special Additional Excise duty - Rs. 11/ltr

  • Agriculture Infrastructure & Development Cess - Rs. 2.50/ltr

  • Additional Excise Duty (Road and Infrastructure Cess) - Rs. 18/ltr

ஆக மொத்தம் 32.9 ரூபாய் மத்திய அரசு வரி விதித்துள்ளது. இதுவே இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலுக்கு மேற்கூறிய வரிகளுடன் Basic Custom Duty (2.50%)-யும் சேர்த்து 33.8 (தோராயமாக) ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரி
Petroleum Planning and Analysis Cell

கச்சா எண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கப்படும் டீசலுக்கு,

  • Basic Excise Duty - Rs.1.80/ltr

  • Special Additional Excise duty - Rs.8/ ltr

  • Agriculture Infrastructure & Development Cess - Rs.4/ ltr

  • Additional Excise Duty (Road and Infrastructure Cess) - Rs. 18/ltr

ஆக மொத்தம் 31.8 ரூபாய் வரி விதித்துள்ளது மத்திய அரசு. இதுவே இறக்குமதி செய்யப்படும் டீசலுக்கு மேற்கூறிய வரிகளுடன் Basic Custom Duty (2.50%)-யும் சேர்த்து 32.7 (தோராயமாக) ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்யின் விலை, அதனை இறக்குமதி செய்வதற்கான வரி, பெட்ரோல் மற்றும் டீசலை பிரித்தெடுப்பதற்கான செலவு மற்றும் டீலர்களுக்கான கமிஷன் ஆகியவற்றைச் சேர்த்து மாநில அரசின் வாட் வரி விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கான வரியினை, அந்தந்த மாநில் அரசுகள் நிர்ணயித்துள்ளன. தமிழ்நாட்டில் VAT வரியாக Petroleum Planning and Analysis Cell இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள, 1.10.2021 தேதியிட்ட தரவுப் படி, பெட்ரோலுக்கு 13% + Rs. 11.52/ltr-ம், டீசலுக்கு 11% + Rs. 9.62/ltr-ம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி 21.93 (தோராயமாக) ரூபாய் பெட்ரோலுக்கும், 18.37 (தோராயமாக) ரூபாய் டீசலுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில் அரசின் VAT வரி
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில் அரசின் VAT வரி

மத்திய மற்றும் மாநில அரசின் வரிகள் சேர்த்து 55 ரூபாய் (தோராயமாக) பெட்ரோலுக்கும், 50 ரூபாய் (தோராயமாக) டீசலுக்கும் வரியாகச் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய பெட்ரோல் விலை - 102.50 ரூபாய்

இன்றைய டீசல் விலை - 98.36 ரூபாய்

(தோராயமாக எனக் குறிப்பிடப்பட்டுள்ளவை, அன்றைய விலை நிலவரப்படி 0.10 முதல் 1 ரூபாய் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்.)

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man