Published:Updated:

அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சைரன் எத்தனை வகைப்படும்? | Doubt of Common Man

Siren | சைரன்

இந்தியாவில் பல்வேறு உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு வாகனங்களில் சுழல் விளக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Published:Updated:

அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சைரன் எத்தனை வகைப்படும்? | Doubt of Common Man

இந்தியாவில் பல்வேறு உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு வாகனங்களில் சுழல் விளக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Siren | சைரன்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் எழில் தங்கராஜ் என்ற வாசகர், "அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சைரன் எத்தனை வகைப்படும். அதனை யார் யார் பயன்படுத்தலாம்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

இந்தியாவில் பல்வேறு உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு வாகனங்களில் சுழல் விளக்குகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி குறிப்பிட்ட பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் சுழல் விளக்குகளைப் பயன்படுத்த முடியும் என்கிற விதி முன்னால் இருந்து வந்தது. ஆனால், 2017-ல் சிவப்பு, நீலம் என எந்த விதமான விளக்குகளையும் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் என யாரும் பயன்படுத்தக்கூடாது எனத் தடை செய்யப்பட்டது.

Siren | சைரன்
Siren | சைரன்

இந்தியாவில் சிவப்பு மற்றும் நீல நிற சுழல் விளக்குகள் முன்னாள் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், அதனைத் தனிப்பட்ட முறையில் பல அரசு அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழ்நிலைப் பிரதிநிதிகள் கூட தங்களின் விருப்பத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். இதனைத் தடுக்கும் பொருட்டு 2014-ல் சுழல் விளக்குகளை யார் பயன்படுத்தலாம் என நெறிமுறைப்படுத்தும் படி மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து தேசிய அளவிலும், மாநில அளவிலும் யார் யாரெல்லாம் சிவப்பு மற்றும் நீல நிற சுழல் விளக்குகளைப் பயன்படுத்தலாம் என்ற உயர் அதிகாரிகளின் பதவிகள் குறித்த பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது.

ஆனால், 2017-ல் அதனையும் மாற்றி யாருமே சுழல் விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்தது மத்திய அரசு. சுழல் விளக்குகளை அமைச்சர்களும், அதிகாரிகளும் பயன்படுத்துவதால் மக்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது. அவர்களுக்குச் சேவகம் செய்யும் பொருட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது எனக் கூறிச் சுழல் விளக்குகளுக்கு மொத்தமாகத் தடை விதித்தது மத்திய அரசு. இந்தத் தடையானது மற்ற அமைச்சர்கள் அதிகாரிகள் மட்டுமின்றி, பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கும் பொருந்தும் எனத் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

Siren | சைரன்
Siren | சைரன்

தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறை ரோந்து வாகனங்களில் மட்டுமே சுழல் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. மேற்கூறிய வாகனங்களைத் தவிர இந்தியாவில் வேறு யாருக்கும் சுழல் விளக்குகளைப் பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும், மோட்டார் வாகனச் சட்டம் 1989, 108 (1) (iii) மற்றும் 108 (ii) ஆகிய விதிகளில் யார் யாரெல்லாம் சுழல் விளக்குகளைப் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் 108 (1) (iii) விதியை நீக்கியும், 108 (ii) விதியில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் மட்டும் நீல நிற சுழல் விளக்குகளைப் பயன்படுத்தும் வகையில் மாற்றி சட்டத் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மோட்டார் வாகனச் சட்டம் 1989, விதி 108(4)-ன்படி 'அவசரத் தேவை கொண்ட அரசு வாகனங்கள் மட்டும் சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்கள் சேர்ந்த பலவண்ண விளக்குகளை மாநில அரசு குறிப்பிடும் அவசரத் தேவைகளுக்கும் பேரழிவு சமயங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் மாநில அரசு என்பதை மாற்றி மத்திய அரசு குறிப்பிடும் அவசரத் தேவைகள் எனவும் மாற்றம் செய்யப்பட்டது.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

Doubt of common man
Doubt of common man