ஜி-20 மாநாடு புதுச்சேரியில் நடைபெறுவதையொட்டி பல்வேறு பாதுகாப்பு பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் நகரை அழகுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
ஜி-20 மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பை பலபடுத்தும் விதமாக மாநில எல்லையில் தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறது
விஐபிகள் தங்கும் சொகுசு விடுதிகளில் கமாண்டோ படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
விஐபிகள் தங்கும் சொகுசு விடுதிகளில் அசாம்பாவிதஙகள் நடைபெறாமல் இருக்க மணல் மூட்டைகள் அமைத்து அரண் அமைக்கும் பொதுபணித்துறை ஊழியர்கள்
நகரப் பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகளுக்கு வண்ணம் பூசப்படுகிறது
நகரப் பகுதியில் சாலை நடுவே உள்ள பூங்காக்களை தூய்மை படுத்தும் பணியில் பெண்கள்
பாதுகாப்பான பயணத்துக்காக சாலைகள் அவசர அவசரமாக அமைக்கப்படுகிறது
அரசு சுவர்களில் உள்ள சுவரொட்டிகளை முழுவதும் அகற்றிய பின் வெள்ளை வண்ணம் பூசப்படுகிறது
விஐபிகள் தங்கும் சொகுசு விடுதிகளில் பலத்தை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மணல் மூட்டைகள் அடுக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கமாண்டோ
சாலையோரங்களில் உள்ள தேவையற்ற மரங்களை அகற்றும் ஊழியர்கள்
பயணத்துக்காக சாலைகள் அவசர அவசரமாக அமைக்கப்படுகிறது
நகரப் பகுதியில் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்