லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

கள்ளச்சாராய மரணங்கள், ரூ.10 லட்சம் ... கருத்து என்ன?

கள்ளச்சாராய மரணங்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு... கருத்து என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
கள்ளச்சாராய மரணங்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு... கருத்து என்ன?

#Avaludan

உலகம் முதல் உள்ளூர் வரை, பரபரப்பு செய்திகள் குறித்த கருத்துகளை பகிரச் சொல்லி `அவள் விகடன்' சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்தவற்றில் சிறந்தவை இங்கே...

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறார். `மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு என்ன செய்துகொண்டிருந்தது?’, ‘ரூ.10 லட்சம் இழப்பீடு சரியா?’, ‘கள்ளச்சாராயத்தை எப்போதுதான் ஒழிப்பார்கள்?’ என குரல்கள் எழுகின்றன. இதுகுறித்த உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்...

பார்த்தசாரதி

குற்றத்தைத் தடுக்கத் தவறியதற்காக அரசு தனக்குத்தானே அபராதம் விதித்துக்கொள்வது போலத்தான் தோன்றுகிறது. கள்ளச்சாராய சாவுகளுக்கு நிவாரணம் தருவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

கள்ளச்சாராய மரணங்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு... கருத்து என்ன?
கள்ளச்சாராய மரணங்கள், ரூ.10 லட்சம் இழப்பீடு... கருத்து என்ன?

Rexlin Sheebha

குடும்பத் தலைவர் உயிரிழந்த நிலையில் அந்தக் குடும்பங் களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அரசு இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் இது, கள்ளச்சாராயம் அருந்திவிட்டு இறந்தால் நிவாரணம் கிடைக்கும் என்ற எண்ணத்தையும் உண்டாக்கும்; கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அது பின்னடைவை ஏற்படுத்தும்.

Sundara Rajan

அரசு தக்க நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராயத்தை தடுத்திருந்தால் குற்றம் நடந்திருக்காது. இந்த உயிரிழப்பு ஏற்பட அரசும் காரணம் எனும்போது, அரசு இழப்பீடு தரத்தான் வேண்டும்.

Shameemkathar Shameemkathar

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்கவில்லை. அவர்களால் நிர்கதியாக நிற்கும் குடும்பத்திற்குக் கொடுக்கப்படும் இழப்பீடு இது. மேலும், ஒரு தரப்பு மக்களே மற்றொரு தரப்பு மக்களுக்கு எதிராகப் பேசுவது வருத்தம் அளிக்கக் கூடியது. குடி தவறுதான். கள்ளச்சாராயம் குடிப்பது தவறுதான். ஆனால், உயிரிழந்த வர்கள் மட்டுமே இதற்குப் பொறுப்பா என்ன? இந்த ஆபத்தான தொழிலை நடத்தும் வியாபாரிகள், அவர்களைத் தடுக்கத் தவறிய, துணைபோன அதிகாரிகள், மது ஒழிப்பில் அரசின் செயலற்ற தன்மை என இவர்களுக்கான தண்டனை என்ன? குடிகாரர்கள் என்பதாலேயே அவர்கள் உயிர் மதிப்பற்றுப் போய்விடுமா? குடிகாரர்களை நம்பி, டாஸ்மாக் வருமானத்தை நம்பியிருக்கும் அரசுதானே இது? ’கள்ளச் சாராயத்தை தடுக்காததால் பறிபோன எங்கள் வீட்டு உயிர் களுக்கு யார் பொறுப்பு?’ என்ற அந்தக் குடும்பங்களின் கேள்வி நியாயமானதுதானே? உயிரிழந்தவர்களின் மனைவிகள், குழந்தைகளுக்கு இந்தத் தொகை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வீர்களா?

Rajendran Thangaraj

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாடு முழுக்க கள்ளச் சாராயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பிடிபட்ட சரக்கு மலைக்க வைக்கிறது. கள்ளச்சாராயம் எந்தள வுக்கு வேரூன்றியுள்ளது என்பதை இத்தனை உயிர்களை பறிகொடுத்து அறிந்துகொண்டிருக்கிறோம். காவல்துறை, அதிகாரிகள் என அனைத்தையும் `தாண்டி’ கள்ளச்சாராய வியாபாரம் ஜோராக நடந்துகொண்டிருக்கிறது. எந்த ஆட்சியிலும் இதுதான் நிலை.