Published:Updated:

ரூ.1,000 பொங்கல் பரிசு! குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கியில் செலுத்த பணிகள் தீவிரம்...

பொங்கல் பரிசு!

ஆதார் எண்ணை தங்களது வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு நேரடியாக ரூ.1,000 வரவு வைக்கப்படும்.

Published:Updated:

ரூ.1,000 பொங்கல் பரிசு! குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கியில் செலுத்த பணிகள் தீவிரம்...

ஆதார் எண்ணை தங்களது வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசு நேரடியாக ரூ.1,000 வரவு வைக்கப்படும்.

பொங்கல் பரிசு!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது குறித்து நவம்பர் 19-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலையின் நிறத்திலும் டிசைனிலும் மாற்றம் செய்யவும், பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரொக்கமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்தப் பணத்தை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்த ஆலோசித்தனர். ஆதார் எண் உள்ள குடும்ப அட்டைதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கியில் சேமிப்புக் கணக்குகள் இல்லை என்பது தெரியவந்தது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு

உடனடியாக இவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டுமென்று மண்டல இணை பதிவாளர்களிடம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சமீபத்தில் தெரிவித்தார். அதற்காக நடைபெற்ற இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் 14.60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு வாரத்துக்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, வரும் பொங்கல் பண்டிகையின்போது பயனாளிகளுக்கு ரூ.1,000 பரிசுத் தொகையானது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது தெளிவாகிறது.

தமிழக அரசு கடந்த தைப்பொங்கலுக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 21 பொருள்களை பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது. இதில் பல குளறுபடிகள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குளறுபடிகளைத் தவிர்க்க, தமிழக அரசு வரும் தைப்பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பணமாக வழங்க முடிவெடுத் துள்ளதாகத் தெரிகிறது. வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுவதால் பயனாளிக்கு சரியான முறையில் ரூ.1,000 சென்றடைவது உறுதி செய்யப்படும் என்கின்றனர்.

ஆதார் அட்டை
ஆதார் அட்டை

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் கூறியதாவது, ``ஆதார் எண்ணை தங்களது வங்கிக் கணக்கோடு இணைத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.1,000 வரவு வைக்கப்படும். ஆதார் அட்டையை வங்கிக் கணக்கோடு இணைக்காதவர்களுடைய பாஸ் புக் ஜெராக்ஸ், ஆதார் கார்டு ஜெராக்ஸ், ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றை அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் பெற வேண்டும். தரவுகளின்படி 14,86,582 ரேஷன் அட்டைதாரர்களுக்கு எந்தவொரு வங்கிக் கணக்கும் இல்லை. தவிர, இதில் பலர் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைக்கவில்லை.

வங்கிக் கணக்கு இல்லாத ரேஷன் அட்டைதாரர்கள், மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணம் ஏதும் கட்டாமல் ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட்டை தொடங்க வேண்டும். அதற்கான ஆவணங்களை ரேஷன் கடை பணியாளர்களிடம் சமர்ப்பிக்கும்போது, அந்தக் கூட்டுறவு வங்கிக் கணக்கில் ரூ.1,000 பணம் வரவு வைக்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் வரும் டிசம்பர் 5-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்" என்றார்.

 ரேஷன் கார்டுகள்
ரேஷன் கார்டுகள்

பொங்கல் பரிசு பெற வங்கிக் கணக்கு உள்ளவர்களுக்கு என்ன வேண்டும்?

  1. பாஸ் புக்கின் முதல் மற்றும் இரண்டாவது பக்க ஜெராக்ஸ்,

  2. ஆதார் கார்டு ஜெராக்ஸ்.

  3. ரேஷன் கார்டு ஜெராக்ஸ்.

மாவட்ட கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க என்ன வேண்டும்?

  1. ஆதார் கார்டு ஜெராக்ஸ்.

  2. ரேஷன் கார்டு ஜெராக்ஸ்.

  3. மூன்று பாஸ்போர்ட் போட்டோ.

  4. பான் கார்டு ஜெராக்ஸ்.