
வாசகர் மேடை
? இளைஞரணிச் செயலாளர் ஆனபிறகு உதயநிதி நடிக்கும் படத்தில் ஓப்பனிங் சாங் வரிகள் என்னவாக இருக்கலாம்?
“வேணும் மச்சான் வேணும் இந்த கட்சிப் பதவி...
அது கொடி பறக்கும்போதே என்ன நிமிர்த்தும் தெரபி...” - எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்.
“அன்புள்ள அப்பா...”
“என்னப்பா?”
“உங்க தலைவர் பதவியைக் கேட்டா தப்பா?” - சுந்தரராஜ், திருநெல்வேலி

நான் ஆளப்பிறந்தவன்டா - தட்கல்ல
தலைவன் ஆனவன்டா! - அஜித், சென்னை - 126
(நெஞ்சில் மாமழை பாடல் மெட்டில்)
உதய சூரியன் உதய சூரியன்
அரியணையில் தான் ஏற...
ஸ்டாலின் மகன் இவன் உதயநிதி இவன்
தமிழகத்தை தான் ஆள...
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது...
இன்று தானே இன்று தானே வாய்த்தது... - Sabena_Aadhi
ஏழைகளின் ஆண்ட்ராய்டே
கோழைகளின் புளூவேலே
இளசுகளின் டிக்டாக்கே
எல்லோரையும் இணைக்கும் வாட்ஸ்அப்பே
எங்களுக்கும் பப்ஜி ஆட கற்றுத்தந்தாயே
கருத்துக் கீச்சிடலாம் ட்விட்டரிலே
கலக்கி விளையாடலாம் அரசியலிலே. - saravankavi
மூன்றாம் கலைஞரே
இரண்டாம் தளபதியே
முதல் உதயநிதியே! - h_umarfarook
தட்லாட்டம் தாங்க
தர்லாங்க சீட்ட
பதவின்னு வந்தாக்க
ஜெயிப்பாங்க வோட்ட!
வரணும், அடுத்து வரணும்
தமிழ்நாட்ட உன்கிட்ட தரணும். - Jawahar_Ganesan
“நீதிய காப்பான் உதய்டா...
அநீதிக்கு கொடுப்பான் உதைடா...!” - IamJeevagan
வாரிசு அரசியலை ஒழிக்க வந்த வாரிசே!
பகுத்தறிவைப் புதைக்க வந்த பூசாரியே! - prabacurren
வந்தேன் வந்தேன்
மீண்டும் நானே வந்தேன்
எனது கட்சியை வழி நடத்த வந்தேன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் ஆஆஆ - Anbu Bala
? சில்லறை இல்லாத மாசக்கடைசில பேப்பர்ஸ் இல்லாம போலீஸ்கிட்ட மாட்டினா என்ன பொய் சொல்லுவீங்க?
ஜெராக்ஸ் எடுக்கக் கொடுத்திருக்கேன் சார். அதை வாங்கத்தான் போய்ட்டிருக்கேன். - டி. நெல்லையப்பன், சென்னை - 01
கிறுகிறுகிறுனு வருது சார்... ஒரு டீ சொல்லுங்களேன்! - அவ்வை. கே. சஞ்சீவிபாரதி, கோபி.

டிரெயின் டிரைவர் சார், ஒரு வண்டிக்கு ஆள் வரலைன்னு அவசரமா வரச்சொன்னாங்க சார். நான் போகலன்னா வண்டி நின்னுடும் சார். - Railganesan
பணம் இல்லன்னு உண்மையவே சொல்லலாம். எப்படியும் நம்ப மாட்டாங்க.பிறகெதுக்கு கஷ்டப்பட்டு தனியா பொய்வேற சொல்லிக்கிட்டு - umakrishh
சார், நானே கைல காசு இல்லாமல் கடன் வாங்கத்தான் அவசரமா போயிட்டு இருக்கேன். கடன் வாங்கிகிட்டு வரும்போது நியாயமா உங்க பங்கைக் கொடுத்துட்டுப் போவேன்... என்னை நிறுத்தி வைத்தால் உங்களுக்கும் பங்கு கிடைக்காது, எனக்கும் கடன் கிடைக்காது. தயவுசெய்து புரிந்துகொள்ளவும்... - Subramanian Subburu
‘`சார், இப்பதான் ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டு வர்றேன்’’ என்றதும் பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டுகண்களில் நீர் வழிய வழியனுப்பி வைப்பார்களே..! - Manicka Vasagam
சார் நான் உங்க பையன் படிக்கிற என்ஜினீயரிங் காலேஜ் லெக்சரர் சார். எனவே நான் பையனை காலேஜ்ல கவனித்துக்கொள்கிறேன் என்ன இப்ப அனுப்புங்க என்றுகெஞ்சுவேன். கண்டிப்பா பையனோ பெண்ணோ என்ஜீனியரிங்தான் படிப்பார்கள். - Anbu Bala
சார்... Gpay-ல கடன், Paytm-ல கடன், Amazon pay-ல கடன். இப்படி கார்ப்பரேட் பூரா கடன் வாங்கிட்டு தற்கொலை பண்ணாம சுத்திக்கிட்டு இருக்கேன். நீங்களாவது வாழ விடுங்க ப்ளீஸ். - Mano Red
நான் வண்டியை யார்கிட்டயாவது வித்திடுவேன்னு என் மனைவி பேப்பரை எல்லாம் வாங்கி வெச்சுக்குவாங்க சார். - Saraswathy Senthil
? பெட் அனிமல்ஸுக்குப் பேர் வைக்கிற மாதிரி உங்க மொபைலுக்குப் பேர் வைக்கச் சொன்னா என்ன பேர் வைப்பீங்க... காரணத்தோடு சொல்லுங்க!
‘மாயவலை’ - வாட்ஸ் அப் ஃபேஸ்புக், ட்விட்டர் எனத் தொடங்கும் இதனுடனான பயணம், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆக்கிரமித்து, கடைசியில் வலையில் சிக்கிய மானாக நம்மை ஆக்கிவிடுவதால்... - கே.லக்ஷ்மணன்,திருநெல்வேலி.
உலகத்தையே செல்போனில் தெரிந்துகொள்ளமுடிகிறது. அதனால், என் செல்போனின் பெட் நேம் `இரண்டாம் உலகம்!’ - கோ.குப்புசாமி, சங்கராபுரம்,
குரங்குக்குட்டி - குட்டியை விட்டுத் தாய் இருக்காது. தாயை விட்டுக் குட்டி இருக்காது. அதுபோல நாம் செல்லை வைத்திருப்பதால் இந்தப் பெயரை வைத்துக்கொள்ளலாம். - saravankavi

`ஆளவந்தான்’ - கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மொபைல் என்பதால்... - Dharanishraja
மற்றவர்களுடன் நம்மை இணைப்பதால், டார்`லிங்க் ’- shivaas_twitz
`கறையான்’ (நேரத்தை அரிப்பதால்). - manipmp
Twitter அதிகம் பார்ப்பதால் `Tweety’னு பெயரிடுவேன். - gmuruganandi
`சனியன் சகடை’ இது இல்லன்னா வாழ்க்கையில் உருப்பட்டு இருப்பேனோ என்னவோ என்பதால்... - M__karthika
‘ஷேக்’கிழார்- சம்சாரத்துக்கிட்ட இருந்து கால் வரும்போதெல்லாம் உடம்பில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்துவதால்..! - Laks Veni
இடது பக்க பாக்கெட்டில்தான் எப்போதும் செல்போனை வைத்திருப்பேன். இதயத்திற்குப் பக்கத்தில் இருப்பதால் `லப் டப்’ என்று வைப்பேன். - Vairachandran Ku
ஆந்தை மாதிரி நைட்ல முழிச்சிக்கிட்டு ஆன்லைன்ல பிஸியா இருக்கிறதால `பிஸிராந்தை.’ - புது வண்டி ரவீந்திரன்
? கோலி தலைமையில் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்ற இந்திய அணிக்கு, ரெண்டு வரில இப்ப என்ன சொல்லுவீங்க?
அரையிறுதிக்குத் தேர்ச்சி அடைந்த இந்திய அணிக்கு ‘`Hats off’’
அரையிறுதியில் தோற்ற இந்திய அணிக்கு, என்னப்பா சொல்றது... டிவியை ‘`Switch off” தான்... - ஜி.ராஜசுவாதி ப்ரியா, சென்னை
தோனி, கோட்டைத் தொட்டிருந்தால்... கோலி அணி கோப்பையைத் தொட்டிருக்கும்! - கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.
கவலைப்படாதீங்க கோலி... மோடிகிட்ட சொல்லி ‘ஒரே நாடு, ஒரே உலகக்கோப்பை’ங்கிற திட்டத்தைக் கொண்டுவரச் சொல்லிட்டா, அப்புறம் நம்ம டீமை யாரும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது..! - KLAKSHM14184257
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஜட்டு வைத்துவிட்டார் குட்டு! - IamJeevagan
RCB அணிக்காக நீங்க வாங்காத அடியா? கூல்! - yugarajesh2
‘கபில்’ இதே இங்கிலாந்தில் கப் வாங்கிக் குடுத்தாரு... `கப்தில்’ அந்தக் கனவைக் கெடுத்துட்டாரு. - parveenyunus
என்ன ஃபீலிங்கா... இல்ல ஃபீலிங்கான்னு கேக்குறேன். - Sowmya Red
திரிஷா இல்லைன்னா திவ்யா... இந்த World cup போனா என்ன Nxt 20-20ல பார்த்துக்கலாம். - Osho Ram
? உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதினால் என்ன தலைப்பு வைப்பீர்கள்?
முற்றும். - அ.ரியாஸ் சேலம்
சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா? - M__karthika
“ஹையோ.. ஹையோ..!”
என் வாழ்க்கையின் நேசமணி மொமண்ட்ஸ். - vikky_tweet
இந்த வாழ்க்கைய... அப்படியே வரலாறா... எழுதிட்டாலும்..! - maathorubhagan
இதெல்லாம் எங்க உருப்படப் போகுது? - பாகம் 1 - RamuvelK
90’s kid! - Ramesh Saha
படித்தவுடன் கிழித்துவிடவும். - Mano Francis
ஒன்னுஞ் சொல்றதுக்கில்ல. - வைகை சுரேஷ்
உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு.

வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
? விஜய், சூர்யா, ஹெச்.ராஜா - மூன்று பேரும் ஒரு படத்தில் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?
? பேய்ப்படங்களைப் பேய்கள் பார்த்தால் என்ன சொல்லும்?
? தமிழக அரசியலில் எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிட்டன. ‘இது மட்டும் தமிழக அரசியலில் நடக்கவே நடக்காது’ என்றால் எதைச் சொல்வீர்கள்?
? காதல் கவிதைகள்போல, பிரேக்-அப்புக்கு ஒரு ஜாலியான கவிதை சொல்லுங்க.
? ஷாப்பிங் மால்களில் உங்களை மிரட்டும் விஷயம் எது?

உங்கள் பதில்களை
அனுப்ப வேண்டிய முகவரி :வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை 600 002.