Published:Updated:

முத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? A டூ Z தகவல்கள்! #DoubtOfCommonMan

முத்தலாக்

முத்தலாக் சட்டம் பற்றி வாசகரின் கேள்விக்கான விளக்கம்!

Published:Updated:

முத்தலாக் சட்டத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? A டூ Z தகவல்கள்! #DoubtOfCommonMan

முத்தலாக் சட்டம் பற்றி வாசகரின் கேள்விக்கான விளக்கம்!

முத்தலாக்

2019, ஜுலை 25-ம் தேதி இந்திய மக்களவையிலும் 30-ம் தேதி மாநிலங்களவையிலும் முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை சில அரசியல்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. சில கட்சிகள் வரவேற்றன. நாடு முழுவதும் எதிர்ப்பும் வரவேற்பும் பரவலாகக் கிடைத்துள்ளன.

"இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ள முத்தலாக் தடைச் சட்டத்தில் அப்படியென்னதான் இருக்கிறது..?" விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார் மணிகண்டன் என்ற வாசகர்.

இந்தக் கேள்வியை வழக்கறிஞர் அஜிதாவின் முன்வைத்தோம்.

முத்தலாக்
முத்தலாக்

"ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனிநபர் சட்டம் மூலமாகத்தான் ஆளப்படுகிறார். திருமணம், குழந்தைகள் பாதுகாப்பு, விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை உள்ளிட்டவை அதில் அடங்கும். இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டங்களே தனிநபர் சட்டமாக இருக்கிறது. அதில் விவாகரத்து என்பது, ஆண்களுக்கான உரிமையாக 'தலாக்' சொல்வதாக இருக்கிறது. அதிலும், 'ஒரே தடவையில் மூன்று முறை தலாக் சொல்வது', 'ஒரு மாத இடைவெளியில் மூன்று முறை தலாக் சொல்வது' என இரண்டு வகைகள் இருக்கின்றன. இப்படிச் சொல்லிவிட்டால் கணவன், மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக அர்த்தம். பெண்கள் 'குலா' சொல்லி விவாகரத்து செய்யலாம். இப்படித்தான் ஷரியத் சட்டத்தில் இருக்கிறது.

இந்த 'தலாக்' முறை பெண்களுக்கும் சமத்துவத்துக்கும் சட்டத்துக்கும் எதிரானதாக இருக்கிறது என்றுதான் ஷயீரா பானு உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தையும் மார்க்க அறிஞர்களையும் உதவிக்கு அழைத்து, 'ஷரியத் சொல்வது என்ன?' என்று கேட்டது. அவர்கள், "குரான் என்பது மும்முறை 'தலாக்' சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. ஒரு மாத இடைவெளியில் 'தலாக்' சொல்வதே நடைமுறையில் இருக்கிறது. அதிலும் இரண்டு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று, தலாக் சொல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும், அடுத்தது, இரு தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மட்டுமே தலாக் செய்யும் முடிவுக்கு வர வேண்டும்" என்று விளக்கமளித்தார்கள். 'ஷரியத் சட்டத்தில் இல்லை என்பதால் முத்தலாக் முறையை ஏற்றுக்கொள்வதில்லை' என்று ஒரு தரப்பினர் சொல்ல, மனு அளித்த தரப்பினர், 'இந்தியா முழுக்க முத்தலாக் முறை நடைமுறையில் இருக்கிறது. நாங்களும் பாதிக்கப்பட்ட பெண்கள்தான்' என்று கூறினர்.

#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan

எல்லாவற்றையும் ஆராய்ந்த நீதிமன்றம், 'மார்க்க அறிஞர்கள் இருவேறு கருத்துகளை முன்வைப்பதால் நாங்கள் இந்த விவகாரத்துக்குள் செல்ல விரும்ப வில்லை. ஆனால், மும்முறை 'தலாக்' சொல்லி, ஒரு பெண்ணின் மணவாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் நடைமுறை தடை செய்யப்படுகிறது. இஸ்லாமியப் பெண்கள் இந்த விஷயத்தில் பாதிக்கப்படாமல் இருக்க ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும்' என்று அறிவுரை கொடுத்தது. இது நடந்தது 2017-ல். அதற்குப் பிறகுதான் மத்திய அரசு ஒரு மசோதாவைக் கொண்டுவந்தது. 'ஒரே நேரத்தில் மூன்று முறை 'தலாக்' சொல்லி விவாகரத்து செய்வது சட்டத்துக்குப் புறம்பானது' என அந்த மசோதா சொன்னது. மேலும், நேரில் மட்டுமல்ல, எழுத்து, கடிதம், இ-மெயில், எஸ்.எம்.எஸ், வாட்ஸ் அப் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வழியே தலாக் சொன்னாலும் அதுவும் சட்டவிரோதம்தான் என்கிறது அந்த மசோதா.

சிறைக்கு கணவர் செல்ல நேரிட்டால், மனைவிக்கும் குழந்தைகளுக்குமான ஜீவனாம்சத்தை அளிக்க உத்தரவிடலாம்' என்று கூறுகிறது.
முத்தலாக்
முத்தலாக்

மசோதாவின் அடுத்த ஷரத்து, 'ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி, மனைவியை விவாகரத்து செய்ய முயன்றால் அந்தக் கணவர் குற்றவாளி. அதற்காக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அப்படிச் சிறைக்கு கணவர் செல்ல நேரிட்டால், மனைவிக்கும் குழந்தைகளுக்குமான ஜீவனாம்சத்தை அளிக்க உத்தரவிடலாம்' என்று கூறுகிறது. இதுதான் முத்தலாக் சட்டத்தின் உள்ளடக்கம். இது, ஒரு மாத இடைவெளியில் 'தலாக்' சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறையைப் பாதிக்காது.

'முத்தலாக் சொன்னாலும் விவாகரத்து ஆகாது, கணவர் குற்றவாளி' என்கிற சட்டம், 'சிறைக்குச் செல்லும் கணவர் மனைவி, பிள்ளைகளுக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்' என்றும் சொல்கிறது.
#DoubtOfCommonMan
#DoubtOfCommonMan

இதுபோன்ற கேள்விகள் உங்களிடமும் இருக்கிறதா? இங்கே கேளுங்கள்...

இந்த முத்தலாக் சட்டத்தில் சில முரண்பாடுகள் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். 'முத்தலாக் சொன்னாலும் விவாகரத்து ஆகாது, கணவர் குற்றவாளி' என்கிற சட்டம், 'சிறைக்குச் செல்லும் கணவர் மனைவி, பிள்ளைகளுக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும்' என்றும் சொல்கிறது. முத்தலாக் சொன்னால் விவாகரத்தே ஆகாது என்றானபிறகு கணவர் ஏன் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் இல்லை என்பது கடுமையான நடைமுறை என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள்" என்கிறார் வழக்கறிஞர் அஜிதா.