அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

“அடுத்து வாரிசுதான் முக்கிய சக்தியா வரப்போறார். அவருக்கு வலதுகரமா நான்தான் இருக்கப்போறேன். இது நடக்குதா இல்லையான்னு மட்டும் பாருங்க…” - நெருங்கிய நண்பர்களுடனான சந்திப்பில் இப்படிச் சொன்னாராம் அணில் அமைச்சர். அடுத்தடுத்து அவர் விவரித்த விஷயங்களும் படு பயங்கரமானவையாம். அமாவாசை அரசியலையே விஞ்சத்தக்க விஷயங்களோடு வெயிட் பண்ணுகிறாராம் அணில் அமைச்சர். #நாகராஜ சோழன்... பல்வேறு திட்டங்களோடு... தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்!

கிசுகிசு

இலைக் கட்சியின் துணிவானவருக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிறைய பிசினஸ் நடக்கிறதாம். பவரில் இருந்தபோது, எதிர்காலத்துக்கு உதவும் என இந்த ஏற்பாடுகளைச் செய்துவைத்தாராம். பினாமிகள் சிலரை நியமித்துச் செய்த பிசினஸ் விஷயங்களை, இப்போது மகனை கவனிக்கச் சொல்லியிருக்கிறாராம். #அவருக்கும் பசிக்கும்ல!

கிசுகிசு

சொன்னதைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக இருக்கும் அரசப்புள்ளிக்கு, மாவட்டப் பொறுப்பைத் தூக்கிக்கொடுத்தபோதே அதிருப்திக் குரல்கள் பெரிதாகக் கிளம்பின. அடுத்து அவரை மேயர் பொறுப்புக்கும் முன்னிறுத்த முயற்சிகள் நடக்கின்றனவாம். ‘ஆளுமையான ஆட்களைத் தேடாமல் அடிவருடிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நியாயமா?’ என மொட்டைக் கடுதாசிகள் அறிவாலயத்தை நோக்கிப் பறக்கின்றன. #இன்னுமா கடிதம் எழுதுறீங்க... ஒரு மெயில் போடுங்க பாஸ்!

கிசுகிசு

சின்ன தலைவியின் அண்ணன் மகனான விவேகமான புள்ளி, எப்போதுமே அடக்கி வாசிக்கக்கூடியவர். ஆனால், கடந்த வாரம் பிறந்தநாள் கொண்டாடியபோது போஸ்டர்ஸ், கொண்டாட்டம் என ரகளை பறந்ததாம். ‘அடுத்த நம்பிக்கையே…’ என ஆன்லைன் அலப்பறைகளுக்கும் குறைவில்லையாம். இவற்றையெல்லாம் பதிவாக்கி சின்ன தலைவியின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள் உள்ளடி உறவினர்கள். #விவகாரமான புள்ளியாவும் இருப்பார்போல!

கிசுகிசு

திடீர் ஆன்மிக அவதாரம் எடுத்திருக்கும் அம்மணி, சக்தியான ஆளுமைக்குச் சிக்கலைக் கொடுக்கிறார். சமீபத்தில் முதன்மையானவரே நேரடியாகப் போய் சந்திக்கிற அளவுக்கு, சக்தியான ஆளுமை செல்வாக்கு பெற்றிருப்பதால், அம்மணியை உள்ளே தூக்கிப்போடலாமா எனக் கேட்டதாம் போலீஸ். “வேண்டவே வேண்டாம்” எனக் குறுக்கே புகுந்து கும்பிட்டாராம் ஆளுமையின் வாரிசு. போலீஸ், விசாரணை எனப் போனால், அந்த அம்மணி அள்ளிவைக்கும் விஷயங்கள் தனக்கு எதிராக இருக்கும் என அஞ்சுகிறாராம் ஆளுமையின் வாரிசு. #அவருக்கும் பழசெல்லாம் கண்ணுல வந்துபோகுமால்லியா!?

கிசுகிசு

முதன்மையானவர் குறித்த செய்தித்துறையின் சமீபத்திய விளம்பரப் படம், கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஆளும் கட்சிக்கு நெருக்கமான நடிகர் நடித்திருக்கும் அந்த விளம்பரப் படம் கருத்தாகவும் டெக்னிக்கலாகவும் சரியில்லாமல் போக, இந்த விஷயத்தை வாரிசின் கவனத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள். அரசு விளம்பரங்கள் இனி வேறு கைக்கு மாறினாலும் ஆச்சர்யத்துக்கு இல்லை. #நம்ம க்ரியேட்டிவிட்டிக்கு என்னதான் ஆச்சு?!

கிசுகிசு

மகனை மேயர் பொறுப்புக்குக் கொண்டுவர பல ரூட்டிலும் காய்நகர்த்தி வருகிறார் கோட்டை நகரத்தின் மீசை மினிஸ்டர். ‘வாரிசை வளரவிட்டால் அன்பான அமைச்சருக்குச் சிக்கலாகிவிடும்’ என மீசைக்காரருக்கு எதிரானவர்கள் உள்ளடி வேலைகளைப் பார்க்க, முதன்மையானவருக்கு பலத்த யோசனை. இந்நிலையில், சமீபத்தில் முதன்மையானவருக்கு நெருக்கமான இல்லத்து ஆட்களைச் சந்தித்தாராம் மீசைக்காரரின் மகன். பதவி குறித்துக் கேட்கத்தான் வந்திருக்கிறார் என இல்லத்து ஆட்கள் நினைக்க, “அப்பா ஏதோ என்மீதான அக்கறையில் கேட்கிறார். ஆனால், எனக்கு மேயர் சீட் வேண்டாம்” என்றாராம் மகன். இல்லத்து ஆட்கள் அதிர்ச்சியாக, “முடிந்தால் அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி சீட் வாங்கிக் கொடுங்க” என்றாராம். # ‘அப்பிடியே ஷாக் ஆயிட்டோம்’ மொமன்ட்!