
ஒரு மாதக் காலம் நடைபெறும் `வாரணாசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தமிழ் குறித்து உரையாற்றியிருப்பது வரவேற்கத் தக்கது
``கொள்கை இருந்தால்தான் கட்சி; கட்சி இருந்தால்தான் ஆட்சி. கொள்கையைக் காப்பாற்ற எதையும் செய்யலாம், எதையும் இழக்கலாம். ஆனால், பதவியைக் காப்பாற்ற எதையும் செய்துவிட முடியாது!’’ - மு.க.ஸ்டாலின், முதலமைச்சர்.
``திறமையற்ற ஒரு பொம்மை முதலமைச்சர் தமிழ்நாட்டை ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்... இதுதான் திராவிட மாடல்!’’ - எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர்.

``மாநில சுயாட்சிக்கு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படக்கூடிய ஆளுநரை, `சிறப்பாகச் செயல்படுகிறார்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு அ.தி.மு.க-வுக்குச் சுயமரியாதை இல்லாமல் போய்விட்டது. பா.ஜ.க-விடம் முன்னதாகவே அ.தி.மு.க-வினர் அடிமைச் சாசனத்தை எழுதிக் கொடுத்துவிட்டனர்!’’ - கனிமொழி, தி.மு.க எம்.பி.
`` `சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்’ என்று வார்த்தை ஜாலம் காட்டும் முதலமைச்சர், ஆட்சிக்கு வந்தவுடன் ‘என் மகன் பல படங்களில் நடிப்பார், நாங்கள் பார்த்து மகிழ்வோம் மக்களை மறப்போம்’ என்று சொன்னாரா... இதுதான் இவர் சொல்லாததைச் செய்யும் லட்சணமா?’’ - கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்.

``ஒரு மாதக் காலம் நடைபெறும் `வாரணாசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி தமிழ் குறித்து உரையாற்றியிருப்பது வரவேற்கத் தக்கது. `உலகின் மூத்த மொழி தமிழ்’ எனப் புகழும் பிரதமர், தமிழுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. பிரதமரின் உதடு ஒன்று பேசுகிறது; உள்ளம் ஒன்று செய்கிறது!’’ - முத்தரசன், சி.பி.ஐ மாநிலச் செயலாளர்
`` `தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகமாக விற்கிறது’ என்கிறார் எடப்பாடி. ஆனால், குட்கா வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. போதைப்பொருள் விற்பவர்கள் அனைவரும் பா.ஜ.க-காரர்கள்தான்!’’ - ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க அமைப்புச் செயலாளர்.