அந்த மாநிலத்தின் துணைநிலை ஆளுநரான கிரண் பேடி, ‘இலவச அரிசிக்கான பணத்தை நேரடியாக மக்களிடம்தான் கொடுக்க வேண்டும்’ என்று உத்தரவு போட்டிருக்கிறார். ஆனால், ஆளும் காங்கிரஸ் அரசோ, ‘அரிசியாகத்தான் கொடுப்போம்’ என்று அடம்பிடிக் கிறது. இதை முன்வைத்து, ‘அரிசி கொள்முதலில் கிடைக்கும் கமிஷனுக்காக ஆளுநரின் திட்டத்தை எதிர்க்கிறார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள்’ என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இலவச அரிசி வழங்குவதற்காக ஒரு வருடத்துக்கு 160 கோடி ரூபாயை பட்ஜெட்டில் ஒதுக்கியது புதுச்சேரி மாநில அரசு. ஆனால், கிரண் பேடியோ, “அரசு ஊழியர்களுக்கும் வசதியானவர்களுக்கும் எதற்காக இலவச அரிசி? வறுமைக்கோட்டுக்குக்கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே அரிசி வழங்க வேண்டும். மேலும், அரிசியாக வழங்காமல், அரிசிக்குரிய பணத்தை மட்டும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்’’ என்றும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நாராயணசாமியின் அரசு பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதனால், கடந்த 39 மாதங்களில் 17 மாதங்கள் மட்டுமே பயனாளிகளுக்கு அரிசி வழங்கப்பட்டது. 5 மாதங்கள் பணமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள 17 மாதங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இப்படியான சூழலில்தான் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

‘‘இலவச அரிசி வழங்குவதை கவர்னர் தடுக்கிறார் என்றால், அதற்குரிய பணத்தை வழங்குங்கள். அரிசிக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 160 கோடி ரூபாய் எங்கே போனது?’’ என்று தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் எழுப்பிய கேள்விகளால் போர்க்களமானது சட்டப்பேரவை. தொடர்ந்து, ‘அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பணத்துக்கு பதில் அரிசி வழங்குவது’ என்று தீர்மானத்தை நிறைவேற்றி, அதன் நகலுடன் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கிரண் பேடியைச் சந்தித்தார்கள். ஆனால் கிரண் பேடி, பிடிவாதமாக அதை ரத்து செய்துவிட்டார். ஆத்திரமடைந்த முதல்வர் நாராயணசாமி வெளிநடப்பு செய்து, “இலவச அரிசி வழங்குவதை ஆளுநர் தடுக்கிறார்” என்றார் காட்டமாக.

உடனே, “ஏழைகளுக்கு அரிசி வழங்குவதை ஆளுநர் தடுக்கவில்லை. தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட வேண்டும். அரசாங்கம் நேரடியாக அரிசி வழங்கக்கூடாது. மக்களுக்கு அதற்கான பணத்தைத் தந்து, அவர்களே அரிசியை வாங்க வேண்டும். உடனடியாக பயனாளிகள் கணக்கில் அரிசிக்கான பணத்தை செலுத்துங்கள் என்றுதான் சொல்கிறோம்” என்று பதிலடி கொடுத்தார் கிரண் பேடி.

இந்த விவகாரம் தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்க மத்திய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் லட்சுமணசாமியிடம் பேசினோம். “புதுச்சேரியில், ‘மனிதர்கள் பயன்படுத்துவதற்கு தகுதியற்றது’ என்று ஆய்வுகள் கூறிய அரிசியைத்தான் மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். காரணம், கோடிக்கணக்கில் கிடைக்கும் கமிஷன் தொகை. புதுச்சேரி மற்றும் சண்டிகர் மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரிசிக்கான மானியமாக தலா 650 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்குக்கே அனுப்பிவிடுகிறது மத்திய அரசு. அப்படியிருக்கும்போது, புதுச்சேரி அரசும் மக்களுக்கு இலவச அரிசி வழங்குவது தேவையற்ற வேலை. அதற்குப் பதிலாக இலவச மளிகைப் பொருள்களை வழங்கலாம்” என்றார்.

“ஒரு கிலோ அரிசிக்கு இரண்டு ரூபாய் கமிஷனாகப் பெற்று ஊழல் செய்கிறார்கள். இதன்மூலம் வருடத்துக்கு 15 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள். பணமாக வழங்கினால் இந்த சம்பாத்தியம் போய்விடும் என்றுதான் அரிசி வழங்கத் துடிக்கிறார்கள். இந்த முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ-யில் மூன்று வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 99 சதவிகித மக்கள் அரிசிக்குப் பதில் பணத்தைத்தான் விரும்புகிறார்கள் என்கிறது சாமிநாதன் கமிட்டி” என்கிறார் புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன்.

இதற்கிடையில் இலவச அரிசி வழங்கும் விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக பா.ஜ.க கொடுத்த புகார் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்கும்படி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டிருக்கிறார் கவர்னர் கிரண் பேடி.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமியிடம் விளக்கம் கேட்டோம். “எங்கள் ஆட்சியை எதுவும் செய்ய முடியாததால், கவர்னர் கிரண் பேடியின் ஆட்கள் இப்படி அவதூறு கிளப்புகிறார்கள். ஆன்லைன் டெண்டர் மூலம்தான் அரிசி கொள்முதல் செய்கிறோம். அதில் எப்படி கமிஷன் பெற முடியும்? அரிசிக்குப் பதில் பணமாக வழங்கினால் குடும்பத் தலைவர்கள் செலவு செய்துவிடுவார்கள். மக்களுக்கு நேரடியாக அரிசி வழங்குவதுதான் எங்கள் நோக்கம். அரிசி டெண்டர் விடும் விவகாரத்தில் நான் தலையிடுவதே இல்லை. எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.