Published:Updated:

'சட்டமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை' - ஜி.கே.வாசன்

'சட்டமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை' - ஜி.கே.வாசன்
'சட்டமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை' - ஜி.கே.வாசன்

'சட்டமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை' - ஜி.கே.வாசன்

"ஆளும் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் சட்டமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை" என ஜி.கே.வாசன் நாகர்கோவிலில் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''மத்திய மாநில அரசுகளால் மீனவர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. விவசாயப் பிரச்னைகள் சுமுகமாகத் தீர்க்கப்படவில்லை. சசிகலாவின் மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது. அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைந்த பின்னரும் ஆட்சியில் குழப்பம் நீடிக்கிறது. ஆட்சியாளர்களின் உறுதித் தன்மை முழுமையாக உள்ளதா என்றால் அது கேள்விக்குறியாக உள்ளது. இரு அணிகள் ஒன்றாக இணைந்தாலும், மூன்றாவது அணி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆட்சி தொடர்ந்து நடக்குமா? நடக்காதா? என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகத்தை தீர்க்கும் வகையில் ஆட்சியாளர்கள் உள்ளனர். ஆளும் ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டால் சட்டமன்றத்தைக் கூட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய, மாநில அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு  துரோகம் செய்வதாக உள்ளது. ஆசை காட்டி மோசம் செய்தது போல, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம்பிக்கை கொடுத்து நீட் குழப்பம் மூலம் அவர்களை நோகடித்திருக்கிறார்கள். மாணவர்களின் வருங்கால கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறது இந்த அரசுகள். இது ஏற்புடையதல்ல' என்று அவர் தெரிவித்தார்.  

அடுத்த கட்டுரைக்கு