சம்பத்குமாரி, பொன்மலை.

இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு பாரத ரத்னா விருது தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. பி.ஜே.பி-க்கு வேறு வினையே வேண்டாம்போல இருக்கிறதே?

இலங்கையைச் சேர்ந்த தர்மபாலாவின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவாக தபால் தலையை, இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. அந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் கலந்து கொண்டுள்ளார்கள். அமைதியாக இருந்த இலங்கைத் தீவில், சிங்களர் தவிர மற்ற இனத்தவர் மீதும், புத்த மதத்தினர் தவிர மற்ற மதத்தவர் மீதும் கடுமையான காழ்ப்பு உணர்ச்சியை உருவாக்கி ரணகளம் ஆக்கக் காரணமானவர் இந்த தர்மபாலா.

அடுத்த மதக் கடவுள்களை அநாகரிகமாக விமர்சிக்கத் தொடங்கியவர் இவர்தான் என்று 'இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள்’ என்ற ஆய்வை நடத்திய குமாரி ஜெயவர்த்தனா எழுதி இருக்கிறார். அப்படிப்பட்டவரின் தபால் தலையை வெளியிடுகிறார்கள் என்றால், ராஜபக்ஷேவுக்கு பாரத ரத்னா தரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

'ப்ளாக் மணி பிரச்னையை வைத்து அருண் ஜெட்லி ப்ளாக் மெயில் பண்ணுகிறார்’ என்று ப.சிதம்பரம் சொல்கிறாரே?

யாரை ப்ளாக்மெயில் பண்ண முடியும்? ப்ளாக் மணி வைத்திருப்பவர்களைத்தானே? இதில் ப.சிதம்பரத்துக்கு ஏன் பதற்றம்?

மேலும் உச்ச நீதிமன்றம் உச்சந்தலையில் கொட்டிய பிறகுதான் மத்திய அரசு, கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை கொடுத்திருக்கிறது. எனவே, இங்கு எல்லோருமே சர்வ ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார்கள்.

எஸ்.பூவேந்த அரசு, சின்னத்தாராபுரம்.

ஏறத்தாழ ஐந்தாறு மொழிகளில் புலமை இருந்தும் ஜெயலலிதா ஏன் இலக்கிய உலகில் இறங்கவில்லை?

மொழி அறிவு மட்டுமல்ல, இலக்கிய ஆர்வமும் ஜெயலலிதாவுக்கு உண்டு. ஏராளமான புத்தகங்களைத் தனது தனி நூலகத்தில் ஜெயலலிதா வைத்துள்ளார். சினிமாவில் இருந்த காலத்தில் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதித் தந்துள்ளார். தொடர் கதைகள் எழுதி உள்ளார். 'எனக்குப் பிடித்தவை’ என்று அவர் தொடர் எழுதி இருக்கிறார். ஆனால், அவரது ஆர்வம் அதிகமாக நடிப்பில் இருந்ததால், இலக்கியத்தின் பக்கமாக அவர் திரும்பவில்லை என்று சொல்லலாம். ஜெயலலிதா தன்னிடம் என்ன மாதிரியான புத்தகங்களை எல்லாம் மேற்கோள் காட்டிப் பேசினார் என்பதை வலம்புரிஜான் ஒருமுறை சொன்னார். அந்த அளவுக்குப் புத்தக ஆர்வம் கொண்டவர் ஜெயலலிதா. மேடைகளில் அவர் சொல்லிவரும் குட்டிக் கதைகள் அதை வெளிப்படுத்துகிறதே!

நா.போத்திராசு, பள்ளிக்கரணை.

எதிரிக்கும் வாய்ப்பளித்து வெற்றி பெறுவதே வீரம் என்று ராமபிரான் செய்து காட்டினார். வீரம் பேசும் மோடி எதிர்க் கட்சி என்ற அங்கீகாரத்தைக்கூட வழங்காதது ஏன்?

எதிர்க் கட்சி அந்தஸ்தை வழங்குவதற்கான எண்ணிக்கையை காங்கிரஸ் கட்சி பெறவில்லை. இதுபோன்று எதிர்க் கட்சி அந்தஸ்து இல்லாமல் ஏற்கெனவே சில முறை நாடாளுமன்றம் இயங்கி உள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி இன்னமும் எதிர்க் கட்சியாக செயல்பட ஆரம்பிக்கவே இல்லை. சோனியா உடல்ரீதியாக செயல்பட முடியாமல் இருக்கிறார். எனவே, ராகுலிடம் தலைமைப் பதவியைத் தந்து காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் உற்சாகம் ஏற்படுத்தும் காரியத்தை சோனியா உடனடியாக செய்தால் மட்டுமே, அந்தக் கட்சியின் செல்வாக்கைத் தக்கவைக்க முடியும்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

முதல்வராக இல்லாத ஜெயலலிதாவின் படத்தை அரசு சார்ந்த எல்லா இடங்களிலும் முன்னிலைப்படுத்துவது சரியா?

இது தவறானது. விதிமுறை மீறல். ஜெயலலிதாவுக்குப் பயந்து இவர்கள் செய்யும் காரியம் சட்டத்தை அவமானப்படுத்துவது!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

'கத்தி’ படத்தின் மூலம் தி.மு.க-வை விஜய் சீண்டியது சரியா?

2ஜி-யைப் பற்றி வலியப் பேசி யாரையோ திருப்திப்படுத்த விஜய் வட்டாரம் நினைத்ததாகத் தெரிகிறது. எந்த குளிர்பானக் கம்பெனிக்கு எதிராக 'கத்தி’யில் குரல் கொடுத்தாரோ, அதே கம்பெனியின் பிராண்ட் அம்பாஸிடராகப் பல ஆண்டுகள் இருந்தவர்தான் விஜய். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்குள் மீண்டும் ஒப்பந்தம் வரும் சூழ்நிலை இருந்தது. ஆனால் 'தொகை’ கட்டுப்படி ஆகவில்லையாம். அது எல்லாம் சேர்த்துத்தான் சமூக அக்கறைக் குரலாக ஒலித்துள்ளது.

2001-ல் தி.மு.க. ஆட்சியில் வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை ஏலத்தில் எடுத்து மால் கட்டுவதற்கு முயற்சி செய்தார் விஜய். அந்த இடத்தில் பறக்கும் ரயில் பாதை வருகிறது என்பதால் மால் கட்டுவதற்கான அனுமதியை சி.எம்.டி.ஏ தரவில்லை. அதற்குள் ஆட்சி மாற்றம் நடந்தது. ஜெயலலிதா முதல்வர் ஆனார். தனக்கு மாற்று இடம் வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்தார். அவர் வாங்கிய இடத்துக்கு அருகில் அரசுக்கு சொந்தமான திருமண மண்டபம் இருந்தது. அந்த இடத்தை மாற்றாகத் தாருங்கள் என்று விஜய் கேட்டார். அதற்கு தி.மு.க வீட்டுவசதி வாரிய தொழிற்சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் விஷயத்தைக் கிடப்பில் போட்டது அ.தி.மு.க அரசு. அடுத்து தி.மு.க ஆட்சி. மாற்று இடத்துக்காக மறுபடியும் கருணாநிதியிடம் வந்தார்கள். மாற்று இடம் தரப்பட்டது. இதனை விஜய்யும் மறந்திருக்க மாட்டார்.

கே.ஏழுமலை, தேனாம்பேட்டை.

சுதேசி பேசும் ஆர்.எஸ்.எஸ் குழுமத்தில் இருந்து வந்த மோடி, வெளிநாட்டுப் பொருட்களுக்குத் தடை விதிப்பாரா?

அதெல்லாம் அரசியல் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னால் பேசியது. இப்போது பேச மாட்டார்கள்.

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் பற்றி?

'கேமரா அழகன்’ அசோக்குமார். தனது படங்களுக்கு மகுடம் சூட்டியவை அசோக்குமாரின் ஒளிப்பதிவு என்பதை மகேந்திரன் மறக்க மாட்டார். ஓர் இயக்குநருக்கு மூன்றாவது கண்ணாக இருக்க வேண்டியது ஒளிப்பதிவாளர். அதனை உன்னதமாகச் செய்து காட்டியவர். 'உதிரிப்பூக்கள்’, 'ஜானி’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ போன்ற படங்களைப் பார்த்தால், அசோக்குமாரின் அழகியல் தெரியும். 'அன்று பெய்த மழையில்’ பார்க்கும்போது பார்வையாளனின் தோளில் மழை விழுவதை உணர முடியும். 'மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட..’ ஒலிக்கும்போதெல்லாம் அசோக்குமார் உயிர் வலம் வரத்தான் செய்யும்.

இறுதிக் காலத்தில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். உதவிக்கரம் கேட்டு சினிமாக்காரர்களை நோக்கி வேண்டினார். யார் காதில் அது விழுந்தது, யார் உதவினார்கள் என்பது அவரவர் மனச்சாட்சிக்குத்தான் தெரியும்.